உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Wednesday, 16 September 2009

உங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக

உங்களுக்கு தெரியுமா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள RAM இன் வேகம் மற்றும் உங்கள் கம்யூட்டரின் MotherBoard, Processor ன் பெயர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் (விண்டோஸ் எக்ஸ்பி) பெயர் ஆகியவை எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ?

அது மிகவும் எளிது. நான் சொல்வதுபோல் செய்யுங்கள்.இங்கு படத்தில் காட்டப்படுவது போன்ற ஐக்கான்கள் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் பார்க்கமுடிகிறதா? அதில் My Computer என்ற ஐக்கானில் உங்கள் மவுஸ் ஆரோவை வைத்து அதன் வலதுபுறம் கிளிக் செய்யுங்கள்

உடனே இங்கு உள்ளதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் கீழ் பகுதியில் Properties என்று எழுதப்பட்டிருக்கிறதல்லவா இந்த Properties ஐ கிளிக் செய்யுங்கள் உடனே உங்களுக்கு கீழ் கானும் படத்தில் உள்ளதுபோல System Properties என்று ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் System என்ற இடத்தில் எழுதப்பட்டிருப்பது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட OS அதாவது Operating System எது என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் அடுத்து Registered To என்ற இடத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்து Computer என்ற இடத்தில் உங்கள் கம்ப்யூட்டர் MotherBoard, Processor மற்றும் Ram இன் வேகம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனி நீங்கள் எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் இந்த My Computer என்ற ஐக்கானை கிளிக் செய்து இந்த விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இதற்க்கு மற்றொருவருடைய உதவி தேவை இல்லை.

இந்த My Computer என்பது உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் இல்லை என்றால் நீங்கள் அதை அங்கு கொண்டுவருவதற்க்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் உள்ள படத்தில் (Wallpaper) உங்கள் மவுசை வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து அதில் கீழே இருக்கும் Properties ஐ கிளிக் செய்து மேலே உள்ள தலைப்பில் Deskstop என்பதை தேர்ந்தெடுத்து கீழே உள்ள Customize Desktop என்பதை கிளிக் செய்து அதில் மேலே My Computer என்ற இடத்தில் உள்ள சிறிய பாக்ஸில் கிளிக் செய்து அதில் டிக் வருகிறதா என்று பார்த்துவிட்டு டிக் வந்துவிட்டால் கீழே உள்ள Ok என்ற பட்டனை அழுத்தி அதை மூடிவிடவும்.

இப்பொழுது My Computer என்பது உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் கண்டிப்பாக வந்திருக்கும்.


சரி அடுத்த பாடத்தில் மீண்டும் சந்திப்போம்.

3 comments:

 1. unkalutaya bataipu valara en valthukal
  Rahim

  ReplyDelete
 2. assalamu alaikkum
  ungkaludaiya intha nalla ennam varaveerkirean

  ReplyDelete
 3. அன்பு மிக்க கான் அவர்களுக்கு ...மகிழ்வான வணக்கம் !எப்படி பாராட்டுவதே என்றே தெரியவில்லை ..! உங்களின் இந்த முயற்சி .. என்னைப் போன்ற. கணினியைப் பற்றிய ஆரம்ப நிலையில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிக மிக உதவியாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை !வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் !

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்