உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Wednesday, 23 September 2009

ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?

இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா?

எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான்.

உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ?

கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் ஆகும் இந்த சாப்ட்வேர் உள்ளே உங்கள் போட்டோவை கொண்டு சென்று டிசைன் செய்துவிட்டு திரும்பவும் டிசைன் செய்த போட்டோவை உங்கள் கம்ப்யூட்டருக்குள் கொண்டுவந்துவிடலாம்
இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.sumo.fi/flash/sumopaint/index.php?id=0

இங்கே கிளிக் செய்யுங்கள் http://pixlr.com/editor/

Tuesday, 22 September 2009

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து


அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்துஅதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.

இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும்.
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.

சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்.........

Monday, 21 September 2009

உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக ஸ்டார்ட் (Start) பட்டனை அழுத்துங்கள். அடுத்து அதில் வரும் கண்ட்ரோல் பேனல் (Control Panel) என்ற பட்டனை அழுத்துங்கள்.இரண்டாவதாக Control Panel ல் வரும் User Accounts என்ற பட்டனை அழுத்துங்கள்.மூன்றாவதாக நீங்கள் எந்த User Name க்கு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டுமோ அந்த User Name ஐ அழுத்துங்கள்நான்காவதாக Create Password என்ற இடத்தை அழுத்துங்கள்ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஆறாவது இடத்திலும் மறுபடியும் நீங்கள் முன்பு டைப் செய்த பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஏழாவது இடத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடாமல் இருக்க ஒரு சிறு குறிப்பை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் உங்களுடைய ஒரு டெலிபோன் நம்பராக இருந்தால் இந்த Password Hint ல் my tel no என்று டைப் செய்யலாம். அடுத்து எட்டாவது இடத்தில் உள்ள Create Password என்ற பட்டனை அழுத்துங்கள்.இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டருக்கு நீங்கள் பாஸ்வேர் செட்டப் செய்துவிட்டீகள்.
(இந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடவேண்டாம். மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்களால் கூட போக முடியாது)

சரி......... இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் செட்டப் செய்துவிட்டீர்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்வது.

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒன்பதாவது இடத்தில் உங்கள் User Name க்கு கீழே Password Protected என்று எழுதப்பட்டிருக்கு. இதன் மூலம் உங்கள் User Name பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து நம்பர் 10 முதல் 15 வரை உங்கள் விருப்பத்திற்க்கு விடப்பட்டுள்ளது.

அதாவது பத்தாவது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் User Name ஐ வேறு பெயராக மாற்றிக்கொள்ளலாம்.

11வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.

12வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை நீக்கிவிடலாம்.

13வது இடத்தை கிளிக் செய்து உங்கள் User Name க்கு உங்களுக்கு விருப்பமான போட்டோவை இனைக்கலாம். உங்களுடைய போட்டோவைகூட சேர்த்துக்கொள்ளலாம்.

14வது இடத்தை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட் டைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது உங்கள் அக்கவுண்ட் சாதாரண அக்கவுண்டாக இருந்தால் Administrator அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம்.(இந்த Administrator அக்கவுண்டில் கம்ப்யூட்டரில் சில விசங்களை மாற்றக்கூடிய எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.)

15வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அக்கவுண்டையே அழித்துவிடலாம்.

சில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு


கம்ப்யூட்டரில் எத்தனையோ வகையான பைல் டைப்புகள் வந்துவிட்டது இனியும் வர இருக்கிறது. இருந்தாலும் புதிதாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நீங்கள் முக்கியமான சில பைல் டைப்புகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

எனவே அதனைப்பற்றி சிறு விளக்கம்:

எந்த ஒரு கம்ப்யூட்டர் பைலாக இருந்தாலும் அதன் பெயர் முடிவில் ஒரு புள்ளிக்கு பிறகு (.) மூன்று எழுத்தில் ஒரு வார்த்தை இருக்கும். இந்த வார்த்தைதான் அந்த பைல் எந்த டைப் பைல் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. உதாரணத்திற்க்கு book1.doc என்று ஒரு பைல் இருந்தால் இது Microsoft Office Document பைல் என தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புள்ளி அதன் பிறகு மூன்று எழுத்தில் ஒரு வார்த்தையை நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் எந்த ஒரு பைலிலும் பார்க்கவில்லை என்றால் அதை எப்படி எல்லா பைல்களுக்கும் கொண்டுவருவது.

உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு போல்டரை நீங்கள் ஓப்பன் செய்யுங்கள் அதில் Tools என்ற தலைப்பை கிளிக் செய்து Folder Option என்ற பகுதியை தொட்ட உடனே உங்களுக்கு கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பகுதி திறந்துகொள்ளும்.இதில் Folder Option என்ற் தலைப்பிற்க்கு கீழே General என்பதற்க்கு அடுத்து உள்ள View என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் hide extensions for known file type என்ற இடத்தில் உள்ள டிக்கை எடுத்துவிட்டு OK என்ற பட்டனை அழுத்துங்கள். அதன் பிறகு உங்கள் பைல்களை பாருங்கள் அதன் பெயருக்கு பிறகு .doc என்பதுபோன்ற மூன்று எழுத்து இருக்கும்.

