Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.
லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...
Laptop Configuration
Processor
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/
இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.
RAM
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
HARD DISK
அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/
போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
Operating System ( OS)
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது. http://tamilcomputertips.blogspot.com/
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.
இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
கணினி வாங்க நினைக்கும் புதிய கணினி பயனாளிகளுக்கு தேவையான,மிகவும் பயன்படும் பதிவு.நன்றி.நன்றி.
ReplyDeleteசிறந்த பதிவு. நல்ல தகவல்கள்.
ReplyDeleteR.Elan. said...
ReplyDeleteகணினி வாங்க நினைக்கும் புதிய கணினி பயனாளிகளுக்கு தேவையான,மிகவும் பயன்படும் பதிவு.நன்றி.நன்றி.
/// நன்றி ! நண்பரே.....
DrPKandaswamyPhD said...
ReplyDeleteசிறந்த பதிவு. நல்ல தகவல்கள்.
//// நன்றி ! நண்பரே
நன்றி
ReplyDeleteஅன்பான நன்பர் அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு முழுமையான மைக்ரொ எக்ஸெல் pdf பைலாக அனுப்பவும் நன்றி
ReplyDeleteI am surprised to see that you didnt mention anything about AMD processors. They are as powerful as Intel processors with less price. So if you are in tight budget but need need a good laptop, then i would advice to go for AMD processors?
ReplyDeleteDear Khan
ReplyDeleteSuper info!
I learned some new info :)
Regards
Hariharan Velu (hari11888.blogspot.com)
எந்த பிராண்டு வாங்கினாலும் , வாங்கின பின்னாலே , அந்த பிராண்டே வாங்கி இருக்கலாமோன்னு தோணுது சார்!
ReplyDeleteகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு
thanks for your useful blog
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDelete100% Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
VERY GREAT THANKFUL FOR YOUR POST FOR PUBLISH TO EVERYBODY THANKYOU SOMUCH.
ReplyDeleteநண்பரே . அருமையான தகவல்கள் . எல்லோருக்கும் பயன்படும் . எனக்கும் பயன்பட்டது. நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeletetnks
DeleteThakz Mr.Khan, this very good and useful blog
ReplyDeletevery good and usefull information thanks - rajakamal
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஉங்கள் மூலம் இந்த பயனுள்ள தகவல்கள் மேலும் பலரை அடைந்து அவர்களும் பலன் அடைவார்கள் என்பதில் மகிழ்ச்சியே.
நன்றி ! அன்புடன்: கான்
சிறந்த பதிவு
ReplyDeletenalla thahaval
ReplyDeleteall infos corect.
ReplyDeleteKeep it up...
இங்கு வந்து பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி!
ReplyDeleteஅன்புடன்: கான்
நன்றி தோழரே....
ReplyDeletewhere can i learn computer assembling&trouble shooting....practically.desk top&lap top.
ReplyDeletePlease suggest good&cost effective institute.
I live in chennai,anna nagar.
Best regards KHAN BHAI.
Abdul
நீண்ட, மிக தெளிவான, விளக்கங்களுடன் கூடிய பதிவு நண்பரே...
ReplyDeletevery good friend thanks
ReplyDeleteபின்னூட்டம் கொடுத்து இந்த பதிவை சிறப்பு அடைய செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஸலாம்.
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டுள்ள Brandஇல் ASUS இல்லையே இந்த வகை பிராண்டு வாங்கலாமா.?
(ACER) பிராண்ட் லேப்டாப்பில் லினக்ஸ் உபயோகிக்க முடியுமா.?
லினக்ஸை எப்படி டவுன்லோட் செய்வது எப்படி இன்ஸ்டால் செய்வது..?
அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
ReplyDeleteநான் இங்கு குறிப்பிட்ட பிராண்டுகள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான பிராண்டுகள்.
