உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 21 September 2009

உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக ஸ்டார்ட் (Start) பட்டனை அழுத்துங்கள். அடுத்து அதில் வரும் கண்ட்ரோல் பேனல் (Control Panel) என்ற பட்டனை அழுத்துங்கள்.இரண்டாவதாக Control Panel ல் வரும் User Accounts என்ற பட்டனை அழுத்துங்கள்.மூன்றாவதாக நீங்கள் எந்த User Name க்கு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டுமோ அந்த User Name ஐ அழுத்துங்கள்நான்காவதாக Create Password என்ற இடத்தை அழுத்துங்கள்ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஆறாவது இடத்திலும் மறுபடியும் நீங்கள் முன்பு டைப் செய்த பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஏழாவது இடத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடாமல் இருக்க ஒரு சிறு குறிப்பை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் உங்களுடைய ஒரு டெலிபோன் நம்பராக இருந்தால் இந்த Password Hint ல் my tel no என்று டைப் செய்யலாம். அடுத்து எட்டாவது இடத்தில் உள்ள Create Password என்ற பட்டனை அழுத்துங்கள்.இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டருக்கு நீங்கள் பாஸ்வேர் செட்டப் செய்துவிட்டீகள்.
(இந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடவேண்டாம். மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்களால் கூட போக முடியாது)

சரி......... இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் செட்டப் செய்துவிட்டீர்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்வது.

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒன்பதாவது இடத்தில் உங்கள் User Name க்கு கீழே Password Protected என்று எழுதப்பட்டிருக்கு. இதன் மூலம் உங்கள் User Name பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து நம்பர் 10 முதல் 15 வரை உங்கள் விருப்பத்திற்க்கு விடப்பட்டுள்ளது.

அதாவது பத்தாவது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் User Name ஐ வேறு பெயராக மாற்றிக்கொள்ளலாம்.

11வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.

12வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை நீக்கிவிடலாம்.

13வது இடத்தை கிளிக் செய்து உங்கள் User Name க்கு உங்களுக்கு விருப்பமான போட்டோவை இனைக்கலாம். உங்களுடைய போட்டோவைகூட சேர்த்துக்கொள்ளலாம்.

14வது இடத்தை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட் டைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது உங்கள் அக்கவுண்ட் சாதாரண அக்கவுண்டாக இருந்தால் Administrator அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம்.(இந்த Administrator அக்கவுண்டில் கம்ப்யூட்டரில் சில விசங்களை மாற்றக்கூடிய எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.)

15வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அக்கவுண்டையே அழித்துவிடலாம்.

சில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு


கம்ப்யூட்டரில் எத்தனையோ வகையான பைல் டைப்புகள் வந்துவிட்டது இனியும் வர இருக்கிறது. இருந்தாலும் புதிதாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நீங்கள் முக்கியமான சில பைல் டைப்புகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

எனவே அதனைப்பற்றி சிறு விளக்கம்:

எந்த ஒரு கம்ப்யூட்டர் பைலாக இருந்தாலும் அதன் பெயர் முடிவில் ஒரு புள்ளிக்கு பிறகு (.) மூன்று எழுத்தில் ஒரு வார்த்தை இருக்கும். இந்த வார்த்தைதான் அந்த பைல் எந்த டைப் பைல் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. உதாரணத்திற்க்கு book1.doc என்று ஒரு பைல் இருந்தால் இது Microsoft Office Document பைல் என தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புள்ளி அதன் பிறகு மூன்று எழுத்தில் ஒரு வார்த்தையை நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் எந்த ஒரு பைலிலும் பார்க்கவில்லை என்றால் அதை எப்படி எல்லா பைல்களுக்கும் கொண்டுவருவது.

உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு போல்டரை நீங்கள் ஓப்பன் செய்யுங்கள் அதில் Tools என்ற தலைப்பை கிளிக் செய்து Folder Option என்ற பகுதியை தொட்ட உடனே உங்களுக்கு கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பகுதி திறந்துகொள்ளும்.இதில் Folder Option என்ற் தலைப்பிற்க்கு கீழே General என்பதற்க்கு அடுத்து உள்ள View என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் hide extensions for known file type என்ற இடத்தில் உள்ள டிக்கை எடுத்துவிட்டு OK என்ற பட்டனை அழுத்துங்கள். அதன் பிறகு உங்கள் பைல்களை பாருங்கள் அதன் பெயருக்கு பிறகு .doc என்பதுபோன்ற மூன்று எழுத்து இருக்கும்.

