உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Monday, 21 September 2009

உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக ஸ்டார்ட் (Start) பட்டனை அழுத்துங்கள். அடுத்து அதில் வரும் கண்ட்ரோல் பேனல் (Control Panel) என்ற பட்டனை அழுத்துங்கள்.



இரண்டாவதாக Control Panel ல் வரும் User Accounts என்ற பட்டனை அழுத்துங்கள்.



மூன்றாவதாக நீங்கள் எந்த User Name க்கு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டுமோ அந்த User Name ஐ அழுத்துங்கள்



நான்காவதாக Create Password என்ற இடத்தை அழுத்துங்கள்



ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஆறாவது இடத்திலும் மறுபடியும் நீங்கள் முன்பு டைப் செய்த பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஏழாவது இடத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடாமல் இருக்க ஒரு சிறு குறிப்பை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் உங்களுடைய ஒரு டெலிபோன் நம்பராக இருந்தால் இந்த Password Hint ல் my tel no என்று டைப் செய்யலாம். அடுத்து எட்டாவது இடத்தில் உள்ள Create Password என்ற பட்டனை அழுத்துங்கள்.



இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டருக்கு நீங்கள் பாஸ்வேர் செட்டப் செய்துவிட்டீகள்.
(இந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடவேண்டாம். மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்களால் கூட போக முடியாது)

சரி......... இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் செட்டப் செய்துவிட்டீர்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்வது.

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒன்பதாவது இடத்தில் உங்கள் User Name க்கு கீழே Password Protected என்று எழுதப்பட்டிருக்கு. இதன் மூலம் உங்கள் User Name பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.




அடுத்து நம்பர் 10 முதல் 15 வரை உங்கள் விருப்பத்திற்க்கு விடப்பட்டுள்ளது.

அதாவது பத்தாவது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் User Name ஐ வேறு பெயராக மாற்றிக்கொள்ளலாம்.

11வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.

12வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை நீக்கிவிடலாம்.

13வது இடத்தை கிளிக் செய்து உங்கள் User Name க்கு உங்களுக்கு விருப்பமான போட்டோவை இனைக்கலாம். உங்களுடைய போட்டோவைகூட சேர்த்துக்கொள்ளலாம்.

14வது இடத்தை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட் டைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது உங்கள் அக்கவுண்ட் சாதாரண அக்கவுண்டாக இருந்தால் Administrator அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம்.(இந்த Administrator அக்கவுண்டில் கம்ப்யூட்டரில் சில விசங்களை மாற்றக்கூடிய எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.)

15வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அக்கவுண்டையே அழித்துவிடலாம்.

13 comments:

  1. சின்ன சின்ன விசயங்களையும் தெளிவாக கூறியுள்ளிர்கள்.நன்றி.

    ReplyDelete
  2. asatthe irukkerergal real super neenga thaan sir mr kan !!!!!!!!!

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள்.... தொலைத்திருந்தால் அதை மீளப்பெற வழிகள் உள்ளதா?

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி நண்பரே....

    நீங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அதை மறுபடியும் சரி செய்ய வழி உள்ளது.

    ReplyDelete
  5. computerai puthithaha payanpaduthum engaluku ungalathu yindha sevai mihavum uthaviyaha irukindrathu. mihavum sirantha sevai.

    computeril backup eppadi pannuvathu. en system fulla virus. so backup eduthupathu eppadi. eduthuvittu enna seivathu. mukiyamana files iruku.

    ReplyDelete
  6. நன்றி ! நண்பரே.....

    கம்ப்யூட்டர் பேக்கப் செய்வது எப்படி என்பதை என்னுடைய இந்த பதிவில் பாருங்கள்

    http://tamilcomputertips.blogspot.com/2012/01/blog-post.html

    அன்புடன்: கான்

    ReplyDelete
  7. nan pudhiyathaka computer vankiullen ungalathu thakavalkal mikavum payanullathaka irunthathu
    Thank you sir

    ReplyDelete
  8. உங்கள் வருகைக்கு நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  9. thankyou sir, i set the password for my pc. but now the user account page is not opened sir. what i do?

    ReplyDelete
  10. user account page ஏன் ஓப்பன் ஆகவில்லை ? இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.

    அப்படி ஓப்பன் ஆகவில்லை என்றால் கம்ப்யூட்டரை restart செய்து ஓப்பன் ஆகும் நேரத்தில் F8 ஐ அழுத்துங்கள் safe mode ஆப்சன் வரும். அந்த safe mode ஆப்சனில் சென்று கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து user accounts ஆப்சன் சென்று பாருங்கள்.

    - கான்


    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்