ASUS போன்று இன்னும் எத்தனையோ பிராண்டுகள் மார்க்கெட்டில் இருக்கிறது. ஆனால் எதை நீங்கள் வாங்கினாலும் நான் கொடுத்துள்ள Configuration ஐ சரியாக பார்த்து வாங்கினால் பயன்படுத்த சிறப்பாக இருக்கும்.
லினக்ஸ் டவுண்லோடு செய்ய இந்த லிங்கில் செல்லுங்கள்.
டவுண்லோடு செய்யும் முறை PDF இணைத்து இருக்கிறார்கள்.
http://www.linuxmint.com/download.php
மேலும் லினஸ் பற்றிய கேள்விகளுக்கு இந்த தளத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும்
http://www.suthanthira-menporul.com/
நன்றி ! அன்புடன்: கான்
Agape Tamil Writer said...
ReplyDeleteஅன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி
/////////////////////////////////////////////
நன்றி ! நண்பரே இணைத்துவிட்டேன்
/////////////////////////////////////////////
நல்ல பயனுள்ள தகவல்கள் மடி கணணி வாங்கியதும் என் அணுபவத்தை தெரிவு செய்கிறேன்.நன்றி வணக்கம்.
ReplyDeletemiha miha arumaiyana padhivuhal anna ....inda payanulla thahavalhalai thandamaiku endrendrum nandrihal anna
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள்
ReplyDeleteநம்ம தளத்துக்கும் வாங்க!
ReplyDeleteதயங்காம கருத்த சொல்லுங்க!
நல்லாப்பழகுவோம்!
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் , என்னுடைய computer ரில் 1.5 gp ram உள்ளது p4 processor 3.06ghz உள்ளது .
ReplyDeleteநான் hard drive மாற்ற உள்ளேன் , எத்தனை gb மாற்றலாம் என்று கூறவும் .
நன்றி
உங்கள் நண்பர்
ராமசந்திரன்
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநண்பர் ராமசந்திரன்...
நீங்கள் வைத்திருக்கும் P4 Processor 3.0 GHz கம்ப்யூட்டருக்கு குறைந்தது 80 GB Hard Disk அல்லது கூடுதலாம் 160 GB Hard Disk மாற்றினால் போதுமானது.
நன்றி ! அன்புடன்: கான்
மிகவும் சிறந்த பதிவு நண்பரே... பலருக்கு இது குறித்த விளக்கமின்மையால் ஏமாறுகின்றனர்...உங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பானதும் தரமானதுமாகும். உங்கள் பதிவுலக பணி தொடரட்டும்.
ReplyDeleteஅன்புடன் தி.நிஷான்
http://tnishan.blogspot.com
Hi ஏன் பெயர் இக்ராம் எனக்கு இங்கிலீஷ் வலைத்தளம் தமிழ்லுக்கு மாற்ற வாண்டும் அதக்கு softwers இருக்கிறதா
ReplyDeleteஇருந்தால் என் மின்னஞ்சல் க்கு அனுப்பவும்
மின்னஞ்சல் ID: ikram921@gmail.com
பயனுள்ள தகவல்கள் மேலும் உங்கள் பணி சிறப்படைய வாழ்த்துகள்.
ReplyDeletethanks for your information & advaice
ReplyDeleteஹலோ கான் அண்ணா நீங்க செய்ற இந்த பணி நீடிக்க இறைவனை பிராத்திக்கிறேன் ............நன்றி அண்ணா
ReplyDeleteவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
salam brother, my name is Imam
ReplyDeletewhen i read your website i really amazed and surprised, bcoz this much detailed information nobody cant post,, thank you very much..
specially you are making in Tamil its so good and easy to understand me, so im very glad for your every post,, I'm always waiting for your new post,, thank you again,, bro.. please continue your worth service.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.....
ReplyDeleteஎல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
விரைவில் புதிய பாடங்களை பதிய முயற்ச்சி செய்கிறேன்.
