உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE
Showing posts with label தெரிந்துகொள்ளுங்கள். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்ளுங்கள். Show all posts

Monday, 27 February 2012

உங்கள் புதிய லேப்டாப்பில் இருந்து Recovery DVD ஐ உருவாக்குவது எப்படி ?



நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கிவிட்டீர்களா ? மறக்காமல் உங்கள் லேப்டாப் Restore Recovery DVD ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்...


நீங்கள் புதிதாக வாங்கி இருக்கும் லேப்டாப்பில் Windows XP, Windows Vista, Windows 7 என ஏதாவது ஒரு OS அதாவது Operating System இன்ஸ்டால் செய்து இருக்கும்.

அந்த ஆபரேட்டிங் சிஸ்டாம் திடீரென வேலை செய்யாமல் போய் எரர் ஆகிவிட்டதன் காரணமாக உங்கள் லேப்டாப் திறக்க முடியாமல் போய்விட்டால் அதனை சரி செய்ய உங்களுக்கு அந்த லேப்டாப்பில் எற்கனவே இன்ஸ்டால் செய்து உள்ள ஆபரேடிங் சிஸ்டத்தை போல ஒரு Restore Recovery DVD இருந்தால்தான் அதனை சரி செய்ய முடியும். இல்லை என்றால் பிரச்சனைதான்.

முன்பெல்லாம் நாம் எந்த பிராண்ட் லேப்டாப் வாங்கினாலும் அந்த லேப்டாப் பேக்கில் ஒரு Drivers CD மற்றும் Windows Recovery CD இரண்டும் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி வருவதில்லை. Recovery File நம் லேப்டாப்பிலேயே தனியாக ஒரு டிரைவராக காப்பி செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. அது தேவை என்றால் நாம் தான் அதனை ஒரு ரிகவரி Cdயாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சரி அந்த Restores Recovery DVD ஐ நாம் எப்படி நம் லேப்டாப்பில் இருந்தே உருவாக்கிக்கொள்வது என்பதை நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.


இந்த பாடத்தை PDF பைலாக கீழே உள்ள லிங்கின் மூலம் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்



அன்புடன்: கான்


Friday, 3 February 2012

உங்கள் கம்ப்யூட்டர் Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ?

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !






உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் RPM Speed என்ன என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.....

Hard Disk ல் 4200 RPM, 5200 RPM மற்றும் 7200 RPM என பல வகை உள்ளது.

இதில் 4200 மற்றும் 5200 RPM பழைய கம்ப்யூட்டர் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.  7200 RPM இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

சரி இந்த RPM என்றால் என்ன ?


Revolutions per minute

ஒரு நிமிடத்தில் ஏற்படும் சுழற்ச்சி....

அதாவது Clock வடிவத்தில் இந்த ஹார் டிஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்றுகிறது என்பதை கணக்கிடுவதை தான் RPM என குறிப்பிடுகிறார்கள்.

5200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 5200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது.

7200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 7200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது என அர்த்தம்.

ஆனால் நீங்கள் 5200 RPM Hard Disk ன் மூலம் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 10000 முறை சுழல்கிறது.

அதுபோல 7200 RPM Hard Disk ன் மூலம் நீங்கள் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 15000 முறை சுழல்கிறது.

( அதாவது சாதாரணமாக இயங்கும் வேகத்தை விட Data Transfer வேகம் இரு மடங்காக மாறுகிறது)

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் வேகம் 5200 RPM அல்லது 7200 RPM என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?
 

உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk ன் வேகம் என்ன என்பதை உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் மாடல் நம்பரை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

முதலில் உங்கள் ஹார் டிஸ்க்கின் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Desktop ல் உள்ள My Computer ஐ மவுசால் செலெக்ட் செய்து வலது பக்கம் கிளிக் செய்து Properties செல்லுங்கள். அதில் Hardware தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் Device Manager பட்டனை கிளிக் செய்யுங்கள்.

2012-02-02_103718.jpg



Device Manager ல் Disk Drive என்பதில் இடது பக்கம் உள்ள + ஐ கிளிக் செய்தால் உங்கள் HardDisk ன் மாடல் நம்பர் என்ன என்பதை நிங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாடல் நம்பரை வைத்து நாம் எப்படி RPM ஐ கண்டு பிடிப்படி ?

என்னுடைய Hard Disk மாடல் நம்பர்
WD3200AAKS

இதில்

WD - என்பது ஹார்டிஸ்க் ப்ராண்ட்
320 - என்பது அதன் அளவு (Capacity)

0AAKS - என்பது WD பிராண்டை பொருத்தவரை 16 MB Cache Power என்பதை குறிப்பிடுகிறது.