சரி இனி சில முக்கிய பைல் டைப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்

.doc (Microsoft Office 2003) இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2003 பைல்
.docx (Microsoft Office 2007)இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2007 பைல்
.xls (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2003 பைல்
.xlsx (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2007 பைல்
.ppt (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2003 பைல்
.pptx (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2007 பைல்

.pdf (Adobe Acrobat Document) இது ஒரு அடோப் பி.டி.எப் பைல்
.txt (Text Document File) இது ஒரு டெக்ஸ்ட் டாக்குமெண்ட் பைல்

.jpg ( JPG File ) இது ஒரு இண்டெர் நெட் போட்டோ பைல்
.jpeg ( JPEG File ) இது ஒரு இண்டெர்நெட் போட்டோ பைல்
.gif (GIF File) இது ஒரு அனிமேசன் போட்டோ பைல்
.bmp (Bitmap Image File) இது ஒரு பெயிண்ட் பிரஸ் போட்டோ பைல்

.mov (Movie File ) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.wmv ( Window Media Video File) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.avi (Audio Video Interleave File ) இது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ பிளையர்களில் பயன்படுத்தும் வீடியோ பைல்
.VOB ( VOB -DVD file ) இது ஒரு DVD வீடியோ பைல்
.3gp ( 3GP File) இது மொபைல்களில் பயன்படுத்தும் பைல்
.mp4 (MP4 File ) இது மோபைல் மற்றும் சிறிய பிளையர்களில் பயன்படுத்தும் பைல்
.mpeg (MPEG File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயர்களில் பயன்படுத்தும் பைல்
.divx (DivX File) இது புதிய வகை Divix DVD பைல்

.mp3 (MP3 File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wav (WAV File ) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wma (Window Media Audio) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.amr (AMR File) இது மொபைலில் மட்டும் பயன்படுத்தும் ஆடியோ பைல்


இன்னும் பல எத்தனையோ டைப் பைல்கள் இருக்கின்றன.............
.

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் எப்பொழுதும் Standard Buttons மற்றும் Address Bar உங்களுக்கு தெரியும் வகையில் இருக்கும்.இவை திடீரென கானாமல் போய்விட்டால் அதை எப்படி மறுபடியும் கொண்டுவருவது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:

இந்த படத்தில் உள்ள போல்டரில் Standard Buttons மற்றும் Address Bar இல்லை.இதனை மறுபடி எப்படி கொண்டுவருவது. உங்கள் போல்டரில் மேலே உள்ள View என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் Toolbars என்பதை கிளிக் செய்தால் அங்கே கீழே படத்தில் உள்ளதுபோல் இன்னொரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் Standard Buttons மற்றும் Address Bar என்ற் இரண்டு இடத்திலும் டிக் இல்லாமல் இருக்கும்.அந்த இரண்டு இடத்திலும் நீங்கள் டிக் செய்துவிட்டால் போதும். உங்களுக்கு கானாமல் போன அந்த இரண்டும் வந்துவிடும்.

உங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

உங்கள் கம்ப்யூட்டரி C டிரைவின் அளவு (Capacity) ஐ எப்படி சோதித்து பார்ப்பது என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் திடீரென சிலபேர் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கெபாசிடி என்ன என்று கேடபார்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லத்தெரியவில்லை என்றால் ரெம்பவும் சங்கடமான சுழ்நிலையாகத்தான் இருக்கும்.

சரி........ அதை எப்படி உங்கள் கம்ப்யூட்டரில் சோதிப்பது என்று கேட்கிறீர்களா.

முதலில் உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop ல்) My Computer என்று எழுதப்பட்ட கம்ப்யூட்டர் போன்று படம் உள்ள ஐக்கானை கிளிக் செய்யுங்கள்.

அதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழே படத்தில் உள்ள பகுதி திறந்துகொள்ளூம்.
இதில் Local Disk (C) என்று எழுதப்பட்டுள்ள டிரைவை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் தெரியும் Properties என்ற இடத்தை தட்டுங்கள்.

அப்படி தட்டியதும் கீழே படத்தில் உள்ளதுபோல Local Disk (C) Properties என்ற பகுதி உங்களுக்கு ஓப்பன் ஆகும்.இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடம் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் எவ்வளவு இடத்தை இதுவரை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்கிறது.

அடுத்து நம்பர் 2 என்று குறிப்பிட்டுள்ள இடம் நீங்கள் பயன்படுத்தாத பாக்கி உள்ள இடம் எவ்வளவு என்று தெரியப்படுத்துகிறது.

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடம்தான் முக்கியமானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுதான் மொத்தமாக உங்கள் C டிரைவின் அளவு. அதாவது உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெப்பாசிட்டி என்ன என்று கேட்பவர்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டிய அளவு.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 39.00 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கெபசிட்டி மொத்தத்தில் 40 GB அளவில் உள்ளது என்று அர்த்தம்.

மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விபரம் இந்த Local Disk (C:) டிரைவைப்போல அதன் பக்கத்தில் Local Disk (D:) என்ற ஒரு டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் அதன் டிஸ்க் கெபாசிடியையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் C டிரைவ் 40 GB அதோடு உங்கள் D டிரைவ் 40 GB என்று இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரின் மொத்த ஹார்டிஸ்க் கெபாசிட்டி 80 GB ஆகும்.

