உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Thursday, 29 April 2010

இலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் வேண்டுமா ?


இந்த இலவச மென்பொருளை இங்கே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்யுங்கள்

சுட்டி----------

Monday, 26 April 2010

மைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன ?

கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு

உங்கள் கம்ப்யூட்டரில் Start > All Program ஐ நீங்கள் கிளிக் செய்ததும் அதில் Microsoft Office என்று கீழ் காணும் படத்தில் உள்ளதுபோல் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதுதான் நீங்கள் பயன்படுத்தும் Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உள் அடக்கிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்பதாகும்.

Microsoft Wordஇந்த மைக்ரோசாப் ஆபீஸ் என்பதில் Microsoft Word மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான Personal Letters, Official Letters, Memo போன்றவற்றை டைப் செய்து பிரின் எடுத்துக்கொள்ளலாம்.

Microsoft Excelஇந்த Microsoft Excel என்பதில் Invoice, Tables, Time Sheet மற்றும் சிறிய வரவு செலவு விபரங்களை டைப் செய்து சேமித்துக் கொள்ளலாம்.


Microsoft Power Pointஇந்த Microsoft Power Point ன் உதவியோடு எளிதாக உங்களுக்கு தேவையால பேனர்களை நீங்களே உருவாக்கலாம்.
உதாரணத்திற்க்கு உங்களுக்கு ஒரு A4, அல்லது A3 சைஸ் பேப்பரில் Handle with Care, Drinking Water, No Smoking, Prayer Room போன்ற வாசங்களை உடனே நீங்கள் டைப் செய்து பிரிண்ட் எடுத்து அதனை எந்த இடத்திலாவது ஒட்ட வேண்டுமென்றால் அதற்க்கு இந்த மைக்ரோசாப் பவர்பாய்ண்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

உதாரணம்Microsoft Accessஅடுத்து Microsoft Access ன் உதவியோடு ஒரு சிறு தொழில் செய்பவருக்கு நாம் ஒரு Small Accounting Package ஐ உருவாக்கி கொடுக்கலாம். மேலும் இந்த மைக்ரோ சாப் அக்ஸசில் Inventory Record, Library Book Record, Daily Sales Record போன்றவற்றை உருவாக்கி பயன்படுத்தலாம்.

முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்

அன்புடன்: கான்

கம்ப்யூட்டரை பயன்படுத்த பயப்படவேண்டாம் !


கம்ப்யூட்டரை நீங்கள் இப்பொழுது சிறிது காலமாகத்தான் பயன்படுத்த தொடங்கி இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் கம்ப்யூட்டரில் சில விசயங்களை தெரிந்துகொள்வதும் மனதில் அதை பதியவைப்பதும் ஒன்னும் சிரமமான காரியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்த பழகிவிடுகிறது அப்படி இருக்கும்போது நமக்கு ஏன் முடியாது. முதலில் நம்பிக்கை வையுங்கள்.

மேலும் இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடித்தவரின் பெயர் பில்கேட்ஸ். இதை நீங்கள் கேள்விப்பட்டும் இருக்கலாம் கேள்வி படாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேரை இவர் கண்டுபிடித்ததால் தான் உலக பணக்காரர் ஆகிவிட்டார். ஏன் தெரியுமா? இவர் கண்டுபிடித்த இந்த சாப்ட்வேரின் உதவியால் இன்று ஒரு சின்ன குழந்தைகூட கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்பதால்தான். இவ்வளவு எளிய முறையில் அவர்கண்டுபிடித்த பிறகும் நாம் அதைப் பழக சிரமப்பட்டோம் என்றால் அவர் இவ்வளவு புகழ் அடைந்ததற்க்கு அர்த்தமே இல்லை. இதை நீங்கள் மனதில் கொண்டால் போதும் கூடிய சீக்கிறம் நீங்கள் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வது மட்டுமல்ல கம்ப்யூட்டர் பற்றிய சில விளக்கங்களை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவிற்க்கும் தேற்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

முக்கியமாக கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்துபவருக்கு மனதில் ஏற்ப்படும் தயக்கம் என்னவென்றால் நாம் ஏதாவது செய்யப்போக அதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரில் உள்ள சில முக்கியமான பைல்கள் மற்றும் ப்ரோகிராம்கள் அழிந்துவிடுமோ என்ற பயம்தான்.

நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதில் விபரம் தெரியாத உங்களால் எந்த ஒரு பைலும் அழிந்துவிடாது. எந்த ஒரு ப்ரோக்ராமும் கானாமல் போய்விடாது. ஏனென்றால் விபரம் தெரியாதவர் தவறுதலாக அழித்துவிடும் அளவுக்கு கம்ப்யூட்டர் ஒன்றும் பாதுகாப்பு இல்லாதவகையில் உருவாக்கப்பட்டது அல்ல.

நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலை உங்கள் மவுசால் தொடுகிறீர்கள் என்றால் அது உடனே அழிந்துவிடாது. அதை தொட்டபிறகு நீங்கள் கீ போர்டில் Delete என்ற பட்டனை தொடவேண்டும். அப்பொழுதும் அது அழிந்துவிடாது.

