உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Saturday 3 March 2012

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் கேள்விபதில் (பாகம் 1)

நண்பரின் கேள்வி:

வணக்கம்

ஒரு சந்தேகம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி MS -WORLD ல டைப் பன்ன சொல்ல

ஒரு சிம்பல் அனைத்து பகுதியிலும் வருகிறது அதை போக்க என்ன செய்யவேண்டும்


நன்றி

தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:

நண்பரே நீங்கள் வேர்டில் டைப் செய்யும்பொழுது ஒரே சிம்பல் திரும்ப திரும்ப வருவதாக இருந்தால் அதனை ஒரே கிளிக் மூலம் அகற்ற ஒரு வழி உள்ளது.

முதலில் நீங்கள் டைப் செய்த வேர்டு பைலை ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் டைப் செய்த செய்தி முழுவதையும் Ctrl மற்றும் A பட்டனை அழுத்தி (Ctrl+A) அந்த செய்தி முழுவதையும் செலெக்ட் செய்துகொள்ளுங்கள். பிறகு Ctrl+F மூலம் Find என்ற தட்டை ஓப்பன் செய்யுங்கள். அதில் Replace என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து கீழே திரும்ப திரும்ப வரும் அந்த எழுத்தை டைப் செய்து கீழே உள்ள Replace All என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான். அனைத்தும் மறைந்துவிடும்.


- அன்புடன்: கான்









2012-01-14_185757.jpg


நண்பரின் கேள்வி: 
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை எணக்கு ஒரு சந்தேகம் nero software உடன் மற்றொரு cd drive software ஐ யும் பயன் படுத்தலாமா? please tell me. 



தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:


நன்றி ! நண்பரே...
Nero சாப்ட்வேர் CD மற்றும் DVD யை காப்பி செய்யவும் மற்றும் mp3, Video, Software போன்றவற்றை காப்பி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள்.

இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இருக்கும்பொழுது இன்னொரு காப்பி செய்யும் மென்பொருளையும் நீங்கள் தாராலமாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

CD மற்றும் DVD யை காப்பி செய்யவும் மற்றும் mp3, Video, Software போன்றவற்றை காப்பி செய்யவும் பயன்படுத்தப்படும் வேறொரு சிறந்த மென்பொருள் Ashampoo Burning Studio என்பதாகும். இதுவும் சிறந்த மென்பொருள்தான். இதனையும் நீங்கள் தாரலமாக பயன்படுத்தலாம்.


- நன்றி ! அன்புடன்: கான்




நண்பரின் கேள்வி:
my computer is L G ...64 bit 4 GB RAM....H D 500 '.==I5 WINDOWS 7
==STARTING TIME 5 MINUTES AFTER OPEN WINDOWS SAMEPROBLEM LOG OFF TIME
 core..i5 pls help me net also no speed



தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:
LG Brand 
i5 Processor 
Windows 7 64  Bit
 4 GB Ram 
HD 500 

இந்த Configuration செட்டப் உள்ள  கம்ப்யூட்டர் சிறப்பாக அதிக வேகத்துடன் செயல்படக்கூடியது. இத்தகைய செட்டப் கொண்ட கம்ப்யூட்டர் 5 நிமிடம் தாமதமாக ஓப்பன் ஆவதும் 5 நிமிடம் கழித்து சட்டவுன் ஆவதுமாக இருந்தால் அது நான் கீழே கொடுத்துள்ள சில காரணங்களால் இருக்கலாம். அதை நான் சொல்லி இருக்கும் முறைப்படி சரி செய்து பாருங்கள். 

காரணம்:
நீங்கள் விண்டோஸ் 7 ஆபரேடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும்பொழுது ஏதாவது தடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது ஆபரேடிங் சிஸ்டம் சரியாக இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும் அதன் டிரைவர்ஸ் இன்ஸ்டால் செய்யும்பொழுது குறிப்பாக வீடியோ டிரைவ் இன்ஸ்டால் செய்யும்பொழுது முதலில் தடங்கள் ஏற்பட்டு பிறகு அதனை மறுபடியும் இன்ஸ்டால் செய்து இருக்கலாம். அதனால் இந்த தாமதம் இருக்கலாம்.

இதனை சரி செய்வதற்கும் விண்டோஸ் 7 OS ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்து மறுபடியும் சரியாக டிரைவர்களை அப்டேட் செய்துதான் பார்க்கவேண்டும். 

காரணம் :
உங்கள் கம்ப்யூட்டர் RAM அல்லது Hard Disk இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் இந்த ஸ்லோ ஏற்படலாம். கம்ப்யூட்டர் மற்றும் RAM புதிதாக இருந்தால் பிரச்சனை இல்லை. பழையது என்றால் RAM ஐ கழட்டி Dust Cleaner மூலம் Clean செய்துவிட்டு மறுபடியும் இணைத்து ஸ்டார்ட் செய்து பார்க்கலாம். 

ஹார்ட் டிஸ்க் பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு முறை பார்மெட் செய்து பார்க்கும்பொழுதே தெரிந்துவிடும். பார்மெட் செய்யும் நேரத்தில் C டிரைவ் அழிக்கப்படும் நேரத்தில் கம்ப்யூட்டர் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டால் ஹார் டிஸ்க்கில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இருந்தால் ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவது நல்லது. 

அதனால் முதலில் ஒரு முறை பார்மெட் செய்து டிரைவர்களை சரியாக இன்ஸ்டால் செய்து பாருங்கள். அடுத்து RAM ஐ சுத்தம் செய்து பயன் படுத்தி பாருங்கள். அடுத்து ஹார்ட் டிஸ்க்கை மாற்றி பாருங்கள். இவை அனைத்து சரியாக இருந்தும் ஸ்லோவாக இருப்பதாக தெரிந்தால் மறுபடியும் என்னை தொடர்புகொள்ளுங்கள். 

அன்புடன்: கான்

கேள்வி பதில்கள் அடுத்த பதிவில் தொடரும்......