நன்றி ! அன்புடன்: கான்
THANK YOU MY DEAR FRIEND.
ReplyDeletegood
ReplyDeletethanks friend
ReplyDeleteThanks
ReplyDeletei like this site
ReplyDeletei like this site
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.கான்,
அருமையான பயனுள்ள பதிவு. அல்லாஹ் உங்களது கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்தியருள்வானாக!
sir thank you for your valuable information,,,,,i have more knowledge getting from you,,,,thank you so much sir,,,,
ReplyDeleteஇங்கு வருகைதந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
பயனுள்ள பதிவு உங்கள் பணி சிறப்படைய வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமையான தகவல்கள்..... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .......
மேலும் ஒரு புதிய லேப்டாப் வாங்கிய பிறகு அதிலிருந்து நாம் முதலில்
Recover DVD and OS Bootable dvd எப்படி தயார் செய்வது? என்பதை பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . . . . . இன்ஷா அல்லாஹ். .. . .. .
உங்கள் சகோதரன்
நூர் முகம்மது
hi anna very very good news i thank you very much
ReplyDeletemigavum nanri
ReplyDeleteAssalamu Allaikum,
ReplyDeleteI'm Mohamed Ilham . I can get lot of information in this Page.First a fall I thanks you.I want to know Some time computer is restarting why?
நன்றி ! நண்பரே...
Deleteநீங்கள் புதிதாக ஏதாவது ஒரு சாப்ட்வேர் தவறுதலாக இன்ஸ்டால் செய்திருந்தால் அதனால் அடிக்கடி ரிஸ்டார்ட் ஆகும். இல்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் ராம் கெட்டுப்போவதால் அடிக்கடி ரீஸ்டார் ஆகும். அதனால் கம்ப்யூட்டர் ராம் ஐ கழட்டி நன்றாக துடைத்துவிட்டு மறுபடியும் மாட்டி பயன்படுத்தி பாருங்கள். அல்லது புதிதாக வாங்கி போட்டு பாருங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
Very Good Tips sir, With your tips I have purchased a new laptop. It is very useful for me.A.Paluchamy.General Manager
ReplyDeleteDear A.Paluchamy,
DeleteThank you for your valuable comments.
என்னுடைய இந்த பதிவின் மூலம் நீங்கள் பயன் அடைந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்: கான்
HI Sir,
ReplyDeleteI Learn Something from ur Tips, Really Super Thanks for ur information,
உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே...
Deleteஅன்புடன்: கான்
Hai sir,
DeleteThanks, very useful information.
கணினி வாங்க நினைக்கும் புதிய கணினி பயனாளிகளுக்கு தேவையான,மிகவும் பயன்படும் பதிவு.நன்றி.நன்றி.
ReplyDeleteகணினி வாங்க நினைக்கும் புதிய கணினி பயனாளிகளுக்கு தேவையான,மிகவும் பயன்படும் பதிவு.நன்றி.நன்றி
ReplyDeleteTHANKS FOR YOUR SERVICE. WHATS THE DIFFERENCE BETWEEN LAPTOP & DESKTOP COMPUTER
ReplyDeleteWOW அருமையான தகவல்கள் . எல்லோருக்கும் பயன்படும் . எனக்கும் பயன்பட்டது. நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteVery good tips to the buyers
ReplyDeleteThank u
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிக்க நன்றி.
ReplyDeleteசெல்லப்பா
அடுத்த சம்பளத்தில் ஒரு laptop வாங்கும் திட்டம் வைத்துள்ளேன். தகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள். நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான தகவல் சார் என்னுடைய லேப்டாப் start பட்டன் press பண்ணி வெகுநேரத்திற்கு பிறகு(2 நிமிடங்களுக்கு மேலாக) window open ஆகின்றது என்ன காரணம் என்பது தெரியவில்லை
ReplyDeleteநல்ல பதிவு :-)
ReplyDelete//பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த இடத்தில "தரம் குறைந்த" என்பதற்கு பதிலாக "திறன் குறைந்த" என்று எழுதி இருந்தால் பொருத்தமாக இருக்கும் நண்பரே :-)
இப்ப விண்டோஸ் 8 வந்திட்டு அதயும் போட்டா நல்லா இருக்கம்.