இதற்கு பதிலாக

0AVVS - என இருந்தால் 8 MB Cache Power என அர்த்தம்.

WD Hard Disk List ல் இந்த மாடல் நம்பர் 7200 RPM Speed என குறிப்பிடப்படுகிறது.

WD3200AAKS


எனவே இந்த மாடல் நம்பரை நாம் இண்டெர் நெட்டில் Google Search ல் டைப் செய்து RPM என்ன என்பதை டைப் செய்து தேடினால் இதன் RPM நமக்கு தெரிந்துவிடும்.

What is the RPM for model No. WD3200AAKS ?

என Google Search ல் நான் டைப் செய்ததும் எனக்கு கிடைத்த ரிசல்ட் இது.

2012-02-02_143730.jpg








இதுபோல நீங்களும் உங்கள் Hard Disk இன் மாடல் நம்பரை கொடுத்து கூகிள் மூலமாக அதன் RPM என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நன்றி ! அன்புடன்: கான்

Sunday, 13 June 2010

விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் Audio CD ல் உள்ள பாடல்களை mp3 பாடல்களாக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் காப்பி செய்வது எப்படி ?



நம் எல்லோரிடமும் Audio CD-ல் பாடல்கள் இருக்கும். அதில் உள்ள பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைக்க நினைப்போம். அதனை காப்பி செய்வதற்க்கு நமக்கு தெரியாவிட்டாலும் மற்றவரிடம் கேட்டு அந்த பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய முயற்ச்சி செய்வோம்.

ஆனால் சிலரிடம் அதை பற்றி கேட்க்கும்போது ஆடியோ சி.டி.யை mp3 யாக மாற்றவேண்டுமென்றால் அதற்க்கு தனியாக ஒரு மென்பொருள் (Software) வேண்டும் என்று சொல்வார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் உங்கள் ஆடியோ சி.டியை mp3 யாக மாற்ற தனியாக ஒரு சாப்ட்வேர் தேவை இல்லை.

உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரிலேயே அதனை செய்யலாம்.

அது எப்படி ?

இங்கு கீழே கொடுக்கப்பட்ட முறைப்படி செய்துபாருங்கள்:

உங்கள் Windows Media Player பழைய மாடலாக அதாவது Old Version 8 ஆக இருந்தால் அதனை முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலம் Version 11 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.



பயன்படுத்தும் முறை:









































































































































































































































































































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்
கான்



Monday, 17 May 2010

யூ.எஸ்.பி பென் டிரைவ் ( USB Pen Drive) என்றால் என்ன ?




முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


அன்புடன்: கான்

Monday, 26 April 2010

மைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன ?

கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு

உங்கள் கம்ப்யூட்டரில் Start > All Program ஐ நீங்கள் கிளிக் செய்ததும் அதில் Microsoft Office என்று கீழ் காணும் படத்தில் உள்ளதுபோல் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதுதான் நீங்கள் பயன்படுத்தும் Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உள் அடக்கிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்பதாகும்.





Microsoft Word



இந்த மைக்ரோசாப் ஆபீஸ் என்பதில் Microsoft Word மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான Personal Letters, Official Letters, Memo போன்றவற்றை டைப் செய்து பிரின் எடுத்துக்கொள்ளலாம்.

Microsoft Excel



இந்த Microsoft Excel என்பதில் Invoice, Tables, Time Sheet மற்றும் சிறிய வரவு செலவு விபரங்களை டைப் செய்து சேமித்துக் கொள்ளலாம்.


Microsoft Power Point



இந்த Microsoft Power Point ன் உதவியோடு எளிதாக உங்களுக்கு தேவையால பேனர்களை நீங்களே உருவாக்கலாம்.
உதாரணத்திற்க்கு உங்களுக்கு ஒரு A4, அல்லது A3 சைஸ் பேப்பரில் Handle with Care, Drinking Water, No Smoking, Prayer Room போன்ற வாசங்களை உடனே நீங்கள் டைப் செய்து பிரிண்ட் எடுத்து அதனை எந்த இடத்திலாவது ஒட்ட வேண்டுமென்றால் அதற்க்கு இந்த மைக்ரோசாப் பவர்பாய்ண்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

உதாரணம்



Microsoft Access



அடுத்து Microsoft Access ன் உதவியோடு ஒரு சிறு தொழில் செய்பவருக்கு நாம் ஒரு Small Accounting Package ஐ உருவாக்கி கொடுக்கலாம். மேலும் இந்த மைக்ரோ சாப் அக்ஸசில் Inventory Record, Library Book Record, Daily Sales Record போன்றவற்றை உருவாக்கி பயன்படுத்தலாம்.

முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்

அன்புடன்: கான்

Popular Posts