காப்பி பேஸ்ட் கட் என்றால் என்ன ?

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

Windows XP கம்ப்யூட்டர் பயன்படுத்தும் உங்களுக்கு காப்பி, பேஸ்ட், கட் (Copy, Paste, Cut) என்பது பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கும்.

ஏனென்றால் இந்த காப்பி, பேஸ்ட், கட் என்ற மூன்று விசயங்கள் தான் உங்களுக்கு கம்ப்யூட்டரில் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றாகும்.

சரி காப்பி, பேஸ்ட், கட் என்பதை நாம் எப்படி பயன்படுத்துவது ?

உங்களுடை கம்ப்யூட்டரில் ஒரு பைல் (File) இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த File ஐ நீங்கள் இன்னொரு காப்பி எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் என்ன செய்யவேண்டும்.

முதலில் அந்த File ஐ உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு உங்கள் கீ போர்டில் Control என்ற பட்டனையும் C என்ற பட்டனையும் ஒன்றாக அழுத்துங்கள் (Ctrl + C). இந்த இரண்டு பட்டனையும் அழுத்தியதும் உங்கள் File காப்பி ஆகிவிட்டது என்று அர்த்தம் (காப்பி ஆனதற்க்கு வேறு எந்த மாற்றமும் உங்களுக்கு தெரியாது).

அடுத்து நீங்கள் காப்பி செய்த File ஐ வேறு எந்த போல்டரில் பேஸ்ட் செய்யவேண்டுமோ அந்த இடத்திற்க்கு சென்று Control என்ற் பட்டனையும் V என்ற பட்டனையும் சேர்த்து (Ctrl+V) அழுத்தினால் நீங்கள் காப்பி செய்த File ல் அந்த போல்டரில் இன்னொரு காப்பியாக வந்துவிடும்.

சரி அப்படி என்றால் கட் என்பது எதற்க்காக என்று உங்களுக்கு ஒரு கெள்வி உருவ்கலாம்.

Cntrl+C (காப்பி) என்பதற்க்கு பதிலாக Ctrl+X (கட்) என்று அழுத்திவிட்டு Ctrl+V பேஸ்ட் என்று நீங்கள் உங்கள் பைலை இன்னொடு காப்பி எடுக்க நினைத்தால் உங்களுக்கு இன்னொரு காப்பி கிடைக்காது. ஏற்கனவே நீங்கள் காப்பி எடுத்த பைல் அங்கிருந்து மறைந்துவிடும் இங்கே வந்துவிடும்.

இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது

Ctrl+C என்பது இன்னொரு காப்பி எடுக்க பயன்படுவது
Ctrl+X என்பது ஒரு பைலை இன்னொரு இடத்திற்க்கு கட் செய்து கொண்டுபோக பயன்படுவது.
Ctrl+V என்பது காப்பியோ அல்லது கட்டோ அதற்க்கு இறுதியாக நீங்கள் கொடுக்கும் கட்டளை. (பேஸ்ட்)

இந்த முறையை பயன்பதுத்தி நீங்கள் உங்களிடம் உள்ள File களை ஒரு யூ எஸ்.பி. டிஸ்க் (USB PEN DRIVE ) ல் காப்பி பேஸ்ட் செய்யலாம்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை செலெக்ட் செய்து காப்பி (Ctrl+C) செய்துவிட்டு உங்கள் யூ.எஸ்.பி டிரைவை ஓப்பன் செய்து பேஸ்ட் (Ctrl+V) செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல் உங்கள் யூ.எஸ்.பி டிரைவில் காப்பி ஆகிவிடும்.

இந்த காப்பி பேஸ்ட்டை நீங்கள் சிரமம் இல்லாமல் பயன்படுத்த இன்னொரு வழி உண்டு. அது எப்படி தெரியுமா.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:இந்த படத்தில் உள்ளதுபோல உங்கள் File மீது உங்கள் மவுசை வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து அதில் வரும் Send to என்ற பட்டனை அழுத்தி அடுத்து திறக்கும் பகுதியில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்துள்ள யூ.எஸ்.பி டிரைவ் டிஸ்க்கை தேரந்தெடுத்து அதனை கிளிக் செய்தால் போதும் உங்கள் File உடனே உங்கள் யூ.எஸ்.பி. டிஸ்கின் உள்ளே போய்விடும்.

இந்த் Send to கிளிக் செய்வதற்க்கு முன்பாக நீங்கள் உங்கள் யூ.எஸ்.பி டிரைவ் டிஸ்கை உங்கள் கணிணியில் பொருத்தி இருக்கவேண்டும்.

Sunday, 20 September 2009

இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?

கம்ப்யூட்டருக்கு புதியவருக்காக

உங்கள் பெயரில் இலவசாமாக ஒரு ஜி மெயில் வேண்டுமா ? அதை உருவாக்குவது எப்படி ?