ReplyDeleteஇங்கு வருகை தந்து சிறந்த கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
உங்கள் அடுத்த திட்டம் என்ன?
Deletebalafce@gmail.com
nice idea
ReplyDeleteதன்னம்பிக்கையோடு மடிக் கணிணி வாங்குவதற்கு ஏற்ற தகவல்கள்.நன்றி.
ReplyDeletearumaiyana thakaval nanri Nan windows7 Home Basic vankitten mathalama ?
ReplyDeleteதாரலமாக Home Basic ஐ மாற்றலாம்......
ReplyDelete- கான்
அண்ணா நான் வாங்கியது compas windows7 Home Basic மெமரி 280 17
ReplyDeleteஇதனால் நான் தனியா 500GB வாங்கினேன் எனது லேப்டாப் உள்ள எல்லாத்தையும் copy பன்னினேன் தர்ப்போது அதயும் இனைச்சாத்தான் லேப்டாப் work ஆகுது அத இனைக்காம அனைத்து சாப்ட்வேர் ரும் வர என்ன செய்யனும்(எனக்கு படிப்பு குரைவுதான் ஆர்வத்துல வாங்கியதுதான் லேப்டாப் )
என்email chellamkamuthi@gmail.com
ReplyDeleteநீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்து மென்பொருள் அனைத்தும் லேப்டாப்பில் உள்ள ஹார்டிஸ்கில் மட்டும்தான் இருக்கும். அது தனியாக வாங்கிய 500 GB ஹார்டிஸ்கில் இருந்து ஓப்பன் ஆகாது. எனவே நீங்கள் அந்த 500 ஜிபி ஹார்டிஸ்கில் உங்களுக்கு தேவையான ஆடியோ வீடீயோ மற்றும் இன்ஸ்டால் செய்யாமல் முழுமையாக உள்ள மென்பொருள்களை மட்டும் காப்பி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteலேப்டாப்பில் உள்ள ஹார்டிஸ்கில் புரோகிராமை மட்டும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
அருமையான பதிவு கான் தற்செயலாக தங்கள் பதிவுகளை நெட்டில் பார்க்க நேர்ந்தது. அனைத்து பதிவுகளும் மிக அருமை. தங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் நண்பா, பயனுள்ள தகவல்கள். நன்றி.நன்றி.......
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
ReplyDeleteவருகை தந்த அனைவருக்கும் நன்றி !
அன்புடன்: கான்
நன்றி
ReplyDeleteமிகவும் அருமையாக தகவல்
ReplyDeleteகம்ப்யூட்டர் ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்கு, பேஸ்புக் ட்ரிக்ஸ் தமிழில் அறிந்துகொள்ள
www.computertricksintamil.blogspot.in
Thanks very useful this Web.
ReplyDeleteMaru from Canada-2014
very usefull
ReplyDeletethank u
அன்பு சகோதரா எனக்கு கம்ப்யூட்டர் அனுபவம் கிடையாது .ஆனால் பழகி கொள்ள ஒரு தரமான லேப்டாப் வாங்க விரும்புகிறேன் .எதை வாங்கலாம் .பட்ஜெட் 25,000 க்குள் .....தயவுசெய்து jakubarali85@gmail.com முகவரிக்கு பதில் தாருங்களேன் ..
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள்
ReplyDeleteநன்றி அண்ணா
ReplyDeleteஇதை பகிர்ந்து காெள்கிறேன்
hai sir, how to change window xp to windows 7 os, i tried so many times. but not change.
ReplyDeleteநல்ல பதிவு அண்ணா
ReplyDelete