உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Wednesday 26 October 2011

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?





விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய விளக்கம் இந்த பதிவில் சென்று பாருங்கள் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?


ஒரு கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல இஸ்டாலேசன் முடிந்த பிறகு அதன் டிரைவர்ஸ் அப்டேசன் மிக மிக முக்கியம். டிரைவர்ஸ் அப்டேசன் செய்ய உங்களுக்கு தெரியவில்லை என்றால் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை.

சரி இந்த டிரைவர் அப்டேசனால் என்ன பயன் ?

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீகர், வீடியோ டிஸ்பிளே, யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இயங்கவேண்டும் என்றால் இந்த டிரைவர் அப்டேசனை சரியாக செய்தாகவேண்டும்.http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நீங்கள் பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்கும்பொழுது இந்த டிரைவர் அப்டேசனை பற்றிய பிரச்சனை கொஞ்சம் குறைவு.


ஏனென்றால் ஒவ்வொரு பிராண்டர் கம்ப்யூட்டருக்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.



HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

இந்த ஒவ்வொரு பிராண்ட் பெயரையும் நீங்கள் கிளிக் செய்தால் அதனுடைய இணைய தளத்தை நீங்கள் பார்க்கலாம்.

முன்பெல்லாம் பிராண்டட் கம்ப்யூட்டர்களை விலைக்கு வாங்கும்பொழுது  டிரைவர் CD ஒன்று அந்த கம்ப்யூட்டர் பேக்கிங் உடன் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது கம்ப்யூட்டர் டிரைவர் CD அதன் பேக்கிங் உடன் வருவதில்லை. User Manual ல் அந்த பிராண்ட் கம்ப்யூட்டரின் இணைய தளம் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு இங்கு சென்று டிரைவரை அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். எனவே கம்ப்யூட்டர் டிரைவர்களை அப்டேட் செய்வதை பற்றி நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிராண்ட் இணைய தளத்திலும் Support & Drivers என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மாடலுக்கு தகுந்த ஆடியோ, வீடியோ மற்றும் அனைத்து விதமான டிரைவர்களையும் அங்கிருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

சரி பிராண்டட் கம்ப்யூட்டர் இல்லாமல் அசெம்பிள் கம்ப்யூட்டராக இருந்தால் நாம் எப்படி அதன் டிரைவரை இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்வது ?
http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நாம் பிராண்டட் கம்ப்யூட்டர் பயண்படுத்தினாலும் அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும் அதில் Intel Chip set மற்றும் Intel Mother Board போன்றவையே பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் அசெம்பிள் கம்ப்யூடருக்கு அதன் டிரைவர்களை அப்டேட் செய்யவேண்டி இருந்தால் www.intel.com என்ற இணைய தளம் சென்றாலே போதும்.   இங்கு உங்கள் கம்ப்யூட்டரின் Mother Board மற்றும் Processor க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் கிடைக்கும்.

சரி நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள இந்த Intel Mother Board என்ன மாடல் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது ?

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu வில் Run என்பதை கிளிக் செய்து msinfo32.exe என்று டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே ஒரு தட்டு ஓப்பன் ஆகும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன மாடல் Mother Board இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு அந்த மாடலுக்கு தகுந்த மாதிரி Intel இணைய தளத்தில் நீங்கள் டிரைவர்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

இவை அனைத்தும் நீங்கள் புதிதாக ஒரு கம்ப்யூட்டரை பார்மெட் செய்து இண்ஸ்டால் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விசயங்கள் மட்டுமே.

 ஆனால் பழைய கம்ப்யூட்டரை நீங்கள் பார்மெட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் முதலில் நீங்கள் பார்மெட் செய்வதற்கு முன்னால் அந்த டிரைவர்களை காப்பி எடுக்கவேண்டும். அதாவது Driver Backup என்பது பழைய கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்கு முன்னால் மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த டிரைவரை பேக்கப் செய்வதற்கு இலவசமாக சில மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் டிரைவரை பேக்கப் செய்துகொள்ளலாம்.