முதலில் இண்டெர் நெட் அட்ரஸ் டைப் செய்யும் இடத்தில் www.gmail.com என்று டைப் செய்து எண்டர் பட்டனை அழுத்துங்கள் உங்களுக்கு இண்டெர்நெட்டில் கீழ் கானும் பகுதி ஓப்பன் ஆகும்இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ள Create an account என்ற இடத்தை உங்கள் மவுஸ் மூலம் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு அடுத்ததாக கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்.இதில் நம்பர் 2 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் முதல் பகுதியை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு உங்கள் பெயர் Ahamed Mustafa என்று வைத்துகொண்டால் முதலில் நீங்கள் இந்த இடத்தில் Ahamed என்பதை டைப் செய்துகொள்ளுங்கள்

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் இரண்டாவது பகுதியை டைப் செய்துகொள்ளுங்கள் உதாரணத்திற்க்கு Mustafa

அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இரட்த்தில் உங்களுக்கு தேவையான ஜீ மெயில் முகவரியை டைப் செய்யுங்கள் ( உங்களுக்கு விருப்பமான பெயர் எதுவானாலும் பரவாயில்லை ) உதாரணத்திற்க்கு ahamed.

உங்கள் பெயரை அங்கு டைப் செய்தபிறகு நம்பர் 5 என்று குறிப்பிட்ட check availability! என்ற பட்டனை அழுத்துங்கள்

அதனை அழுத்தியதும் உங்களுக்கு கீழ் காணும் படத்தில் நம்பர் 6 ல் குறிப்பிட்டது போல நீங்கள் டைப் செய்த பெயருக்கு வேறு சில விதமான மாற்றம் செய்யப்பட்ட பெயர்களும் உங்களுக்கு தெரியும்இப்படி ஏன் வருகிறது தெரியுமா ? இந்த ahamed என்ற பெயர் ஏற்கெனவே ஒருவர் தன்னுடைய ஜி மெயில் முகவரிக்காக எடுத்துவிட்டதால் அந்த பெயர் இல்லை என்று வருகிறது. அதனால் நீங்கள் வேறு ஒரு பெயரைத்தான் உங்கள் ஜி மெயில் முகவரிக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி ஜி மெயில் சொல்வதால் உங்கள் பெயரை மாற்றவா முடியும். அல்லது இந்த ஜி மெயில் வேண்டாம் என்று விட்டுவிடத்தான் முடியுமா ?.

உங்களுக்கு எந்த குழப்பமும் தேவையில்லை. ஜி மெயில் இப்படி உங்களுக்கு உங்கள் பெயரில் முகவரி இல்லை என்று சொன்னால் உடனே நீங்கள் உங்கள் பெயரோடு சில நம்பர்களை சேர்த்துக்கொண்டால் போதும்.

உதாரணத்திற்க்கு ahamed என்ற பெயரோடு 2009123 என்று சேர்த்து டைப் செய்கிறீர்கள் அதாவது ahamed2009123 என்று மாற்றி டைப் செய்து check availability! என்ற பட்டனை அழுத்தினால் கீழே உள்ள படத்தில் நம்பர் 8 ல் குறிப்பிட்டது போல ahamed2009123 available என்று வந்துவிடும். இப்படி வந்துவிட்டால் உங்க்ளுக்கு இந்த முகவரியை தருவதற்க்கு ஜி மெயில் தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.அடுத்து உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஜி மெயில் முகவரிக்கு மேற்கொண்டு பூர்த்தி செய்யவேண்டிய விசயங்களை பார்ப்போம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்பொழுது நீங்கள் ஒரு முக்கியமான இடத்திற்க்கு வந்திருக்கிறீர்கள் அதாவது உங்கள் ஜி மெயிலை நீங்கள் திறக்கும் நேரத்தில் டைப் செய்யும் பாஸ்வேர்ட் (Password) தேர்வு செய்யும் இடத்திற்க்கு வந்துவிட்டீர்கள்.


நம்பர் 9 ல் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் ஜி மெயிலுக்கு தேவையான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள் (பாஸ்வேர்ட் என்பது இரகசிய எழுத்து அதனால் இதனை வேறு யாருக்கும் தெரியப்படுத்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உருவாக்கும் இந்த ஜி. மெயிலுக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்த பாஸ்வேர்ட் வேறு ஒருவர் கையில் கிடைத்து அவர் உங்கள் ஜி மெயிலின் மூலம் அடுத்தவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் அதற்க்கு நீங்கள் தானே பதில் சொல்லவேண்டும்)

பாஸ்வேர்ட் டைப் செய்யும்போது எழுத்தோடு சேர்த்து நம்பர்களையும் இனைத்து டைப் செய்தால் நல்லது. உதாரணத்திற்க்கு mymail445566 என்பதுபோல பாஸ்வேர்ட் டைப் செய்தால் அடுத்தவர் எளிதாக உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியாது.

அடுத்து நம்பர் 10 என்ற இடத்தில் நீங்கள் மேலே டைப் செய்த அதே பாஸ்வேர்டை மறுபடியும் டைப் செய்யவெண்டும். எதற்க்காக மறுபடியும் என்று நினைக்கிறீர்களா நாம் எந்த ஒரு விசயத்தில் தவறு செய்தாலும் ஒரு தடவை தவறு செய்யலாம். அதே தவறை இன்னொரு முறையும் செய்யமாட்டோம் இல்லையா. அந்த ஒரு காரணத்திற்க்காகத்தான் இது. அதாவது நீங்கள் முதலில் கொடுக்கும் பாஸ்வேர்ட் மனதில் நினைத்தது வேறு டைப் செய்தது வேறு என்று வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் அடுத்து மறுபடியும் பாஸ்வேர்டை டைப் செய்யும்போது அதே தவறை செய்யமாட்டீர்கள். அதனால் இரண்டாவது தடவை மனதில் நினைத்த பாஸ்வேர்டை சரியாக டைப் செய்தால் நீங்கள் ஏற்கனவே செய்த தவறு உங்களுக்கு தெரிந்துவிடும்.

