உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Wednesday, 26 December 2012

கம்ப்யூட்டர் கேள்வி பதில்கள் (பாகம் 2)


தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளத்திற்கு வரும் நண்பர்கள் கேட்ட கேள்விகள் இது. இது உங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.


நண்பரின் கேள்வி:

மதிப்பிற்குறிய கான் சேர் அவர்கற்கு,  எனது சிஸ்டம் முன்பு அடிக்கடி ரீ ஸ்டார்ட் ஆகியது உங்கள் ஆலோசனைப்படி ராம் மாற்றியபின் நன்றாக வேலை செய்தது தற்போது ஆன் செய்யும் போதும் ஏதேனும் heavy software example pinnacle software போன்றவற்றை ஆன் செய்தால் சிஸ்டம் ஸ்க்ரீன் jam ஆகி கோடுகள் வருகின்றன திரை நடுங்குவதுபோல் காணப்படுகின்றது மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் வேலை செய்கின்றது எனது நண்பரிடம் கேட்டேன் மதர்போட் பிரச்சினை இருப்பதாக சொல்கின்றார் மதர்போட் பிரச்சினை இருந்தால் இதுபோன்று வருமா எனது சந்தேகங்களை உங்கள் செளிவானபதில் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் உதவியினை எதிர்ப்பார்க்கிறேன்.

தமிழில் கம்ப்யூட்டர் தகவல் பதில்:
உங்கள் தனி மடலுக்கு நன்றி !

ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பிரச்சனையால் ராம் மாற்றி இருக்கிறீர்கள். ராம் மாற்றிய பிறகு கம்ப்யூட்டர் நன்றாக வேலை செய்வதாக சொல்லி இருந்தீர்கள்.

இதன் காரணமாக உங்கள் கம்ப்யூட்டர் மதர் போர்டு மற்றும் ப்ராசசர், ராம் அனைத்தும் ஒரு அளவுக்குதான் கிராபிக் வேலைகளுக்கு தாங்கக்கூடியதாக இருக்கும். கூடுதல் கிராபிக் கெபாசிட்டி உள்ள Corel Draw, Pinnacle Studio, AutoCAD போன்ற கிராபிக் கெபாசிடி உள்ள மென்பொருள்கள் இயங்குவதை தாங்கும் கெபாசிட்டி உங்கள் கம்ப்யூட்டருக்கு இல்லை. எனவே இது போன்ற கெபாசிட்டி உள்ள மென்பொருள்களை நீங்கள் அவசியம் பயன்படுத்தவேண்டும் என்றால் முதலில் குறைந்த அளவு 512 MB கெபாசிடியாவது உள்ள ஒரு கிராபிக் டிரைவை விலைக்கு வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்துங்கள். அந்த கிராபிக் டிரைவில் இருந்து VGA - Out கொடுத்து நீங்கள் மானிட்டரை கனெக்ட் செய்து கம்ப்யூட்டரை பயன்படுத்தினால் உங்களுக்கு இந்த பிரச்சனை வராது.


கம்ப்யூட்டர் சாதாரணமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கினால் மதர் போர்டில் எந்த பிரச்சனையும் இல்லை. ஹெவி கிராபிக் சாப்ட்வேர் ஓப்பன் செய்யும்பொழுது மட்டும் திரை அதிர்வதுபோல் இருந்தால் மெமரி குறைவால் ஏற்படும் பிரச்சனை மட்டுமே உள்ளதாக அர்த்தம். எனவே நீங்கள் Radon Graphic அல்லது NVIDIA GEFORCE Graphic எதாவது ஒன்றில் குறைந்த அளவில் 512 MB அல்லது 256 அளவு இருந்தாலும் பரவாயில் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

------------------------------------------------------------------------------------------------------------

நண்பரின் கேள்வி:
Hard Disk Speed எப்படி பார்ப்பது ?
RPM என்றால் என்ன?

HARD DISK ....
HARD DISK ன் உள் பகுதி....

தமிழில் கம்ப்யூட்டர் தகவல் பதில்:

உங்கள் இந்த சிறந்த கேள்விக்கு எனது நன்றி !

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் Speed என்ன என்பதை எப்படி பார்ப்பது ?

Hard Disk ல் 4200 RPM, 5200 RPM மற்றும் 7200 RPM என பல வகை உள்ளது.

இதில் 4200 மற்றும் 5200 RPM பழைய கம்ப்யூட்டர் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.  7200 RPM இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

சரி இந்த RPM என்றால் என்ன ?

Revolutions per minute

ஒரு நிமிடத்தில் ஏற்படும் சுழற்ச்சி....

அதாவது Clock வடிவத்தில் இந்த ஹார் டிஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்றுகிறது என்பதை கணக்கிடுவதை தான் RPM என குறிப்பிடுகிறார்கள்.

5200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 5200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது.

7200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 7200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது என அர்த்தம்.

ஆனால் நீங்கள் 5200 RPM Hard Disk ன் மூலம் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 10000 முறை சுழல்கிறது.

அதுபோல 7200 RPM Hard Disk ன் மூலம் நீங்கள் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 15000 முறை சுழல்கிறது.