இந்த லிங்க் மூலம் நீங்கள் Driver Max என்ற மென்பொருளை டவுண்லோடு செய்து ஒரு USB Pen Drive ல் அதனை வைத்துக்கொள்ளுங்கள். 
Drive Max for Driver Backup

பழைய கம்ப்யூட்டர் எதுவானாலும் அதனை பார்மெட் செய்வதற்கு முன்னால் நீங்கள் இந்த Drive Max மென்பொருளை இண்ஸ்டால் செய்து இதன் மூலம் Drivers ஐ காப்பி செய்து அதனை அந்த USB Pen Drive ல் சேமித்துக்கொண்டு பிறகு பார்மெட் செய்யுங்கள். பிறகு விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த Drive Max ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்து நீங்கள் காப்பி செய்து வைத்த Drivers ஐ Update செய்துகொள்ளுங்கள்.

இந்த டிரவர்ஸ் அப்டேசன் பற்றிய கூடுதல் தகவலுக்கு என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


நன்றி ! அன்புடன்: கான்

24 comments:

  1. பயனுள்ள தொழில்நுட்ப பதிவு..!!நன்றி..!! :)

    ReplyDelete
  2. நன்றி ! தேவா......

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. நன்றி............................

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    அவசியமான பதிவு மிக்க நன்றி கான்

    ReplyDelete
  5. அருமையான பதிவு.

    ReplyDelete
  6. மிக அருமை. நீங்கள் வாக்களித்தபடியே இந்த பதிவின் மூலம் ட்ரைவெர்ஸ் குறித்த தகவல்களை தந்துவிட்டீர்கள். இதன் பலனையும் அருமையையும் இதனை செயல் படுத்திய பிறகும் ஒரு நன்றியை தெரிவித்துக்கொள்வேன். இப்பொழுது இந்த பதிவுக்கு மிகவும் நான்றி.
    அப்துல்கஃபூர்

    ReplyDelete
  7. சண்முகம் said...

    நன்றி............................
    27 October 2011 00:25

    வருகைக்கு நன்றி ! நண்பர் சண்முகம்.

    ReplyDelete
  8. thariq ahamed said...

    அஸ்ஸலாமு அழைக்கும்
    அவசியமான பதிவு மிக்க நன்றி கான்


    வருகைக்கு நன்றி ! நண்பர் தாரிக்..

    ReplyDelete
  9. atchaya said...

    அருமையான பதிவு.


    வருகைக்கு நன்றி ! அட்சயா.......

    ReplyDelete
  10. suppudu said...

    நன்றி கான்..!!


    வருகைக்கு நன்றி ! நண்பரே....

    ReplyDelete
  11. Anonymous said...

    மிக அருமை. நீங்கள் வாக்களித்தபடியே இந்த பதிவின் மூலம் ட்ரைவெர்ஸ் குறித்த தகவல்களை தந்துவிட்டீர்கள். இதன் பலனையும் அருமையையும் இதனை செயல் படுத்திய பிறகும் ஒரு நன்றியை தெரிவித்துக்கொள்வேன். இப்பொழுது இந்த பதிவுக்கு மிகவும் நான்றி.
    அப்துல்கஃபூர்


    நன்றி ! நண்பர் அப்துல்கஃபூர்....

    உங்களுக்காக இந்த பதிவு கொடுத்த போதிலும் இந்த பதிவின் மூலம் பலருக்கு பயன் இருக்கிறது.

    இந்த பதிவை இட காரணமாக இருந்த உங்களுக்கு எனது நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  12. It's really useful job. Thanks Brother. By Hameed.

    ReplyDelete
  13. தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  14. நல்ல பதிவு நண்பரே...

    ReplyDelete
  15. thank you sir

    ReplyDelete
  16. adutha varudam windows xp stop seiyapadum endri microsoft arivithulladhu en kelvi enavendral licence irundhalum ilanalu m veru os ku marivida veanduma pls rly

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்