அடுத்து நம்பர் 11 ல் குறிப்பிட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்கான கேள்வி (Security Question) ஒன்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த பகுதியில் ஓரத்தில் இருக்கும் ஆரோவை நீங்கள் கிளிக் செய்தால் அதில் நான்கு கேள்விகள் இருக்கும் ஐந்தாவதாக நீங்களே கேள்வியை உருவாக்குவதற்க்கான சுட்டியும் இருக்கும். இந்த நான்கு கேள்விகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து நம்பர் 12 ல் குறிப்பிட்ட இடத்தில் அதற்க்கான பதிலை கொடுக்கவேண்டும்.

உங்கள் முதல் போன் நம்பர் என்ன?
உங்கள் முதல் டீச்சரின் பெயர் என்ன ?
உங்கள் லைப்ரரி கார்டு நம்பர் என்ன?
போன்ற கேள்விகள் இங்கு இருக்கிறது

உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் முதல் போன் நம்பர் என்ன ?
what is your first phone number ?

என்ற கேள்வியை தேர்வு செய்தால் அதற்க்கு நீங்கள் நன்றாக நினைவில் வைக்கக்கூடிய ஒரு போன் நம்பரை பதிலாக டைப் செய்யவேண்டும்.

இந்த நான்கு கேள்வியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடைசியாக உள்ள write your own question

என்பதை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான கேள்வியை நீங்களே எழுதி அதற்க்கு தேவையான பதிலையும் நீங்களே டைப் செய்யலாம்.

சரி இந்த கேள்வி பதிலால் என்ன நன்மை என்று கேட்கிறீர்களா ?

நீங்கள் எப்பொழுதாவது ஒரு நாள் உங்களுடைய பாஸ்வேர்டை மற்ந்துவிட்டால் நீங்கள் மறுபடியும் பாஸ்வேடை ஜி மெயிலிடம் கேட்க்கும்போது மறுபடி பாஸ்வேர்ட் கேட்பவர் நீங்கள் தானா என்பதை உறுதிப்படுத்த ஜி மெயில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க்கும். அப்பொழுது மறக்காமல் நீங்கள் இந்த பதிலை கொடுக்கவேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் இந்த பதிலையும் மறந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு சொந்தமான ஜி. மெயில் முகவரி உங்களை விட்டு போய்விடும். அதனால் இந்த பதிலையாவது மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி அடுத்து நம்பர் 13 ல் குறிப்பிட்டுள்ள இடத்திற்க்கு வருவோம். இங்கு Secondary Email: என்ற இடத்தில் உங்கள் நன்பர் ஒருவரின் ஜி. மெயில் அட்ரஸ் அல்லது யாகூ மெயில் அட்ரஸ் எதுவானாலும் கொடுக்கலாம்.

இது எதற்க்காக என்றால் உங்கள் ஜி. மெயிலை வேறொருவர் உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டையும் மாற்ற முயற்ச்சிக்கிறார் என்றால் உடனே உங்களுக்கு உங்கள் நன்பரின் முகவரியின் மூலம் ஜி மெயில் ஒரு செய்தியை அனுப்பும். உங்கள் ஜி. மெயிலின் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது இது உங்களுக்கு தெரியுமா என்பதுபோல.. இதுவும் ஒரு பாதுகாப்புக்காக்கத்தான்.

நீங்கள் பேங்க் ஒன்றில் அக்கவுண்ட் ஒன்றை ஓப்பன் செய்தால் அதே பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருவரின் சிபாரிசு தேவை என்று பேங்க் கேட்பது போலத்தான் இது.

சரி அடுத்து கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பர் 14 என்ற இடத்திற்க்கு வருவோம். இந்த இடத்தில் என்ன கொடுக்கவேண்டும் ஏன் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் எல்லோருக்கும் இருக்கும்.இந்த இடத்தில் அதன் மேலே சிகப்பு கலரில் குறிப்பிட்டுள்ள எழுத்தை சரியாக டைப் செய்யவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் உங்களால் ஜி மெயிலை உருவாக்க முடியாது.

இத்தனை விசயம் டைப் செய்த பிறகு இதுவும் எதற்காக டைப் செய்யவேண்டும் என்று நீங்கள் கேள்வி கேட்களாம். ஜி மெயில் நிர்வாகிகள் உங்களை அதிகமாக கஷ்டப்படுத்த விரும்பவில்லைதான். இருந்தாலும் இன்றைய நவீன யுகத்தில் இப்படி ஒரு பாதுகாப்பும் முக்கிய தேவையாகத்தான் இருக்கிறது. ஏன் ? இந்த ஒரு பாதுகாப்பினால் ஜி. மெயிலுக்கு என்ன ப்யன்.