( அதாவது சாதாரணமாக இயங்கும் வேகத்தை விட Data Transfer வேகம் இரு மடங்காக மாறுகிறது)

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் வேகம் 4200 RPM, 5200 RPM அல்லது 7200 RPM என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk ன் வேகம் என்ன என்பதை உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் மாடல் நம்பரை வத்து கண்டுபிடித்துவிடலாம்.

முதலில் உங்கள் ஹார் டிஸ்க்கின் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Desktop ல் உள்ள My Computer ஐ மவுசால் செலெக்ட் செய்து வலது பக்கம் கிளிக் செய்து Properties செல்லுங்கள். அதில் Hardware தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் Device Manager பட்டனை கிளிக் செய்யுங்கள்.

2012-02-02_103718.jpgDevice Manager ல் Disk Drive என்பதில் இடது பக்கம் உள்ள + ஐ கிளிக் செய்தால் உங்கள் HardDisk ன் மாடல் நம்பர் என்ன என்பதை நிங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாடல் நம்பரை வைத்து நாம் எப்படி RPM ஐ கண்டு பிடிப்படி ?

என்னுடைய Hard Disk மாடல் நம்பர்
WD3200AAKS

இதில்

WD - என்பது ஹார்டிஸ்க் ப்ராண்ட்
320 - என்பது அதன் அளவு (Capacity)

0AAKS - என்பது WD பிராண்டை பொருத்தவரை 16 MB Cache Power என்பதை குறிப்பிடுகிறது.

இதற்கு பதிலாக

0AVVS - என இருந்தால் 8 MB Cache Power என அர்த்தம்.

WD Hard Disk List ல் இந்த மாடல் நம்பர் 7200 RPM Speed என குறிப்பிடப்படுகிறது.

WD3200AAKS


எனவே இந்த மாடல் நம்பரை நாம் இண்டெர் நெட்டில் Google Search ல் டைப் செய்து RPM என்ன என்பதை டைப் செய்து தேடினால் இதன் RPM நமக்கு தெரிந்துவிடும்.

What is the RPM for model No. WD3200AAKS ?

என Google Search ல் நான் டைப் செய்ததும் எனக்கு கிடைத்த ரிசல்ட் இது.

2012-02-02_143730.jpg
இதுபோல நீங்களும் உங்கள் Hard Disk இன் மாடல் நம்பரை கொடுத்து கூகிள் மூலமாக அதன் RPM என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நன்றி ! அன்புடன்: கான்


10 comments:

 1. Dear sir,
  I have a lenovo laptop with out Cd drive provided by tn-gov. i shut down properly last night but unable to switch on in the morning today,can you help me?

  ReplyDelete
 2. நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் பயனுள்ள பதிவு... :)

  ReplyDelete
 3. நன்றி ! நண்பர் தேவா......


  ReplyDelete
 4. mahalakshmi karthikeyan27 December 2012 21:49

  Dear sir,
  I have a lenovo laptop with out Cd drive provided by tn-gov. i shut down properly last night but unable to switch on in the morning today,can you help me?

  உங்கள் லேப்டாப் இப்பொழுது முழுவதுமாக ஓப்பன் ஆகாமல் மானிட்டரில் எந்த டிஸ்பிளேயும் வராமல் போய்விட்டதா. அல்லது லேப்டாப்பை ஆன் செய்த உடன் Blank Screen ல் எழுத்துக்கள் மட்டும் எரர் செய்திபோல் வருகிறதா என்பதை தெளிவாக என் ஈமெயில் முகவரியில் குறிப்பிடுங்கள் mdkhan@gmail.com

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 5. கான் சார் வனக்கம்..நீண்ட நாட்கலுக்குபின் நல்ல பதிவு இது போன்ர வாசகர் கேட்கும் கேல்விபதில்கலை பதிவாக எழுதினால் போதும் அனைவரும் கனினி வல்லுனர் ஆகிவிடுவோம்.எனக்கு ஒரு சந்தெகம்?என் கனினியில் power surge on usb port exceeded என அடிக்கடி வருகிரது,அதை றீசெட் செய்தாலும் திரும்ப திரும்ப வருகிரது device manager சென்று usb port don't sow usb error message tick செய்துல்ளேன் ஆனால் மெசஜ் வரவில்லை, இதை என்ன செய்வது
  usb இல் எதை சொரிகினாலும் hang ஆகிரது.

  ReplyDelete
 6. வணக்கம் கான் அண்ணா நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அருமையான பதிவை செய்துள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா தங்கள் அரும்பணியை தொடருங்கள் நன்றி வணக்கம்

  ReplyDelete
 7. வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 8. தோழர் கான் அவர்களே , வீடியோவிலிருந்து ஆடியோ பிரிப்பதைக்க் கூறி இருந்தீர்கள் நன்றி , ஆடிவிளிருந்து குரலை தவிர்த்து இசையை மட்டும் பிரிக்க முடியுமா
  மேகா

  ReplyDelete
 9. thanks khan, i have one doubt,software install procedure tell me.

  ReplyDelete
 10. Sir enudaiya laptop (windose7)net conection koduthathum uptate akuthu atha eputi cancel panuvathu

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்