உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Sunday 9 May 2010

மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?



உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மைக்ரோசாப் ஆபீஸ் 2007 இன் உதவியோடு PDF பைல் உருவாக்குவது எப்படி ?

PDF பைல் என்றால் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

மென்பொருட்களை தயாரிக்கும் பல நிறுவனங்களில் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்று விளங்கும் சிறந்த ஒரு நிறுவனம் இந்த அடோப் நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வமான இணைய தளம் www.adobe.com என்பதாகும். இந்த நிறுவன தயாரிப்புகளில் முக்கியமான ஒரு மென்பொருள் அடோப் போட்டோசாப் என்பதாகும் இதனை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்த நிறுவனம்தான் இந்த அடோப் பி.டி.எப் ரீடர் என்பதையும் தயாரித்து PDF Reader என்ற மென்பொருளை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த பி.டி.எப் ரீடரை நீங்கள் டவுண்லோடு செய்ய இந்த http://www.adobe.com/downloads/ என்ற முகவரியை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள Get Adobe Reader என்ற பட்டனை அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த PDF Reader ஐ நீங்கள் டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் தான் நீங்கள் PDF பைல்களை ஓப்பன் செய்து அதில் உள்ள விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

சரி நமக்கு Microsft Word, Microsoft Excel போன்ற மென்பொருள்கள் இருக்கும்போது பி.டி.எப் பைலை PDF Reader மூலம் நாம் உருவாக்குவதால் நமக்கு என்ன லாபம் என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்கள் வேர்டு டாக்குமெண்டை ஒருவருக்கு நீங்கள் ஈமெயிலில் அனுப்பினால் அவர் அதனை எளிதாக திருத்தி அமைக்க முடியும். ஆனால் இந்த PDF மென்பொருளில் மாற்றி அனுப்பினால் அவரால் உங்கள் பைலில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

மேலும் நீங்கள் தமிழ்லில் ஒரு செய்தியை வேர்டில் டைப் செய்து அதனை PDF பைலாக மாற்றி அனுப்பினால் அப்படியே தமிழ் எடுத்துக்களை எந்த மாற்றமும் இல்லாமல் உங்கள் PDF பைலை பெறுபவர் பார்க்க முடியும். அவர் உங்கள் பைலை தமிழில் படிக்க வேண்டும் என்பதற்க்காக வேறு எந்த மென்பொருளையும் அவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டல் செய்ய தேவை இல்லை.

சரி PDF பைல் பற்றி விளக்கம் இதற்க்குமேல் உங்களுக்கு தேவை இல்லை.

இனி இந்த மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என பார்ப்போம்.

இந்த Save As PDF என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்க்கு முன்பாக உங்கள் மைக்ரோசாப் ஆபீஸ் வேர்டை ஓப்பன் செய்து Save As என்பதை கிளிக் செய்து பாருங்கள். இதில் PDF சம்பந்தமாக எந்த ஒரு குறிப்பும் இருக்காது.




சுட்டி



இப்பொழுது இந்த சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொண்டு அந்த Save As PDF என்ற மென்பொருளை டபுள் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். உடனே உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஒன்று ஓப்பன் ஆகும். இதில் நான் குறிப்பிட்டதுபோல Click Here to Accept the Microsoft Shareware License Tearms என்ற இடத்தில் உங்கள் மவுசால் கிளிக் செய்து டிக் வரவைத்துக்கொள்ளுங்கள். ( இதில் டிக் செய்வதால் நீங்கள் மைக்ரோசாப் ஆபீஸ் 2007 என்ற மென்பொருளை ஒரிஜினலாக உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து உள்ளதை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். )

சரி இதனை டிக் செய்ததும் உங்களுக்கு வலது பக்கம் உள்ள Continue என்ற பட்டன் கிளிக் செய்யும் வகையில் மாறி இருக்கும். அதனையும் கிளிக் செய்யுங்கள்.


கிளிக் செய்ததும் இன்ஸ்டால் செய்வதற்க்கு அடையாளமாக கீழே காண்பதுபோல் ஒரு தட்டு தோன்றும்.
அடுத்ததாக இன்ஸ்டால் செய்து முடிந்ததற்க்கு அடையாளமாக இந்த கீழ் காணும் தட்டு வந்திருக்கும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் உங்கள் மைக்ரோசாப் வேர்ட் டாக்குமெண்டை திறந்து Save As என்ற ஆப்சனுக்கு சென்று பாருங்கள் அதில் கீழே குறிப்பிட்டதுபோல் PDF என்று வந்திருக்கும். இனி நீங்கள் உங்களுக்கு தேவையான விசயங்களை உங்கள் வேர்ட் டாக்குமெண்டில் டைப் செய்துகொண்டு பிறகு Save As சென்று அதனை PDF பைலாக கீழே சொன்ன முறைப்படி மாற்றிக்கொள்ளலாம்.




பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்

7 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் என்னுயிர் நண்பா நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவுகளும் இதுவரை நாங்கள் அறிந்திடாத புதுமை தகவலாகத்தான் உள்ளது.அதேபோலதான் இப்பதிவும் நான் இதுவரை பயன் மடுத்தி வந்தது மைக்ரோசாப்ஆபீஸ் தான் ஆனால் உங்களுடைய இந்த அருமையான பதிவு என்ன ரொம்ப கவர்ந்து செய்து பார்க்கவும் தூண்டுகிறது இப்போவே முயற்சித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன் காரணம் நண்பன் கான் தரும் விடயம்களை பார்த்து விட்டு தைரியமா நம்பி முயற்சித்து பார்க்க முடியும் அப்படி இலகுவான வழிமுறைகளை கையான்டு தந்திருப்பார்.ரொம்ப சந்தோசம் நண்பா உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவனாக.
    என்றென்றும் உன்னுயிர் நண்பன் சபீர்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் என்னுயிர் நண்பா நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவுகளும் இதுவரை நாங்கள் அறிந்திடாத புதுமை தகவலாகத்தான் உள்ளது.அதேபோலதான் இப்பதிவும் நான் இதுவரை பயன் மடுத்தி வந்தது மைக்ரோசாப்ஆபீஸ்2003 தான் ஆனால் உங்களுடைய இந்த அருமையான பதிவு என்ன ரொம்ப கவர்ந்து செய்து பார்க்கவும் தூண்டுகிறது இப்போவே முயற்சித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன் காரணம் நண்பன் கான் தரும் விடயம்களை பார்த்து விட்டு தைரியமா நம்பி முயற்சித்து பார்க்க முடியும் அப்படி இலகுவான வழிமுறைகளை கையான்டு தந்திருப்பார்.ரொம்ப சந்தோசம் நண்பா உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவனாக.
    என்றென்றும் உன்னுயிர் நண்பன் சபீர்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்கள் தொடருங்கள் கான் நன்றி

    ReplyDelete
  4. Thank you so much dear friend. I tried it. amazing friend. i dont know that can creat PDF from office. thank u thank u it willbe very useful to me

    Mariappan from Thanjavur (rajamari2505@gmail.com)

    ReplyDelete
  5. அன்பு முரளிக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. Thank you very much Dear friend.you helping very usefull.unkalai palla nallavarkalnattil enrum Nalamudan valka valkave.

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள பதிவு,மிக்க நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்