முதல் காரணம் இந்த இடத்தில் குழப்பமான முறையில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை பார்த்து சரியான முறையில் டைப் செய்யும் நீங்கள் ஜி மெயிலை பயன்படுத்த சரியான தகுதியையும் வயதையும் அடைந்தவர்தான் என்று ஜி மெயில் தீர்மானிக்கிறது.

இரண்டாவதாக இந்த குழப்பமான தடுப்புமட்டும் இல்லை என்றால் சில திறமைசாலிகள் தங்கள் மூளையை பயன்படுத்தி தானாகவே மெயிலை உருவாக்கக்கூடிய சாப்ட்வேர்கள் மூலம் லட்ச்சக்கணக்கான மெயில்களை உருவாக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்புறம் உங்களுக்கு ஜி மெயில் இலவசமாக கிடைக்கும் சூழ்நினை இல்லாமலேயே போய்விடும்.

சரி இதற்க்குமேல் விளக்கம் சொல்லி உங்களை குழப்ப நான் விரும்பவில்லை. அடுத்ததாக நீங்கள் நம்பர் 15 என்ற இடத்தில் உள்ள பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஒரு ஜி. மெயில் கிடைத்துவிடும்.

இந்த பட்டனை அழுத்துவதற்க்கு முன்பாக அதன் மேலே கொடுக்கப்பட்டுள்ள கூகுல் ஜி மெயில் பயன்படுத்துவதற்க்காக நிபந்தனைகளை ( Tearms of Service - Agreement ) நீங்கள் படித்துப்பார்த்து அவர்கள் கொடுக்கும் நிபந்தனைக்கு உட்பட்டதாக ஒத்துக்கொள்ளவேண்டும்.

அப்படி ஒத்துக்கொண்டதன் அடையாளமாகத்தான் நீங்கள் I accept create my account என்ற பட்டனை அழுத்துவதாக ஜி மெயில் ஏற்றுக்கொண்டுதான் உங்களுக்கு ஒரு இலவசமான ஜி மெயிலை அவர்கள் தருகிறார்கள்.

இதன் பிறகு ஜி மெயிலை பயன்படுத்தும் நீங்கள் அதன் நல்லது கெட்டது எதுவானாலும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

முயற்ச்சி செய்யுங்கள்.......... வெற்றி நிச்சயம்.

Saturday, 19 September 2009

தெரியுமா இண்டெர் நெட் ?

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குஇண்டெர் நெட் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இண்டெர் நெட் என்பது உலகத்தில் உள்ள செய்திகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்த்து கம்ப்யூட்டரின் மூலமாக உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அதோடு மட்டுமலாமல் பெரிய பெரிய நிறுவணங்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்களுடைய நிறுவணத்தின் செயல்திட்டங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்க்கு இந்த இணைய தளம் உதவியாக இருக்கிறது. மேலும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த்தப்படும் புதிய மென்பொருட்களின் (Softwares-சாப்ட்வேர்) கண்டுபிடிப்பு இந்த இணைய தளத்தின் மூலம்தான் தெரியப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இன்றைய நவீன யுகத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர்களோடு ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பேசிக்கொள்ளவும் (சாட்டிங்) உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் கம்ப்யூட்டர் மூலமாகவே உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புவதற்க்காகவும் இண்டெர் நெட் பயன்படுகிறது.

நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் ஐக்கான் தான் இண்டெர் நெட்டை ஓப்பன் செய்வதற்க்கு பயன்படுகிறது. அதனை டபுள் கிளிக் செய்து (அல்லது அந்த ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து ஓப்பன் என்று வருவதை கிளிக் செய்யவும்) இண்டெர்நெட்டை ஓப்பன் செய்ததும் கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு தட்டு திறந்துகொள்ளும். இதில் தான் நீங்கள் உங்களுக்கு தேவையான செய்திகளை பார்க்க முடியும்.இந்த படத்தில் நம்பர் 1 என்று குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் தான் நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தள முகவரியை டைப் செய்யவேண்டும்.

ஒட்டு மொத்த தகவலும் இங்கு பார்க்க முடியும் என்றாலும் ஓவ்வொரு தகவலுக்கும் தனித்தனியே ஒரு முகவரி இருந்தால் தானே அது சாத்தியமாகும். அதனால் தான் ஒவ்வொரு தகவல் நிறுவணமும் தனித்தனியே தங்களுக்கென ஒரு பெயரை வைத்துள்ளது.

உதாரணத்திற்க்கு நீங்கள் நமது ஸ்டேட் பேங்கிற்க்கு சொந்தமான இணைய தளத்தை பார்க்கவேண்டும் என்றால் http://www.statebank.com என்று நீங்கள் டைப் செய்யவேண்டும்.

இப்படி டைப் செய்து உடனே உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஸ்டேட் பேங்கின் இணைய தளம் ஓப்பன் ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் மேற்கொண்டு அந்த தளத்தில் தேவைப்பட்ட இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்த தளத்தின் முகவரிய டைப் செய்ய்ம்போது நீங்கள் www.statebank.com என்று மட்டும் டைப் செய்தாலே போதுமானது http:// என்று ஆரம்பத்தில் வரக்கூடியது தானாகவே நீங்கள் டைப் செய்யும் முகவரியோடு சேர்ந்துகொள்ளும்.

