உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 1 June 2010

DVD Disc (ப்ளஸ் மற்றும் மைனஸ்) ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்


DVD என்பதை அதை உருவாக்கிய நேரத்தில் Digital video disc என்று பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பிறகு அதனை Digital versatile disc என்று அழைக்கிறார்கள்.

இந்த DVD தட்டில் DVD-ROM, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW என்று பல வகையான டைப் DVD தட்டுகள் தற்ப்போது விற்பனையில் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். எல்லாம் DVD தட்டுகள்தான் என்றாலும் ஒவ்வொன்றிலும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன.

அப்படி என்ன வித்தியாசம் ? அதைபற்றி கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.

DVD-ROM (DVD-Read Only Memory)
இந்த DVD ROM என்பது படிக்க மட்டுமே முடியும் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது இதை உருவாக்கும்போதே இந்த தட்டில் தேவையான விசயங்களை பிரிண்ட் செய்துவிடுவார்கள். தனிப்பட்ட முறையில் அதில் எவரும் ஒரு செய்தியை காப்பி செய்யவோ அல்லது அழிக்கவோ முடியாது.


DVD-R (DVD-Recordable)
இதில் நீங்கள் உங்களிடம் உள்ள ஆடியோ விடியோ போட்டோ மற்றும் மென்பொருள்களை காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒரு தடவை மட்டும்தான் உங்களால் முடியும். இன்னொரு தடவை நீங்கள் விரும்பினால் கூட அந்த தட்டில் நீங்கள் காப்பி செய்த விசயங்களை அழிக்க முடியாது.

DVD-RW (DVD-Read/Write)
இதில் நீங்கள் உங்களிடம் உள்ள ஆடியோ விடியோ போட்டோ மற்றும் மென்பொருள்களை ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் அழித்து அழித்து காப்பி செய்ய முடியும்.

சரி DVD-R, DVD-RW என்பதை நாம் இங்கு பார்த்தோம் இதுபோல் DVD+R, DVD+RW என்று சில தட்டுகள் விற்பனையில் இருக்கிறதே இந்த -(மைனஸ்) மற்றும் +(ப்ளஸ்) இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என நீங்கள் நினைக்கலாம்.

முதலில் ஒரு பொதுவான விசயத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த DVD க்கும் R க்கும் இடையில் போடப்பட்டுள்ள கோடு (-) மைனஸ் என்ற அர்த்தத்தில் போடப்படவில்லை. DVD யில் இருந்து இந்த R ஐ தனிமை படுத்தி காட்டவேண்டுமென்பதற்க்காக இந்த சின்ன கோடு (“-”dash ) போடப்பட்டது. ஆனால் அதன் பிறகு விற்பனைக்கு வந்துள்ள +R DVD ஐ பார்த்து முந்தைய கண்டுபிடிப்பு மைனஸ் என்பதுபோல் நம் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் அதனை நாம் டி.வி.டி மைனஸ் R மற்றும் DVD பிளஸ் R என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்.

DVD-(dash)R டெக்னாலஜிதான் முதன் முதலாக நம்மைபோன்றவர்கள் DVD யை சொந்தமாக காப்பி செய்வதற்க்காக Pioneer கம்பெனி மூலம் நமக்கு அறிமுகமான டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். இந்த டெக்னாலஜி DVD Forum குரூப் மூலம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. (The DVD Forum is an international association of hardware manufacturers) பிறகு இந்த காப்பி செய்யக்கூடிய DVD யை இன்னும் கொஞ்சம் தரம் கூடுதலாக (High Capacity DVD) தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த சில நிறுவணங்கள் அதனை தயாரித்து அதை மார்கெட்டில் விற்பனைக்கு வெளியிடும் நேரத்தில் அதன் பெயரில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக அதற்க்கு வைத்த பெயர்தான் DVD+R மற்றும் DVD+RW என்பதாகும். இந்த +R டெக்னாலஜியை இன்னும் DVD Forum அங்கீகரிக்கவில்லை என அதன் இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (http://www.dvdforum.org/)

சரி இதெல்லாம் இருக்கட்டும் ப்ளஸ் மைனஸ் என்று எங்களை குழப்பியது போதும் இனி நாங்கள் எந்த DVD தட்டை வாங்கி பயன்படுத்தவேண்டும் என்று என்னை பார்த்து நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.

உங்களுக்காக ஒரு தெளிவான விளக்கம்:

DVD-R டெக்னாலஜி முழுக்க முழுக்க DVD டெக்னாலஜிக்கு ஏற்றதுதான் அதை மறுக்க முடியாது. வீடியோ ரிக்கார்டிங் செய்வதற்க்காகவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. இருந்தாலும் அதைவிட சிறந்தது என்று புதிதாக ஒரு டெக்னாலஜி உருவாகும்போது அதையும் நாம் ஒதுக்கிவிட முடியாது அப்படி என்ன அதில் நல்லவிசயம் இருக்கிறது என்று பார்ப்போம்.

DVD+R ன் சில சிறப்பு அம்சங்கள்:

1) இந்த DVD+R ஆடியோ வீடியோ மட்டுமல்லாமல் டேட்டாக்கள் (டாகுமெண்டுகள் மற்றும் மென்பொருள்கள்) அனைத்தையும் சிறந்த முறையில் தடை இல்லாமல் ரிக்கார்டு செய்வதற்க்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.


