உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Thursday 13 May 2010

மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவில் இனைந்துவிட்டீர்களா ?

கணினி மென்பொருள்களின் துறையில் புதுமைகளை பல செய்துகொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்ப்போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் ஒர்க் ஸ்பேஸ் (Microsoft Office Live WorkSpace) என்று ஒரு புதிய இனைய தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் உங்களுடைய மைக்ரோசாப்ட் ஆபீஸ் டாக்குமெண்டுகளின் ஆன் லைன் சேமிப்புக்காக இவர்கள் உங்களுக்கு ஒதுக்கிதரும் இட ஒதுக்கீட்டின் அளவு ( Workspace) எவ்வளவு தெரியுமா ? மொத்தமாக 5 GB ஆகும். ( மொத்தம் 5120 MB). இந்த 5 GB யின் உதவியோடு நீங்கள் உங்களுக்கு தேவையான உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Word, Excel, Powerpoint, போன்ற டாக்குமெண்டுகளை இதில் சேமிப்பது மட்டுமல்லாமல் Gif, Jpg, png டைப் போட்டோக்கள் போன்றவற்றையும் இதில் சேமித்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இண்டெர்நெட் இனைப்பு இருந்தால் போதும் உங்கள் ஆன்லைன் சேமிப்பில் உள்ள இந்த பைல்களை இந்த இனைய தளத்திலேயே ஓப்பன் செய்து பார்த்துக்கொள்ளலாம். உங்கள் டாக்குமெண்டுகளை ஓப்பன் செய்து பார்க்க உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன்ஸ்டால் செய்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதில் இனைந்து உங்களுக்கென்று 5 GB இட ஒதுக்கீட்டை பெற இங்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் என்பதால் இதில் இனைந்துகொள்ள உங்களுக்கு தயக்கம் தேவையில்லை.

http://workspace.office.live.com/

இதில் இனைந்துகொள்வது எப்படி ?

Step 1

இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்ததும் கீழ் கான்பதுபொல் இண்டெர்நெட்டில் மைக்ரோசாப்ட் இணைய தளம் ஓப்பன் ஆகும். இதில் நான் குறிப்பிட்ட Get Started Now என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

Step 2

உடனே உங்களுக்கு அடுத்ததாக இங்கு கீழ் காணும் பகுதி திறந்துகொள்ளும். இதில் உங்களுடைய சரியான ஈமெயில் முகவரியை கொடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


Step 3


அடுத்ததாக வரும் இந்த பகுதியில்

1) உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்துகொள்ளுங்கள்
2) நீங்கள் டைப் செய்த பாஸ்வெர்டை திரும்பவும் டைப் செய்யுங்கள்
3) உங்கள் பெயரின் முதல் பகுதியை டைப் செய்யுங்கள்
4) உங்கள் பெயரின் இரண்டாம் பகுதியை டைப் செய்யுங்கள்
5) நீங்கள் தற்ப்போது வசிக்கும் நாட்டின் பெயரை தேர்ந்தெடுங்கள்
6) உங்களுக்கு விருப்பமான கேள்வியை தேர்ந்தெடுங்கள்
7) உங்கள் கேள்விக்கு நீங்களே ஒரு பதிலை டைப் செய்யுங்கள்
(இந்த பதில் நீங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அதை பெற மறுபடியும் தேவைப்படும்)
8) இங்கு நீங்கள் டைப் செய்வது எதை ? இதன் மேலே உள்ள கட்டத்தில் சில ஆங்கில எழுத்துக்கள் வருவதை நீங்கள் பார்க்கலாம். அதனை சரியாக பார்த்து இங்கு டைப் செய்யுங்கள்.




Step 4


அடுத்ததாக Finish ஐ அழுத்துங்கள். அவ்வளவுதான்.


நீங்கள் மேற்சொன்ன முறைப்படி விபரங்களை சரியாக கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக்கொண்டதற்க்கு அடையாளமாக உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளதாக உங்களுக்கு ஒரு பகுதி ஓப்பன் ஆகும்.
இனி நீங்கள் கொடுத்த ஈமெயில் முகவரியில் போய் பாருங்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஒரு மெயில் வந்திருக்கும். அதனை ஓப்பன் செய்து கீழே குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் ஆன்லைன் அக்கவுண்ட் ஆக்டிவ் ஆக ஆரம்பித்துவிரும்.




நீங்கள் New Document ஐ உருவாக்க அதனை கிளிக் செய்யும்பொழுது சில அப்டேசன் தேவை என்று மெசேஜ் வரும். அதனை Accept செய்வதாக Run என்பதை அழுத்து அதனையும் அப்டேட் செய்துகொள்ளுங்கள்.


இனி நீங்கள் 5 GB ஆன் லைன் இடத்தோடு (5 GB On line Space ) மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளை பயன் படுத்தலாம்.


1) New ( புதிய டாக்குமெண்டுகளை உருவாக்க)
2) Add ( உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டாக்குமெண்டுகளை சேர்க்க)
3) Delete ( சேர்த்த டாக்குமெண்ட் தேவை இல்லை என்றால் அழிக்க)

4) Sign Out ( ஆன்லைன் மைக்ரோசாப்ட் ஆபீஸில் இருந்து வெளியேற)


பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.

அன்புடன் : கான்