மேலும் இந்த முகவரி சம்பந்தமாக தெரிந்துகொள்ளவேண்டிய சில விபரங்கள்:

1) இந்த இணைய தள முகவரிகள் அனைத்தும் சிறிய ஆங்கில எழுத்துக்களாக ( Small Letter)மட்டுமே இருக்கும் பெரிய ஆங்கில எழுத்துக்கள் (CAPITAL LETTER இந்த முகவரியில் வரவே வராது (உதாரணத்திற்க்கு மேலே உள்ள முகவரி WWW.STATEBANK.COM என்று வராது)

2) இணைய தள முகவரியை நீங்கள் டைப் செய்யும்போது ஒரு வார்த்தைக்கு இன்னொரு வார்த்தை எக்காரணத்தைக்கொண்டும் இடைவெளியை விடக்கூடாது. சேர்த்துதான் டைப் செய்யவேண்டும். ( உதாரணத்திற்க்கு statebank என்பதை state bank என்று டைப் செய்யக்கூடாது)

3) எந்த முகவரியாக இருந்தாலும் அதன் கடைசியில் .com .in .ae .net என்பதுபோன்ற ஒரு முடிவு வார்தையோடு தான் இருக்கும். இது இல்லாமல் இருக்காது.

அடுத்து நம்பர் 2 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஆரோவை நீங்கள் எதற்க்காக பயன்படுத்தவேண்டும் தெரியுமா ?

இண்டெர் நெட்டில் ஒரு பக்கத்தை ஓப்பன் செய்த பிறகு இன்னொரு
பக்கத்தை ஓப்பன் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் பிறகு மறுபடியும் முதல் பக்கத்திற்க்கு போகவேண்டுமென்றால் அந்த ஆரோ பட்டனை கிளிக் செய்தால் போதும் முதல் பக்கத்திற்க்கு போய்விடலாம்.

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிடப்பட்டிருக்கு இடத்தில் என்ன பயன் தெரியுமா?

நீங்கள் இண்டெர்நெட்டில் அட்ரஸ் அடிக்கு இடத்தில் (நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடத்தில்) www.google.com என்று டைப் செய்து அந்த கூகுல் பக்கத்தை ஓப்பன் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மேலே 3 என்று குறிப்பிட்ட பகுதி தெரியும் அந்த பகுதியில் நீங்கள் எந்த வார்த்தையை டைப் செய்கிறீர்களோ உடனே உங்களுக்கு அந்த வார்த்தைக்கு சம்பந்தமான பல இணைய தளங்கள் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எந்த இணைய தளம் தேவையோ அதை நீங்கள் ஓப்பன் செய்துகொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நம்பர் 3 என்று குறிப்பிட்ட இதத்தில் நீங்கள் tamil cinema என்று டைப் செய்து உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உடனே உங்களுக்கு தமிழ் சினிமா சம்பந்தமாக இண்டெர்நெட்டில் எந்தனை விதமான இனைய தளங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை நீங்கள் கிளிக் செய்து ஓப்பன் செய்துகொள்ளலாம்.

அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஸ்டார் இருப்பதை நீங்கள் பார்ப்பீகள் இந்த ஸ்டாரை கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த உங்களுக்கு விருப்பமான் தளத்திற்க்கு உடனே செல்ல முடியும்.

அடுத்து நம்பர் 5 என்று குடிப்பிட்ட இடத்தில் Tools என்று எழுதப்பட்டிருப்ப்பதை கிளிக் செய்தால் நீங்கள் இந்த இண்டெர் நெட் சம்பந்தமான சில செட்டப்புக்களை மாற்ற முடியும். இதன் விளக்கம் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Thursday, 17 September 2009

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஐக்கான்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

இந்த படங்களில் எழுத்துக்க்ள் உங்களுக்கு தெளிவக தெரியவில்லை என்றால் படத்தின் மீது கிளிக் செய்து படிக்கவும்Wednesday, 16 September 2009

உங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக

உங்களுக்கு தெரியுமா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள RAM இன் வேகம் மற்றும் உங்கள் கம்யூட்டரின் MotherBoard, Processor ன் பெயர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் (விண்டோஸ் எக்ஸ்பி) பெயர் ஆகியவை எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ?

அது மிகவும் எளிது. நான் சொல்வதுபோல் செய்யுங்கள்.இங்கு படத்தில் காட்டப்படுவது போன்ற ஐக்கான்கள் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் பார்க்கமுடிகிறதா? அதில் My Computer என்ற ஐக்கானில் உங்கள் மவுஸ் ஆரோவை வைத்து அதன் வலதுபுறம் கிளிக் செய்யுங்கள்

உடனே இங்கு உள்ளதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் கீழ் பகுதியில் Properties என்று எழுதப்பட்டிருக்கிறதல்லவா இந்த Properties ஐ கிளிக் செய்யுங்கள் உடனே உங்களுக்கு கீழ் கானும் படத்தில் உள்ளதுபோல System Properties என்று ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் System என்ற இடத்தில் எழுதப்பட்டிருப்பது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட OS அதாவது Operating System எது என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் அடுத்து Registered To என்ற இடத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்து Computer என்ற இடத்தில் உங்கள் கம்ப்யூட்டர் MotherBoard, Processor மற்றும் Ram இன் வேகம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனி நீங்கள் எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் இந்த My Computer என்ற ஐக்கானை கிளிக் செய்து இந்த விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இதற்க்கு மற்றொருவருடைய உதவி தேவை இல்லை.

