உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 15 November 2011

புதிதாக லேப்டாப் வாங்குபவருக்கு வரும் பிரச்சனையும் அதன் தீர்வும்....பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !

நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கும்பொழுது உங்கள் லேப்டாப் கீ போர்டில் மேலே உள்ள நம்பர்களில்  2 என்ற பட்டனுடன் சேர்ந்துள்ள @ என்ற பட்டனை அழுத்தி @ என்ற குறியீடை நீங்கள் டைப் செய்யும்பொழுது அந்த @ க்கு பதிலாக
L பட்டனுக்கு அருகிள் உள்ள " என்ற குறியீடு வருகிறதா ? இதை சரி செய்வது எப்படி ?

என் லேப்டாப்பில் நான் என் ஈமெயில் முகவரியை டைப் செய்யும்பொழுது Shift + 2 பட்டனை கிளிக் செய்து @ என்ற குறியீடை நான் டைப் செய்ய முயற்ச்சி செய்த பொழுது இங்கு காண்பதுபோல் " என்ற குறியீடுதான் வந்தது. இதனை நான் எப்படி சரிசெய்தேன் என இந்த பாடத்தில் சொல்லி இருக்கிறேன். இந்த பிரச்சனை உங்கள் லேப்டாப்பிலோ அல்லது உங்கள் நண்பர்கள் லேப்டாப்பிலோ இருந்தால் இதுபோல் நீங்களும் இதனை சரி செய்துகொள்ளலாம்..

1) முதலில் Start > Control Panel செல்லுங்கள்
2) அடுத்து Large Icon செலெக்ட் செய்து Region and Language என்பதை கிளிக்  செய்யுங்கள்3) இதில் Format ல் United Kingdom என்று இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.4) இதனை ஓப்பன் செய்து United State என்பதை செலெக்ட் செய்யுங்கள்.

5) மாற்றிய பிறகு Apply பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
6) அடுத்ததாக Keyboard and Language என்ற ஆப்சனில் உள்ள Change Keyboards என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

7)  இந்த ஆப்சனிலும் United Kingdom என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
8) இதில் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.
9) இதில் United State என்று குறிப்பிட்ட இடத்தில் உள்ள United State International & US என்ற இரண்டு இடத்தையும் டிக் செய்து ok செய்து கொள்ளுங்கள்.

10) உடனே United State Option இதுபோல் வந்துவிடும். இதனை மவுசால் செலெக்ட் செய்துகொண்டு அருகில் உள்ள Move Up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.11)  இப்பொழுது மேலே Default Input Language என்ற இடத்தில் உள்ள United Kingdom என்று இருந்த இடத்தை ஓப்பன் செய்து  English (United State) - US என மாற்றிக்கொண்டு Apply செய்து ok பட்டனை கிளிக் செய்து இந்த தட்டை மூடிவிடுங்கள். Region and Language என்ற தட்டையும் ok செய்து மூடி விடுங்கள்.
12) இனி மறுபடியும் Region and Language Settings ஐ ஓப்பன் செய்து Change Keyboard Language என்ற ஆப்சனை திறந்துகொள்ளுங்கள். இப்பொழுது இந்த தட்டில் Default Input Language English (United State) US என்று வந்திருக்கும்.

சரி இனி கீழே உள்ள United Kingdom என்ற இடத்தை கிளிக் செய்து Remove என்ற பட்டனை அழுத்தி இந்த United Kingdom என்ற ஆப்சனை எடுத்துவிடுங்கள்.13) இனி ok பட்டனை அழுத்தி இந்த தட்டையும் மூடிவிடுங்கள்.இப்பொழுது நீங்கள் டைப் செய்து பாருங்கள்

உங்கள் கீபோர்டில் @ என்ற பட்டனை அழுத்தும்பொழுது சரியாக @ என்று டைப் ஆகும்.நன்றி ! அன்புடன்: கான்


Tuesday, 8 November 2011

உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி ?
பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நாம் ஆபீஸில் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான பைல்கள் மற்றும் நாம் காப்பி செய்து பயன்படுத்தும் ஆடியோ வீடியோ மற்றும் போட்டோக்கள் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்த முடியாத வகையில் பாஸ்வேர்டு கொடுத்து பூட்டி வைக்க எத்தனையோ மென்பொருள் இன்றைய காலத்தில் வந்துவிட்டது. இதில் சிறந்த மென்பொருள்கள் நமக்கு தேவை என்றால் பணம் கொடுத்து வாங்கினால்தான் அதனை முழுமையாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று உள்ளது. மேலும் என்னதான் கம்ப்யூட்டரில் நாம் பாஸ்வேர்டு போட்டு நம் பைல்களை மறைத்து வைத்தாலும் சில முக்கிய பைல்களை CD, DVD அல்லது Pen Drive ல் காப்பி செய்யும்பொழுது அது மற்றவர் கையில் கிடைத்தால் அதனை அவர்கள் எளிதில் திறந்து பார்த்துவிட முடியும். இதற்க்கு தீர்வுதான் என்ன ?

உங்களுக்காகவே ஒரு சிறந்த இலவச மென்பொருள் வந்துவிட்டது. இதுதான் TrueCrypt என்ற மென்பொருள். இதனை http://www.truecrypt.org/ என்ற தளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது CD, DVD மற்றும் Pen Drive போன்றவற்றில் தாமதம் இல்லாமல் பைல்களை காப்பி செய்து எளிதாக பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி என்ற விளக்கத்தை இந்த PDF பைல் மூலம் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

How To Install and Use TrueCrypt- நன்றி ! அன்புடன்: கான்