உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 21 September 2009

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் எப்பொழுதும் Standard Buttons மற்றும் Address Bar உங்களுக்கு தெரியும் வகையில் இருக்கும்.இவை திடீரென கானாமல் போய்விட்டால் அதை எப்படி மறுபடியும் கொண்டுவருவது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:

இந்த படத்தில் உள்ள போல்டரில் Standard Buttons மற்றும் Address Bar இல்லை.இதனை மறுபடி எப்படி கொண்டுவருவது. உங்கள் போல்டரில் மேலே உள்ள View என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் Toolbars என்பதை கிளிக் செய்தால் அங்கே கீழே படத்தில் உள்ளதுபோல் இன்னொரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் Standard Buttons மற்றும் Address Bar என்ற் இரண்டு இடத்திலும் டிக் இல்லாமல் இருக்கும்.அந்த இரண்டு இடத்திலும் நீங்கள் டிக் செய்துவிட்டால் போதும். உங்களுக்கு கானாமல் போன அந்த இரண்டும் வந்துவிடும்.

2 comments:

 1. My hp dv6120 core i7 model latest laptop sir but every 10mintue
  Automatically wifi connection discountinue sir what can I do sir

  ReplyDelete
 2. உங்கள் Wifi Network Connection பத்து நிமிடத்திற்கு ஒரு முறை Disconnect ஆவதாக இருந்தால் முதலில் உங்கள் Wifi Modem சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவேண்டும். மற்றவர்களுக்கு அதே மோடத்தில் Wifi ல் பிரச்சனை இல்லை என்றால் மோடம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

  அடுத்ததாக உங்கள் லேப்டாப்பில் Wirless Network Drivers சரியாக இண்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். அதில் சந்தேகம் இருந்தால் இந்த www.hp.com தளத்திற்கு சென்று உங்கள் மாடல் நம்பரை டைப் செய்து ஆபரேடிங் சிஸ்டம் என்ன என்பதை தேர்ந்தெடுத்து Wifi Driver ஐ மட்டும் டவுண்லோடு செய்து மறுபடியும் இன்ஸ்டால் செய்து பாருங்கள்.

  இதன் பிறகும் உங்களுக்கு அதே பிரச்சனை இருப்பதாக தெரிந்தால் உங்கள் Wifi Hardware அதாவது உங்கள் லேப்டாப் உள்ளே பொருத்தப்பட்டுள்ள வயர்லெஸ் நெட் ஒர்க் சிப் சரியாக பொருத்தப்படாமலோ அல்லது சரியாக இயங்க முடியாத சூழ்நிலைக்கு போய் இருக்கலாம். ஹார்டுவேர் சிப்பை மாற்றி பாருங்கள்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்