அதன் பிறகு Are you sure you want to send ‘sheet’ to the Recycle Bin? என்ற கேள்வியை கேட்க்கும். இதன் விளக்கம் என்னவென்றால் இந்த பைலை நிச்சயமாக குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோகத்தான் வேண்டுமா ? என்று கம்ப்யூட்டர் உங்களை கேட்க்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் Yes என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோய்விடும் No என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை அழிக்காமல் விட்டு விடும். சரி நீங்கள் இப்பொழுதும் தவறுதலாக Yes என்ற பட்டனையே தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பைல் எங்கு போகும். உங்கள் கம்ப்யூடரை திறந்த உடன் தெரியும் படத்தில் (Wallpaper) அதாவது கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து வைத்த ஆரம்ப நிலையில் உள்ள Recycle Bin என்ற இடத்துக்கு போகும்.

சரி, இப்பொழுது உங்களால் தவறுதலாக அழிக்கப்பட்ட பைலை நீங்கள் திருப்ப பழைய இடத்துக்கு கொண்டுவரவேண்டும். அதற்க்கு என்ன செய்யவேண்டும். இந்த குப்பைத்தொட்டி என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Open என்ற இடத்தை தொடுங்கள் உடனே உங்களால் அழிக்கப்பட பைல் குப்பைத்தொட்டியில் போய் சேர்ந்திருப்பது உங்களுக்கு தெரியும்.

அடுத்து நீங்கள் குப்பைத்தொட்டியில் உள்ள உங்கள் பைலை உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Restore என்ற பட்டனை தொட்டால் உடனே நீங்கள் அழித்த பைல் அது இருந்த பழைய இடத்திற்க்கு போய்விடும்.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு விசயம் புரியும். என்னென்ன ? அதாவது கம்ப்யூட்டரை பற்றி அதிகமாக தெரியாத நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஒரு பைலை அழித்துவிட முடியாது. அப்படி அழித்தாலும் அதை குப்பைத்தொட்டியில் போய் எடுத்துவிடலாம் என்று. இனி என்ன பயம். ஒரு பைலை தவறுதலாக அழிக்கும் நீங்கள் குப்பைத்தொட்டியிலும் போய் அதை முழுவதுமாக அழித்துவிடவா போகிறீர்கள். இல்லவே இல்லை. அதனால் மற்றவர் வைத்திருக்கும் பைல்களை தவறுதலாக அழித்துவிடுவோம் என்ற பயத்தை விட்டுவிடுங்கள்.

அடுத்து ஏதாவது ஒரு ப்ரோக்ராமை நாம் விபரம் தெரியாமல் கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துவிடுவோமோ என்று சிலருக்கு பயம் இருக்கும். இதுவும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக நடந்துவிடாது. ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள WindowsXP ஐ நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் மவுசை வைத்து அழித்துவிட முடியாது. அதற்கு அதிகப்பபடியான ட்ரைனிங் உங்களுக்கு வேண்டும். அடுத்ததாக நீங்கள் டைப்செய்து சேர்த்துவைக்கும் ப்ரோக்ராம் Microsoft Word, Excel, word, Powerpoint, Access போன்றவற்றை உள்ளடக்கிய Microsoft Office ஐயும் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது ஏனென்றால் இந்த ஆபீஸ் ப்ரோக்ராமை நீங்கள் கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கவேண்டும் என்றால் அதற்க்கு Control Panel என்ற ஒரு புதிய இடத்துக்கு செல்லவேண்டும்.

இதற்கு மேல் கம்ப்யூட்டரில் நீங்கள் அழித்துவிட்டு அழக்கூடிய அளவிற்க்கு வேறு எந்த முக்கிய ப்ரோக்ராமும் இல்லை.

அதனால் தயக்கம் இல்லாமல் பயம் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன் படுத்துங்கள்.

வெற்றி நிச்சயம்.

அன்புடன்: கான்

Monday, 19 April 2010

உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?

தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:

சுட்டி


இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் தமிழில் டைப் செய்யலாம்.இதில் முதலாவதாக உள்ள "அ" TSCIIANJAL என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் MSword, Ms Excel போன்றவற்றில் தமிழில் டைப் செய்யலாம். இதில் டைப் செய்யும்போது இதன் Font Type ஐ TSCU_paranar என்ற டைப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

அதாவது

கம்ப்யூட்டரில் டைப் செய்ய: "அ" TSCUANJAL
நெட்டில் டைப் செய்ய :: "அ" UNICODETAMIL
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

அன்புடன்: கான்

Thursday, 15 April 2010

நீங்கள் அடோப் போட்டோசாப் பற்றி எதுவுமே தெரியாதவரா பரவாயில்லை வாருங்கள் எளிய முறையில் அடோப் போட்டோசாப் பற்றி தெரிந்துகொள்வோம்....


அடோப் போட்டோசாப் பாடம் 1அடோப் போட்டோசாப் பாடம் 2
அடோப் போட்டோசாப் பாடம் 3