உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 30 April 2012

கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?
கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.

இனி இந்த Plug-ins என்பது கம்ப்யூட்டரில் எப்படி நமக்கு பயன்படுகிறது என்று பார்ப்போம். கம்ப்யூட்டரில் ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம் கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது. அதனை Plug-in என்ற பெயரில்தான் கொடுக்க முடியும்.  அந்த Plug-in ஐ அவர்கள் தங்கள் தளத்தில் இணைத்து வைத்திருப்பார்கள் அதனை நாம் டவுண்லோடு செய்து நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்துள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருளோடு அது இணைந்துகொள்ளும். பிறகு நாம் அந்த மென்பொருளை ஓப்பன் செய்து பார்த்தால் நாம் Plug-in முறையில் சேர்ந்த அந்த கூடுதல் ஆப்சன் அங்கு வந்திருக்கும். 

இந்த Plug-ins கள் பல முக்கிய மென்பொருள்களுக்கு அவசியமான தேவையான ஒன்றாக இன்று மாறி இருக்கிறது.  உலகப்புகழ் பெற்ற சில மென்பொருள்களுக்கு அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் Plug-ins கள் போக கூடுதலாக வேறு சில நிறுவனங்களும் இதற்கு பொருத்தமான Plug-in களை உருவாக்கி வியாபாரம் செய்கிறது. உதாரணத்திற்கு Adobe Photoshop என்ற உலகப்புகழ் பெற்ற போட்டோ டிசைனிங் செய்யும் மென்பொருளுக்கு அதற்கு பயன்படும் கூடுதல் சக்தியை கொடுக்கும் Photoshop Actions, Photoshop Gradients, Photoshop Styles மற்றும் Photoshop Filters போன்றவைகள் Plug-ins களாக உருவாக்கி வெளியிடுகிறது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் புதுப்புது வித்தியாசமான டிசைன்களை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டோசாப் Plug-ins களை இன்று மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக உருவாக்கி வெளியிடுகிறது.

இந்த Plug-ins கள் இரண்டு வகை உண்டு. ஒரு வகை Executive Files போன்று இருக்கும். இந்த Executive File ஐ நீங்கள் டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். இன்ஸ்டால் ஆன உடன் அது தானாக அதற்கு உரிய மென்பொருளோடு சேர்ந்துகொள்ளும். வேறு சில Plug-in கள் உள்ளது. உதாரணத்திற்கு Photoshop Actions Plug-ins இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த Plug-in களை போல்டரோடு காப்பி செய்து அப்படியே C டிரைவில் உள்ள போட்டோசாப் போல்டரில் பேஸ்ட் செய்தால் போதும். அதனை நாம் பயன்படுத்த முடியும்.

அடுத்து மற்ற மென்பொருள்களின் Plug-ins களை பற்றி பார்ப்போம்.

Internet Browser ல் முதல் இடத்தை பிடித்து அனைவரின் விருப்பத்தையும் பெற்ற Mozilla Fire Fox என்ற இண்டெர்நெட் இயங்கு தளம் தமிழர்களால் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் இந்த FireFox மற்ற Internet Browser களை விட அதிக Plug-ins களை உள் அடக்கி உள்ளது. இதற்கு உரிய Plug-ins களை மூன்றாம் தர ( Third Party ) நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரித்து வெளியிடுகிறது.

உதாரணத்திற்கு இந்த Fire Fox ல் நீங்கள் அதன் மேலே Tools ல் உள்ள Add-on என்பதை கிளிக் செய்துவிட்டு இங்கு கீழே காண்பதுபோல் அதன் Search Box ல் PDF என டைப் செய்தால் PDF சம்பந்தமான PDF Editor, PDF Viewer, Save to PDF, Web to PDF போன்ற Plug-in கள் உங்களுக்கு கிடைக்கும் இதனை அதன் அருகில் உள்ள Install பட்டன்கள் மூலம் இன்ஸ்டால் செய்துகொண்டால் நீங்கள் இந்த Fire Fox மூலமாகவே PDF சம்பந்தமான அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் திறந்து வைத்திருக்கும் Web Page ஐ PDF பைலாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு இந்த Fire Fox Plug-in உங்களுக்கு உதவும்.  இதுபோல் Adobe After Effect, Adobe Premier pro, Adobe Illustrator, Adobe PDF Reader, VLC Player, Coral Draw, Microsoft Office, Google Map போன்ற அதிக பிரபலமான மென்பொருள்களுக்கு Plugins கள் எப்பொழுதும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக்கொண்டால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

இந்த பாடம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். அது எனது அடுத்த பதிவுக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும். 

நன்றி ! அன்புடன்: கான்


   


     

22 comments:

 1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

  ReplyDelete
 2. நன்றி Plug-ins பற்றிய தெளிவான,விளக்கமான பதிவு..!!

  ReplyDelete
 3. உங்களோட பதிவை இவ்வளவு நாளாக காத்திருந்ததட்கு ஏமாற்றம் இல்லாத நல்ல பதிவாக வெளியிட்டிருகிறீர்கள். அடுத்த பதிவை வெகு விரைவில் பதிவீர்கள் என எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்து சொன்ன நண்பர்கள் லதாவெண்கட், சேலம்தேவா, இமாம் அனைவருக்கும் எனது நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 5. mihchca nanri ithu enakku mperiya arivai thanthathu

  zaeemhafiz
  sri lanka

  ReplyDelete
 6. romba roma nanrii annan..

  ReplyDelete
 7. உங்கள் அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 8. plug-in பற்றி இதுவரை ஒன்றும் தெரியாது. பயனுள்ள தகவல். நன்றி கான் பாய் !

  ReplyDelete
 9. வாவ்!!!! எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. நண்பரே எனக்கு DONGAL UNLOCK SOFTWARE I பெற முடியுமா ?

  ReplyDelete
 11. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


  நண்பர் daneshkanth நீங்கள் கேட்கும் சாப்ட்வேர் என்னிடம் இல்லை.


  அன்புடன்: கான்

  ReplyDelete
 12. Hello,
  Time to Time i am seeing a message like (same ip address of your computer is using in another computer! check with your network administrator for solving this problem!). I have a doubt maybe some one hack my id or pw. if you know how to solve this problem kindle advice me to my email id zahirhussain89@gmail.com
  Thanks!

  ReplyDelete
 13. Dear Zahir

  Pls check your mail to solve this problems.

  - KHAN

  ReplyDelete
 14. IP Address patri therindhu kolla asaipaduhindren. plz send details. my mail tmuthu.oct25@gmail.com

  ReplyDelete
 15. Dear khan, உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது.வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. என் லேப்டாப் lenovo i3 homebasic.4gb Ram, 500gb h.disk.இதில் 2 partition(c:420gb & d: 30gb)மட்டும் உள்ளது.மேலும் கூடுதலாக(c partitionனை)ஒரு partition பண்ணுவது எப்படி? நானும் பலமுறை முயற்சி செய்தேன்.முடியவில்லை. தாங்கள் முடிந்தால் தெரிக்கவும்.நன்றி.

  ReplyDelete
 17. Dear sir, U r blog is very usefull and very informative. sir, I need a laptop for only internet purpose. i may use internet and Msoffice. so for that which laptop suits for me, my price 20-25k. please advice in u r comment section else at my email: rajanprofitz@gmail.com

  ReplyDelete
 18. Sir.
  Your blog is very use full for all beginers in computer's users

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்