சரி இனி சில முக்கிய பைல் டைப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்

.doc (Microsoft Office 2003) இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2003 பைல்
.docx (Microsoft Office 2007)இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2007 பைல்
.xls (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2003 பைல்
.xlsx (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2007 பைல்
.ppt (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2003 பைல்
.pptx (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2007 பைல்

.pdf (Adobe Acrobat Document) இது ஒரு அடோப் பி.டி.எப் பைல்
.txt (Text Document File) இது ஒரு டெக்ஸ்ட் டாக்குமெண்ட் பைல்

.jpg ( JPG File ) இது ஒரு இண்டெர் நெட் போட்டோ பைல்
.jpeg ( JPEG File ) இது ஒரு இண்டெர்நெட் போட்டோ பைல்
.gif (GIF File) இது ஒரு அனிமேசன் போட்டோ பைல்
.bmp (Bitmap Image File) இது ஒரு பெயிண்ட் பிரஸ் போட்டோ பைல்

.mov (Movie File ) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.wmv ( Window Media Video File) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.avi (Audio Video Interleave File ) இது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ பிளையர்களில் பயன்படுத்தும் வீடியோ பைல்
.VOB ( VOB -DVD file ) இது ஒரு DVD வீடியோ பைல்
.3gp ( 3GP File) இது மொபைல்களில் பயன்படுத்தும் பைல்
.mp4 (MP4 File ) இது மோபைல் மற்றும் சிறிய பிளையர்களில் பயன்படுத்தும் பைல்
.mpeg (MPEG File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயர்களில் பயன்படுத்தும் பைல்
.divx (DivX File) இது புதிய வகை Divix DVD பைல்

.mp3 (MP3 File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wav (WAV File ) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wma (Window Media Audio) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.amr (AMR File) இது மொபைலில் மட்டும் பயன்படுத்தும் ஆடியோ பைல்


இன்னும் பல எத்தனையோ டைப் பைல்கள் இருக்கின்றன.............
.

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் எப்பொழுதும் Standard Buttons மற்றும் Address Bar உங்களுக்கு தெரியும் வகையில் இருக்கும்.இவை திடீரென கானாமல் போய்விட்டால் அதை எப்படி மறுபடியும் கொண்டுவருவது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:

இந்த படத்தில் உள்ள போல்டரில் Standard Buttons மற்றும் Address Bar இல்லை.இதனை மறுபடி எப்படி கொண்டுவருவது. உங்கள் போல்டரில் மேலே உள்ள View என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் Toolbars என்பதை கிளிக் செய்தால் அங்கே கீழே படத்தில் உள்ளதுபோல் இன்னொரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் Standard Buttons மற்றும் Address Bar என்ற் இரண்டு இடத்திலும் டிக் இல்லாமல் இருக்கும்.அந்த இரண்டு இடத்திலும் நீங்கள் டிக் செய்துவிட்டால் போதும். உங்களுக்கு கானாமல் போன அந்த இரண்டும் வந்துவிடும்.

உங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

உங்கள் கம்ப்யூட்டரி C டிரைவின் அளவு (Capacity) ஐ எப்படி சோதித்து பார்ப்பது என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் திடீரென சிலபேர் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கெபாசிடி என்ன என்று கேடபார்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லத்தெரியவில்லை என்றால் ரெம்பவும் சங்கடமான சுழ்நிலையாகத்தான் இருக்கும்.

சரி........ அதை எப்படி உங்கள் கம்ப்யூட்டரில் சோதிப்பது என்று கேட்கிறீர்களா.

முதலில் உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop ல்) My Computer என்று எழுதப்பட்ட கம்ப்யூட்டர் போன்று படம் உள்ள ஐக்கானை கிளிக் செய்யுங்கள்.

அதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழே படத்தில் உள்ள பகுதி திறந்துகொள்ளூம்.
இதில் Local Disk (C) என்று எழுதப்பட்டுள்ள டிரைவை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் தெரியும் Properties என்ற இடத்தை தட்டுங்கள்.

அப்படி தட்டியதும் கீழே படத்தில் உள்ளதுபோல Local Disk (C) Properties என்ற பகுதி உங்களுக்கு ஓப்பன் ஆகும்.இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் எவ்வளவு இடத்தை இதுவரை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்கிறது.

அடுத்து நம்பர் 2 என்று குறிப்பிட்டுள்ள இடம் நீங்கள் பயன்படுத்தாத பாக்கி உள்ள இடம் எவ்வளவு என்று தெரியப்படுத்துகிறது.

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடம்தான் முக்கியமானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுதான் மொத்தமாக உங்கள் C டிரைவின் அளவு. அதாவது உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெப்பாசிட்டி என்ன என்று கேட்பவர்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டிய அளவு.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 39.00 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெபசிட்டி மொத்தத்தில் 40 GB அளவில் உள்ளது என்று அர்த்தம்.

மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விபரம் இந்த Local Disk (C:) டிரைவைப்போல அதன் பக்கத்தில் Local Disk (D:) என்ற ஒரு டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் அதன் டிஸ்க் கெபாசிடியையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் C டிரைவ் 40 GB அதோடு உங்கள் D டிரைவ் 40 GB என்று இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரின் மொத்த ஹார்டிஸ்க் கெபாசிட்டி 80 GB ஆகும்.

காப்பி பேஸ்ட் கட் என்றால் என்ன ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

Windows XP கம்ப்யூட்டர் பயன்படுத்தும் உங்களுக்கு காப்பி, பேஸ்ட், கட் (Copy, Paste, Cut) என்பது பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கும்.

ஏனென்றால் இந்த காப்பி, பேஸ்ட், கட் என்ற மூன்று விசயங்கள் தான் உங்களுக்கு கம்ப்யூட்டரில் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றாகும்.

சரி காப்பி, பேஸ்ட், கட் என்பதை நாம் எப்படி பயன்படுத்துவது ?

உங்களுடை கம்ப்யூட்டரில் ஒரு பைல் (File) இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த File ஐ நீங்கள் இன்னொரு காப்பி எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் என்ன செய்யவேண்டும்.

முதலில் அந்த File ஐ உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு உங்கள் கீ போர்டில் Control என்ற பட்டனையும் C என்ற பட்டனையும் ஒன்றாக அழுத்துங்கள் (Ctrl + C). இந்த இரண்டு பட்டனையும் அழுத்தியதும் உங்கள் File காப்பி ஆகிவிட்டது என்று அர்த்தம் (காப்பி ஆனதற்க்கு வேறு எந்த மாற்றமும் உங்களுக்கு தெரியாது).

அடுத்து நீங்கள் காப்பி செய்த File ஐ வேறு எந்த போல்டரில் பேஸ்ட் செய்யவேண்டுமோ அந்த இடத்திற்க்கு சென்று Control என்ற் பட்டனையும் V என்ற பட்டனையும் சேர்த்து (Ctrl+V) அழுத்தினால் நீங்கள் காப்பி செய்த File ல் அந்த போல்டரில் இன்னொரு காப்பியாக வந்துவிடும்.

சரி அப்படி என்றால் கட் என்பது எதற்க்காக என்று உங்களுக்கு ஒரு கெள்வி உருவ்கலாம்.

Cntrl+C (காப்பி) என்பதற்க்கு பதிலாக Ctrl+X (கட்) என்று அழுத்திவிட்டு Ctrl+V பேஸ்ட் என்று நீங்கள் உங்கள் பைலை இன்னொடு காப்பி எடுக்க நினைத்தால் உங்களுக்கு இன்னொரு காப்பி கிடைக்காது. ஏற்கனவே நீங்கள் காப்பி எடுத்த பைல் அங்கிருந்து மறைந்துவிடும் இங்கே வந்துவிடும்.

இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது

Ctrl+C என்பது இன்னொரு காப்பி எடுக்க பயன்படுவது
Ctrl+X என்பது ஒரு பைலை இன்னொரு இடத்திற்க்கு கட் செய்து கொண்டுபோக பயன்படுவது.
Ctrl+V என்பது காப்பியோ அல்லது கட்டோ அதற்க்கு இறுதியாக நீங்கள் கொடுக்கும் கட்டளை. (பேஸ்ட்)

இந்த முறையை பயன்பதுத்தி நீங்கள் உங்களிடம் உள்ள File களை ஒரு யூ எஸ்.பி. டிஸ்க் (USB PEN DRIVE ) ல் காப்பி பேஸ்ட் செய்யலாம்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை செலெக்ட் செய்து காப்பி (Ctrl+C) செய்துவிட்டு உங்கள் யூ.எஸ்.பி டிரைவை ஓப்பன் செய்து பேஸ்ட் (Ctrl+V) செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல் உங்கள் யூ.எஸ்.பி டிரைவில் காப்பி ஆகிவிடும்.

இந்த காப்பி பேஸ்ட்டை நீங்கள் சிரமம் இல்லாமல் பயன்படுத்த இன்னொரு வழி உண்டு. அது எப்படி தெரியுமா.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:இந்த படத்தில் உள்ளதுபோல உங்கள் File மீது உங்கள் மவுசை வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து அதில் வரும் Send to என்ற பட்டனை அழுத்தி அடுத்து திறக்கும் பகுதியில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்துள்ள யூ.எஸ்.பி டிரைவ் டிஸ்க்கை தேரந்தெடுத்து அதனை கிளிக் செய்தால் போதும் உங்கள் File உடனே உங்கள் யூ.எஸ்.பி. டிஸ்கின் உள்ளே போய்விடும்.

இந்த் Send to கிளிக் செய்வதற்க்கு முன்பாக நீங்கள் உங்கள் யூ.எஸ்.பி டிரைவ் டிஸ்கை உங்கள் கணிணியில் பொருத்தி இருக்கவேண்டும்.