உங்கள் அனைவருக்காகவும் இன்று ஒரு அழகிய பதிவு.
நாம் சிலர் ஆபிஸில் வேலை பார்ப்பவராக இருப்போம். சிலர் சொந்த தொழில் செய்பவராக இருப்போம். நாம் எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அது என்ன பிரச்சனை அதுதான் தேதியை கணக்கு பார்க்கும் பிரச்சனை.
நம்முடன் ஒன்றாக வேலை பார்க்கும் நம் நண்பர்கள் ஊருக்கு போகவேண்டும் என்று சொல்வார்கள் எத்தனை நாள் லீவில் போகிறீர்கள் என்று கேட்போம். அவர் 45 நாள் என்று சொல்வார் அவர் லீவு முடிந்து வரும் நாளை கணக்கு பார்க்கவேண்டுமென்று காலெண்டரையே பார்த்துக்கொண்டிருப்போம் உடனே அவர் திரும்பி வரும் நாளை 45 நாள் கழித்து எந்த தேதியில் அவர் வரவேண்டும் என்பதை உடனே நாம்மால் அவருக்கு சொல்ல முடியாது. பிறகு வேறு வழி இல்லாமல் நாம் நம் கைவிரலை ஒன்று ஒன்றாக என்னி ஒரு வழியாக பத்து பதினைந்து நிமிடத்திற்க்கு பிறகு அவர் திரும்பி வரும் நாளை சரியாக கண்டு பிடிப்போம்.
ஆனால் இனி அந்த பிரச்சனை உங்களுக்கு தேவை இல்லை. ஏன் தெரியுமா இங்கு நான் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் டவுண்லோடு செய்து உங்கள் டெக்ஸ்டாப்பில் காப்பி செய்து வைத்துக்கொண்டால் போதும். உடனுக்குடன் நீங்கள் எத்தனை நாளையும் கணக்கு போட்டு அவர் திரும்பி வரும் தேதியை உடனே சொல்லிவிடலாம்.
அதாவது இந்த தேதியில் இருந்து இந்த தேதிவரை மொத்தம் எத்தனை நாள் என்பதையும். இன்றைய தேதியில் இருந்து 45 நாள் கழித்து என்ன தேதி என்பதையும் ஒரு மவுஸ் கிளிக் மூலம் உடனே சொல்லிவிடலாம்.
இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த தேதியை கணக்கு பார்க்கும் மென்பொருளை டவுண்லோடு செய்து உங்கள் டெக்ஸ்டாப்பில் காப்பி செய்து வைத்துக்கொண்டு நீங்கள் நினைத்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சுட்டி
நீங்கள் இதனை டவுண்லோடு செய்ததும் அதனை ஓப்பன் செய்தால் கீழே காண்பதுபோன்று Data Calculator.exe என்ற பெயருடைய ஒரு மென்பொருள் உங்களுக்கு தெரியும். இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதனை உங்கள் மவுசால் டபுள்கிளிக் செய்து ஓப்பன் செய்து பயன்படுத்தலாம். அல்லது இதனை உங்கள் மவுசால் அழுத்தி பிடித்து உங்கள் டெக்ஸ்டாப்பில் கொண்டுபோய் போட்டுவிட்டு பிறகு பயன்படுத்தலாம்.
இதனை நீங்கள் டெக்ஸ்டாப்பில் கொண்டு சென்றதும் உங்களுக்கு கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் தோன்றும். இதனை ஓப்பன் செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த Start Date என்பதில் வட்டமிட்டு காட்டப்பட்ட தேதி இன்றைய தேதி என்னவோ அதை குறிக்கும். அடுத்து End Date என்பதில் நீங்கள் எந்த தேதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்களோ அதனை கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுக்கு அதுவரை மொத்தம் எத்தனை நாள் என்று இந்த மென்பொருள் சொல்லிவிடும்.
பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன் கான்
மிக்க நன்றிவின் 7ல் வொர்க் ஆக வில்லை/ உதவவும்
ReplyDelete