உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 11 January 2011

போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட Animated GIF என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.உடனே இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு குறிப்பிட்டதுபோல் Desktop செலெக்ட் செய்து நீங்கள் அனிமேசன் செய்யப்போகும் போட்டோக்கள் உள்ள போல்டரை (நம்பர் 1) செலெக்ட் செய்துகொள்ளுங்கள். உடனே உங்கள் போல்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கீழே நம்பர் 2 குறிப்பிட்டதுபோல் வந்துவிடும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் உங்கள் மவுஸ் மூலம் செலெக்ட் செய்துகொண்டு நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் தூக்கி போடுங்கள்.நீங்கள் மவுஸ் மூலம் தூக்கிப்போட்டவுடன் கீழே காண்பதுபோல் நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் போட்டோக்கள் அனைத்தும் வந்துவிடும். பிறகு நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் அனிமேசன் எந்த வடிவத்தில் உருவாக வேண்டும் என்பதை காட்டும். நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் சேர்த்துள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மாறும் அனிமேசன் வேகத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த போட்டோக்கள் அனைத்தும் 10 செகெண்டுக்கு ஒரு முறை மாறும் வகையில் டைம் செட்டப் செய்யப்பட்டுள்ளது.உங்கள் போட்டோக்கள் அனிமேசனில் மாறும் வேகத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேண்டும் என்றால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் 10 செகெண்டுக்கு பதிலாக 5 அல்லது 15 அல்லது 20 செகெண்ட் என எத்தனை செகெண்ட் தேவையோ அதனை டைப் செய்து நம்பர் 3 ஐ கிளிக் செய்து OK செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் இணைத்த போட்டோக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சிறிய அளவில் அனிமேசன் சிலேடு உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.பிறகு இங்கு குறிப்பிட நம்பர் 1 என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவை Width X Height டைப் செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளுங்கள்.
உங்கள் அனிமேசன் சிலேடுக்கு வேறு விதமான அனிமேசன் வடிவங்கள் தேவைப்பட்டால் இங்கு கீழே குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து வேறு விதமான அனிமேசன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.
இறுதியாக இங்கு கீழே காணும் நம்பர் 1 என்ற இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 என்ற இடத்தில் உங்கள் அனிமேசன் சிலேடுக்கு பெயர் கொடுத்து நம்பர் 3 என்ற இடத்தை கிளிக் செய்து உங்கள் அனிமேசன் சிலேடை சேமித்துக்கொள்ளுங்கள்.இப்பொழுது நீங்கள் போட்டோஸ்கேப் மூலம் உருவாக்கிய ஒரு அனிமேசன் தயாராகிவிட்டது.

இந்த முறையில் நான் உருவாக்கிய அனிமேசனை கீழ் காணும் லிங்கில் பார்க்கலாம்..

இரண்டு போட்டோக்கள் மட்டுமே பயன்படுத்தி உருவாக்கிய அனிமேசன்கள் இவை

http://tamilpctraining.blogspot.com/2011/01/50.html
முயற்ச்சி செய்து பாருங்கள்.... வெற்றி நிச்சயம்.....

நன்றி ! அன்புடன்: கான்

29 comments:

 1. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இதைத்தான் நானும் பல இடங்களில் தேடி தேடி அலைந்தேன் நண்பரே.. இப்போ உங்கள் மூலமாக மிகவும் புரியும் படியாக எளிமையாக கற்று கொண்டேன்.. மிக்க நன்றி

  ReplyDelete
 3. மிக்க நன்றி கான்

  தொடரட்டும் உங்கள் சேவை
  முருகன்
  மும்பை

  ReplyDelete
 4. நண்பர் கான் அவர்களே...!
  உங்கள் சேவை தொடரட்டும்...!
  நன்றி ...!

  ReplyDelete
 5. இவ்வளவு சமாசாரங்கள் உள்ளதா..! எவ்வளவு அருமையாக சிறு குழந்தைக்கும் புரியும் படி கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி..

  ReplyDelete
 6. thiru Khan,
  am verry happy to say, ur site and infomation are verry use full for me. plz i wank to learn "hacking the server" are hacking subject so plz inform easy understand book name in tamil / english. am expect ur valuable answer.
  thanking you
  ur's
  hari J.

  ReplyDelete
 7. very nice sirrrrrrrr

  ReplyDelete
 8. thanks you some your doing doing great job sir

  ReplyDelete
 9. thanku very much

  ReplyDelete
 10. அனிமேசன் செய்து பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி..!!நம் கற்பனை வடிவம் பெறும்போது வரும் மகிழ்ச்சி அலாதியானது.அதற்கு உதவிய தங்களுக்கு மிக்க நன்றி..!!

  ReplyDelete
 11. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. தெரியாததை புரியவைத்தமைக்கு நனறி

  ReplyDelete
 14. Super Khan i just tried thats very cool

  ReplyDelete
 15. நம் கற்பனை வடிவம் பெறும்போது வரும் மகிழ்ச்சி அலாதியானது.அதற்கு உதவிய தங்களுக்கு மிக்க நன்றி அன்பு கான் அவர்களே...!
  உங்கள் சேவை தொடரட்டும்

  ReplyDelete
 16. name;santhosh
  kancheepuram
  os;win7
  how to draw a 3d objact in photoshop

  ReplyDelete
 17. ungal eedu inayarra sevakalukku migavum nanri.
  ungal sevaikal thodara en vaazhthukkal

  ReplyDelete
 18. தொடரட்டும் உங்கள் சேவை

  ReplyDelete
 19. செய்து பார்தேன் திருப்தியாக இருந்தது.நன்றிகள் பல கோடி

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அழைக்கும் மிக மிக நன்றிகள் ... .mr .கான் நீங்கள் மேலும் நல்ல வளர எங்கள் வாழ்த்துக்கள் .......ஜி பேஸ் புக் ல அதை போஸ்ட் பண்ணுக வெறும் போட்டோ மற்றும் தன் வருது ......அதுக்கு வேற என்ன வலி ..........ரியாஸ்k718@ ஜிமெயில்.காம்

  ReplyDelete
 21. ungal sevaygal thodara yen valthukkal. yennakku adobe photoshop cs3 enayathilirunthu elavasamaga yeppadi download seivathu yendru sollungalen pls

  ReplyDelete
 22. எந்த மென்பொருளாக இருந்தாலும் நீங்கள் utorrent மூலம் டவுண்லோடு செய்யலாம். utorrent ஐ எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய தகவல்களை என்னுடைய இந்த தளத்தில் நான் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்