உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 26 April 2010

கம்ப்யூட்டரை பயன்படுத்த பயப்படவேண்டாம் !


கம்ப்யூட்டரை நீங்கள் இப்பொழுது சிறிது காலமாகத்தான் பயன்படுத்த தொடங்கி இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் கம்ப்யூட்டரில் சில விசயங்களை தெரிந்துகொள்வதும் மனதில் அதை பதியவைப்பதும் ஒன்னும் சிரமமான காரியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்த பழகிவிடுகிறது அப்படி இருக்கும்போது நமக்கு ஏன் முடியாது. முதலில் நம்பிக்கை வையுங்கள்.

மேலும் இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடித்தவரின் பெயர் பில்கேட்ஸ். இதை நீங்கள் கேள்விப்பட்டும் இருக்கலாம் கேள்வி படாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேரை இவர் கண்டுபிடித்ததால் தான் உலக பணக்காரர் ஆகிவிட்டார். ஏன் தெரியுமா? இவர் கண்டுபிடித்த இந்த சாப்ட்வேரின் உதவியால் இன்று ஒரு சின்ன குழந்தைகூட கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்பதால்தான். இவ்வளவு எளிய முறையில் அவர்கண்டுபிடித்த பிறகும் நாம் அதைப் பழக சிரமப்பட்டோம் என்றால் அவர் இவ்வளவு புகழ் அடைந்ததற்க்கு அர்த்தமே இல்லை. இதை நீங்கள் மனதில் கொண்டால் போதும் கூடிய சீக்கிறம் நீங்கள் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வது மட்டுமல்ல கம்ப்யூட்டர் பற்றிய சில விளக்கங்களை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவிற்க்கும் தேற்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

முக்கியமாக கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்துபவருக்கு மனதில் ஏற்ப்படும் தயக்கம் என்னவென்றால் நாம் ஏதாவது செய்யப்போக அதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரில் உள்ள சில முக்கியமான பைல்கள் மற்றும் ப்ரோகிராம்கள் அழிந்துவிடுமோ என்ற பயம்தான்.

நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதில் விபரம் தெரியாத உங்களால் எந்த ஒரு பைலும் அழிந்துவிடாது. எந்த ஒரு ப்ரோக்ராமும் கானாமல் போய்விடாது. ஏனென்றால் விபரம் தெரியாதவர் தவறுதலாக அழித்துவிடும் அளவுக்கு கம்ப்யூட்டர் ஒன்றும் பாதுகாப்பு இல்லாதவகையில் உருவாக்கப்பட்டது அல்ல.

நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலை உங்கள் மவுசால் தொடுகிறீர்கள் என்றால் அது உடனே அழிந்துவிடாது. அதை தொட்டபிறகு நீங்கள் கீ போர்டில் Delete என்ற பட்டனை தொடவேண்டும். அப்பொழுதும் அது அழிந்துவிடாது.

அதன் பிறகு Are you sure you want to send ‘sheet’ to the Recycle Bin? என்ற கேள்வியை கேட்க்கும். இதன் விளக்கம் என்னவென்றால் இந்த பைலை நிச்சயமாக குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோகத்தான் வேண்டுமா ? என்று கம்ப்யூட்டர் உங்களை கேட்க்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் Yes என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோய்விடும் No என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை அழிக்காமல் விட்டு விடும். சரி நீங்கள் இப்பொழுதும் தவறுதலாக Yes என்ற பட்டனையே தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பைல் எங்கு போகும். உங்கள் கம்ப்யூடரை திறந்த உடன் தெரியும் படத்தில் (Wallpaper) அதாவது கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து வைத்த ஆரம்ப நிலையில் உள்ள Recycle Bin என்ற இடத்துக்கு போகும்.

சரி, இப்பொழுது உங்களால் தவறுதலாக அழிக்கப்பட்ட பைலை நீங்கள் திருப்ப பழைய இடத்துக்கு கொண்டுவரவேண்டும். அதற்க்கு என்ன செய்யவேண்டும். இந்த குப்பைத்தொட்டி என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Open என்ற இடத்தை தொடுங்கள் உடனே உங்களால் அழிக்கப்பட பைல் குப்பைத்தொட்டியில் போய் சேர்ந்திருப்பது உங்களுக்கு தெரியும்.

அடுத்து நீங்கள் குப்பைத்தொட்டியில் உள்ள உங்கள் பைலை உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Restore என்ற பட்டனை தொட்டால் உடனே நீங்கள் அழித்த பைல் அது இருந்த பழைய இடத்திற்க்கு போய்விடும்.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு விசயம் புரியும். என்னென்ன ? அதாவது கம்ப்யூட்டரை பற்றி அதிகமாக தெரியாத நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஒரு பைலை அழித்துவிட முடியாது. அப்படி அழித்தாலும் அதை குப்பைத்தொட்டியில் போய் எடுத்துவிடலாம் என்று. இனி என்ன பயம். ஒரு பைலை தவறுதலாக அழிக்கும் நீங்கள் குப்பைத்தொட்டியிலும் போய் அதை முழுவதுமாக அழித்துவிடவா போகிறீர்கள். இல்லவே இல்லை. அதனால் மற்றவர் வைத்திருக்கும் பைல்களை தவறுதலாக அழித்துவிடுவோம் என்ற பயத்தை விட்டுவிடுங்கள்.

அடுத்து ஏதாவது ஒரு ப்ரோக்ராமை நாம் விபரம் தெரியாமல் கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துவிடுவோமோ என்று சிலருக்கு பயம் இருக்கும். இதுவும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக நடந்துவிடாது. ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள WindowsXP ஐ நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் மவுசை வைத்து அழித்துவிட முடியாது. அதற்கு அதிகப்பபடியான ட்ரைனிங் உங்களுக்கு வேண்டும். அடுத்ததாக நீங்கள் டைப்செய்து சேர்த்துவைக்கும் ப்ரோக்ராம் Microsoft Word, Excel, word, Powerpoint, Access போன்றவற்றை உள்ளடக்கிய Microsoft Office ஐயும் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது ஏனென்றால் இந்த ஆபீஸ் ப்ரோக்ராமை நீங்கள் கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கவேண்டும் என்றால் அதற்க்கு Control Panel என்ற ஒரு புதிய இடத்துக்கு செல்லவேண்டும்.

இதற்கு மேல் கம்ப்யூட்டரில் நீங்கள் அழித்துவிட்டு அழக்கூடிய அளவிற்க்கு வேறு எந்த முக்கிய ப்ரோக்ராமும் இல்லை.

அதனால் தயக்கம் இல்லாமல் பயம் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன் படுத்துங்கள்.

வெற்றி நிச்சயம்.

அன்புடன்: கான்

3 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரா உங்கள் கணணி பற்றிய ஆரம்ப பாடம் ரொம்ப அருமையாக உள்ளது அனைபேரும் இலகுவாக பழக கூடிய வகையிலே ரொம்ப இலகுவான வழிமுறை மாசா அல்லாஹ் உங்கள் முயற்சி பெரும் வெற்றி அடைய இறைவன் துணை புரிவானாக

    ReplyDelete
  2. கணிணி பற்றி பயப்படுபவருக்கு நீங்கள் கூறிய விளக்கம் பயன் தருவதோடு .நம்பிக்கையும் தருகிறது

    ReplyDelete
  3. கணீனி பற்றிய ஆரம்ப பாடம் மிக அருமையாக இருந்தது நன்றி.....

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்