உங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்
DropBox
(1)
DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
(1)
Laptop சம்பந்தமான பதிவுகள்
(2)
PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION
(5)
TeamViewer உதவி
(1)
இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு
(2)
இலவச டிசைனிங் மென்பொருள்
(5)
இலவச மென்பொருள்
(9)
கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள்
(1)
கம்ப்யூட்டர் கேள்வி பதில்
(2)
கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு
(12)
கம்ப்யூட்டர் பாதுகாப்பு
(2)
தெரிந்துகொள்ளுங்கள்
(5)
பிளாக்கர் உதவி
(2)
போட்டோசாப் பாடம்
(3)
மென்பொருள் உதவி
(2)
மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்
(19)
மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு
(11)
மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட்
(5)
Monday, 24 May 2010
உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்...
நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.
உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.
அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?
அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள
Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.
Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும்.
இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக உங்கள் ஹார்டிஸ்க்.
உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்
உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம்.
இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும் கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின் அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.
இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name, Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது.
முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
நண்பர்கள் தளத்தில் இருந்து சிறந்த பதிவுகள்
- டோரண்ட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
- பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?
- ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
- வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்
- அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
- பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
- பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
அஸ்ஸலாமு அழைக்கும் கான் ஜி.உங்களின் பதிவு பார்த்து ரொம்ப சந்தோசம் கணணி பற்றிய தகவல்களை அறிய மிக இலகுவான முறையை கையாண்டு தந்துளீர்கள் இது எமக்கு ரொம்ப பிரயோசனமாக உள்ளது உங்களின் இந்த பணியை என் மனமார வாழ்த்துகிறேன் இன்னும் உங்கள் பனி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவனாக
ReplyDeleteவணக்கம்,தங்கள் பதிவுகள் மிக அருமை.
ReplyDeleteவணக்கம்,தங்கள் பதிவுகள் மிக அருமை.
ReplyDeletegood idea
ReplyDeleteif i want to share this post in my facebok accounnt. how i can share this ?
ReplyDeleteசரியாய் சொல்லியிருக்கிறீர்கள்.. முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு தான் இது.. நிச்சயமாய் பயன்படும்..! எனது தளத்திலும் இந்த பதிவை இணைக்க அனுமதி வழங்கவேண்டும் திரு. கான் அவர்களே!
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்..!
உங்கள் சேவை தொடரட்டும்...! நன்றி ...!”
ReplyDeleteபயனுள்ள தகவல் மிக்க நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
நன்றி கான்
ReplyDeleteஆன்மீகம், சித்தர்கள், மற்றும் java தமிழ் tutorial மற்றும் பயனுள்ள தகவலுக்கு
http://www.tamilkadal.com/