இந்த My Computer என்பது உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் இல்லை என்றால் நீங்கள் அதை அங்கு கொண்டுவருவதற்க்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் உள்ள படத்தில் (Wallpaper) உங்கள் மவுசை வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து அதில் கீழே இருக்கும் Properties ஐ கிளிக் செய்து மேலே உள்ள தலைப்பில் Deskstop என்பதை தேர்ந்தெடுத்து கீழே உள்ள Customize Desktop என்பதை கிளிக் செய்து அதில் மேலே My Computer என்ற இடத்தில் உள்ள சிறிய பாக்ஸில் கிளிக் செய்து அதில் டிக் வருகிறதா என்று பார்த்துவிட்டு டிக் வந்துவிட்டால் கீழே உள்ள Ok என்ற பட்டனை அழுத்தி அதை மூடிவிடவும்.

இப்பொழுது My Computer என்பது உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் கண்டிப்பாக வந்திருக்கும்.


சரி அடுத்த பாடத்தில் மீண்டும் சந்திப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows XP) Control Panel பற்றிய சிறு விளக்கம்

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக

அன்பு நண்பர்களே !
கம்ப்யூட்டரில் சில நுட்பமான விபரங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் நீங்களும் திறமையாக கம்ப்யூட்டரை இயக்கலாம்.
அதற்க்காக சில விசயங்களை உங்களுக்கு தெளிவு படுத்துகிறேன் கவனமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் முக்கியமாக முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பகுதி Control Panel என்பதாகும்.
இது எங்கு உள்ளது...........
உங்கள் கம்ப்யூட்டரின் திரையில் இடது புறத்தின் கீழ் பகுதியில் Start என்ற ஒரு பட்டனை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த Start பட்டனை கிளிக் செய்யுங்கள்

அதில் Control Panel என்று எழுதப்பட்டிருப்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Control Panel என்று ஒரு பகுதி ஓப்பன் ஆகும்.(இதுதான் Control Panel)சரி இதன் பயன் என்ன என்று கேட்கிறீர்களா ?

இந்த Control Panel ல் இடது பக்கம் இருக்கும் Switch to Classic View என்ற பட்டனை உங்கள் மவுசால் கிளிக் செய்தால்


உங்கள் Control Panel கீழே படதில் உள்ளதுபோல் மாறிவிடும்
இப்படி இரண்டு விதமாக உங்கள் கம்ப்யூட்டரின் Control Panel ஐ நீங்கள் பார்க்கலாம்.

சரி இப்பொழுது முக்கியமாக நீங்கள் Control Panel ல் தெரிந்துகொள்ள வேண்டியது....

1) Add or Remove Programs
மேலே உள்ள Control Panel லிஸ்ட்டில் Add or Remove Programs என்று எழுதப்பட்ட ஐக்கானை நீங்கள் கிளிக் செய்தால் ஒரு டிஸ்ப்ளே ஓப்பன் ஆகும் இதில்


நீங்கள் உங்களுக்கு உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஏதாவது ஒரு சாப்ட்வேர் தேவை இல்லை என்று நினைத்தால் இங்கு அந்த சாப்ட்வேரின் பெயரை செலெக்ட் செய்து Remove என்று தெரியக்கூடிய பட்டனை கிளிக் செய்தால் அந்த ஒரு சாப்ட்வேர்மட்டும் உங்கள் கம்ப்யூட்டரை விட்டு போய்விடும்.
(முக்கியமாக நீங்கள் இதில் தெரிந்துகொள்ளவேண்டியது இதிலிருந்து நீங்கள் ஒரு சாப்ட்வேரை எடுத்துவிட்டால் அதை மறுபடியும் கொண்டுவர உடனே முடியாது அது மறுபடியும் தேவை என்றால் அதை இன்ஸ்டால் செய்ய பயன்பட்ட சாப்ட்வேர் பைல் உங்களுக்கு தேவை)

2) Date and Time


இந்த Date and Time என்று எழுதப்பட்ட பட்டனை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நேரம் மற்றும் தேதியை நீங்களே மாற்றிக்கொள்ளலாம்

3) Display


அடுத்து Display என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் கிளிக் செய்தால் Display Properties என்ற ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இந்த Display Properties ன் தலைப்பில் Desktop என்று எழுதப்பட்டதை கிளிக் செய்தால் நீங்கள் விரும்பிய வால்பேப்பரை செலெக்ட் செய்துகொள்ளலாம். அடுத்து ScreenSaver என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு விருப்பமான Screen Saver ஐ செலெக்ட் செய்துகொள்ளலாம். அடுத்து கடைசியா இருக்கும் Settings என்பதை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் திரை அளவை (Screen resolution) ஐ மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவர் என்பதால் இப்போதைக்கு Control Panel ல் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இந்த மூன்றும் மட்டும் போதும்......

வாருங்கள் மற்ற பகுதிக்கு செல்வோம்........
உங்கள் கருத்தை Comments என்பதை கிளிக் செய்து இங்கே எழுதுங்கள்
மேலும் தொடர்வோம்