உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Sunday, 9 May 2010

இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள் வேண்டுமா ?


என்னுடைய பதிவுக்கு சிறந்த பின்னூட்டங்கள் ( Comments ) கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File - ஐ உருவாக்கலாம் வாருங்கள்.


PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம். சிலர் தங்களுடைய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். பதிலாக மைக்ரோசாப் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அவர்களும் இலவசமாக கிடைக்கும் மென்பொருளின் மூலமாக PDF பைல உருவாக்க வேண்டாமா.... அதற்க்காகத்தான் இந்த பதிவு. அவர்களுக்காக மட்டுமல்ல மைக்ரோசாப்ட் 2007 ஐ பயன்படுத்தும் நீங்களும் இதனை பயன்படுத்தலாம்.


பயன்படுத்துவது எப்படி ?


முதலில் இந்த இணைய தளத்திற்க்கு சென்று கீழே சொன்னபடி இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


இங்கே கிளிக் செய்யவும்
இந்த இணைய தளம் உங்களுக்கு ஓப்பன் ஆனதும் கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பம் ஆகும். ஆரம்பம் ஆகவில்லை என்றால் நான் கீழே குறிப்பிட்ட To help protect your security என்ற இடத்தத கிளிக் செய்து Download File என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து உங்களுக்கு இங்கு கீழ் காணும் தட்டு ஓபன் ஆகும் இதில் Run என்பதை அழுத்துங்கள்.உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பித்துவிடும்.டவுண்லோடு முட்டிந்தவுடம் வரும் தட்டில் கிழே சொன்ன முறைப்படி doPDF V7 மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


Step 1Step 2Step 3Step 4Step 5Step 6Step 7Step 8Step 9Step 10


இன்ஸ்டால் செய்து முடிந்த உடன் நீங்கள் MS Word, Excel, Power Point எதில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான விபரங்களை டைப் செய்துகொண்டு அதனை PDF பைலாக மாற்ற கீழே காண்பதுபோல பிரிண்ட் ஆப்சனுக்கு (File > Print) சென்று பிரிண்டர் ஆப்சனில் doPDF v7 என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளதா என பார்த்துக்கொண்டு ஓகே செய்தால் உங்களுக்கு நீங்கள் டைப் செய்து வைத்த விபரங்கள் ஒரு PDF பைலாக கிடைத்துவிடும்.
Step 11

Step 12

Step 13


முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்

மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மைக்ரோசாப் ஆபீஸ் 2007 இன் உதவியோடு PDF பைல் உருவாக்குவது எப்படி ?

PDF பைல் என்றால் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

மென்பொருட்களை தயாரிக்கும் பல நிறுவனங்களில் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்று விளங்கும் சிறந்த ஒரு நிறுவனம் இந்த அடோப் நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வமான இணைய தளம் www.adobe.com என்பதாகும். இந்த நிறுவன தயாரிப்புகளில் முக்கியமான ஒரு மென்பொருள் அடோப் போட்டோசாப் என்பதாகும் இதனை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்த நிறுவனம்தான் இந்த அடோப் பி.டி.எப் ரீடர் என்பதையும் தயாரித்து PDF Reader என்ற மென்பொருளை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த பி.டி.எப் ரீடரை நீங்கள் டவுண்லோடு செய்ய இந்த http://www.adobe.com/downloads/ என்ற முகவரியை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள Get Adobe Reader என்ற பட்டனை அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த PDF Reader ஐ நீங்கள் டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் தான் நீங்கள் PDF பைல்களை ஓப்பன் செய்து அதில் உள்ள விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

சரி நமக்கு Microsft Word, Microsoft Excel போன்ற மென்பொருள்கள் இருக்கும்போது பி.டி.எப் பைலை PDF Reader மூலம் நாம் உருவாக்குவதால் நமக்கு என்ன லாபம் என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்கள் வேர்டு டாக்குமெண்டை ஒருவருக்கு நீங்கள் ஈமெயிலில் அனுப்பினால் அவர் அதனை எளிதாக திருத்தி அமைக்க முடியும். ஆனால் இந்த PDF மென்பொருளில் மாற்றி அனுப்பினால் அவரால் உங்கள் பைலில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

மேலும் நீங்கள் தமிழ்லில் ஒரு செய்தியை வேர்டில் டைப் செய்து அதனை PDF பைலாக மாற்றி அனுப்பினால் அப்படியே தமிழ் எடுத்துக்களை எந்த மாற்றமும் இல்லாமல் உங்கள் PDF பைலை பெறுபவர் பார்க்க முடியும். அவர் உங்கள் பைலை தமிழில் படிக்க வேண்டும் என்பதற்க்காக வேறு எந்த மென்பொருளையும் அவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டல் செய்ய தேவை இல்லை.

சரி PDF பைல் பற்றி விளக்கம் இதற்க்குமேல் உங்களுக்கு தேவை இல்லை.

இனி இந்த மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என பார்ப்போம்.

இந்த Save As PDF என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்க்கு முன்பாக உங்கள் மைக்ரோசாப் ஆபீஸ் வேர்டை ஓப்பன் செய்து Save As என்பதை கிளிக் செய்து பாருங்கள். இதில் PDF சம்பந்தமாக எந்த ஒரு குறிப்பும் இருக்காது.
சுட்டிஇப்பொழுது இந்த சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொண்டு அந்த Save As PDF என்ற மென்பொருளை டபுள் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். உடனே உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஒன்று ஓப்பன் ஆகும். இதில் நான் குறிப்பிட்டதுபோல Click Here to Accept the Microsoft Shareware License Tearms என்ற இடத்தில் உங்கள் மவுசால் கிளிக் செய்து டிக் வரவைத்துக்கொள்ளுங்கள். ( இதில் டிக் செய்வதால் நீங்கள் மைக்ரோசாப் ஆபீஸ் 2007 என்ற மென்பொருளை ஒரிஜினலாக உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து உள்ளதை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். )

சரி இதனை டிக் செய்ததும் உங்களுக்கு வலது பக்கம் உள்ள Continue என்ற பட்டன் கிளிக் செய்யும் வகையில் மாறி இருக்கும். அதனையும் கிளிக் செய்யுங்கள்.


கிளிக் செய்ததும் இன்ஸ்டால் செய்வதற்க்கு அடையாளமாக கீழே காண்பதுபோல் ஒரு தட்டு தோன்றும்.
அடுத்ததாக இன்ஸ்டால் செய்து முடிந்ததற்க்கு அடையாளமாக இந்த கீழ் காணும் தட்டு வந்திருக்கும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் உங்கள் மைக்ரோசாப் வேர்ட் டாக்குமெண்டை திறந்து Save As என்ற ஆப்சனுக்கு சென்று பாருங்கள் அதில் கீழே குறிப்பிட்டதுபோல் PDF என்று வந்திருக்கும். இனி நீங்கள் உங்களுக்கு தேவையான விசயங்களை உங்கள் வேர்ட் டாக்குமெண்டில் டைப் செய்துகொண்டு பிறகு Save As சென்று அதனை PDF பைலாக கீழே சொன்ன முறைப்படி மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்