2) இந்த DVD+R க்கு கூடுதல் சக்தியும் புதிய டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டு இருப்பதால் இதன் மூலம் DVD பிளேயர் மற்றும் கம்ப்யூட்டரில் நீங்கள் உங்கள் வீடியோ மற்றும் தகவல்களை ரிக்கார்டு செய்யும்பொழுதும் அதனை பயன்படுத்தும்பொழுதும் அதன் வேகம் கூடுதலாக இருக்கும் மற்றும் எந்த வித டேட்டா எரர் (Error) டிஸ்பிளேயும் வராது.

3) இதுபோல் DVD+RW தட்டை பயன்படுத்தி நீங்கள் டேட்டாக்களை ரிக்கார்டு செய்துவிட்டு அதனை அழித்து மறுபடியும் ரிக்கார்டு செய்யும் நேரத்தில் உங்கள் பழைய டேட்டா போய் அதே இடத்தில் புதிய டேட்டா வருவதால் அந்த புதிய டேட்டாவுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.

4) இந்த DVD+RW தட்டை நீங்கள் காப்பி மற்றும் எடிட் செய்வதும் காப்பி செய்து முடித்த உடன் வெளியே (Eject) எடுப்பது மிக வேகமாக தாமதம் இல்லாமல் நடக்கும். Disc Format or Disc Finalization என்பதற்க்கான தாமதம் இதில் இல்லை. (ஏற்கனவே இதில் டேட்டா காப்பி செய்யப்பட்டிருதால் அந்த டேட்டாவை Format செய்வதில் தாமதம் இருக்காது)

5) இன்னும் பல ஆப்சன்கள் இன்றைய புதிய டெக்னாலஜிக்கு ஏற்ற வகையில் இந்த +R மற்றும் +RW டெக்னாலஜியில் இடம்பெற்று இருக்கின்றது.

இதை எல்லாம் நான் சொல்லவில்லை இதனை அங்கீகரித்துள்ள இந்த DVD+RW Alliance இணைய தளம் சொல்கிறது. (http://www.dvdrw.com/why/customer-benefits.htm)

இனி நீங்கள் உங்களுடைய தேவைக்கு எதை வாங்கி பயன்படுத்துவது என முடிவு செய்துகொள்ளுங்கள்.

என்னுடைய பதில் என்னவென்றால் உங்களுடை முக்கியமான சில தகவல்களை காப்பி செய்யவேண்டுமென்றால் நீங்கள் +R டெக்னாலஜியை பயன்படுத்தலாம். ஒரு தடவை பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும் தகவலாக இருந்தால் அதற்க்கு -R டெக்னாலஜியை பயன்படுத்தலாம்.சிலருக்கு அவர்களின் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் DVD பிளேயரில் டி.வி.டியை காப்பி செய்ய முடியுமா? அப்படி முடியும் என்றால் அதை எந்த அடையாளத்தை வைத்து தெரிந்துகொள்வது என்று குழப்பமாக இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்பதின் வலதுபக்கம் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். ஓப்பன் செய்ததும் உள்ளே C மற்றும் D என்று சில டிரைவ் இருப்பதை நீங்கள் காணலாம்.

இதில் கீழ் காண்பதுபோல DVD தட்டு போன்று படத்தில் ஒரு டிரைவ் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கிறதா என்று நீங்கள் பாருங்கள்.அப்படி இருந்தால் அதில் கீழே என்ன எழுதப்பட்டு இருக்கிறது எனவும் பாருங்கள். அதில் DVD-RAM அல்லது DVD-R/RW என்று எழுதப்பட்டு இருந்தால் அதன் மூலம் நீங்கள் DVD மற்றும் CD-யை பார்க்கவும் முடியும் காப்பி பன்னவும் முடியும். DVD-ROM என்று இருந்தால் அதில் DVD மற்றும் CD-யை பார்க்க மட்டும்தான் முடியும். DVD-Combo என்று எழுதப்பட்டு இருந்தால் அதில் DVD யை பார்க்கவும் மற்று CD-யை காப்பி பன்னவும் முடியும். CD-ROM என்றுமட்டும் இருந்தால் CD-யை மட்டும்தான் நீங்கள் அதில் பயன்படுத்த முடியும் DVD-யை பயன்படுத்த முடியாது. CD-RW என்று இருந்தால் CD யை பயன்படுத்தவும் காப்பி எடுக்கவும் முடியும்.

நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் DVD Disc-ன் அளவு (Capacity) 4.7 GB இது Single Layer Disc என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. CD தட்டின் அளவு 700 MB மட்டும்தான்.

புதிதாக அறிமுகமாகி நடைமுறையில் இருக்கும் சில DVD தட்டின் அளவுகள்
.


9.4 GB / double sided/1 layer
8.5 GB / single sided/dual layer
17.1 GB / double sided/dual layer
இன்றைய புதிய டெக்னாலஜியாக அறிமுகமாகி இருக்கும் Blu-Ray Disc-ன் அளவு எவ்வளவு தெரியுமா ?
25 GB
50 GB
100 GB
மற்றும் அதிகப்படியாக 200 GB வரை வந்துவிட்டது.இதுவரை இதை பொறுமையாக படித்து பார்த்து சில நல்ல விசயங்களை தெரிந்துகொண்ட உங்களுக்கு எனது நன்றி.

அன்புடன்: கான்

13 comments:

 1. DVDஐ பற்றி தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 2. மிக அருமையான விளக்கம் நண்பரே... புதுமையான தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தெரியாத தகவல்களை தெரிய தந்தமைக்கு மிக்க நன்றி... மேலும் உங்களிடம் அதிகம் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் கம்ப்புட்டர் தகவல் பிரியர்கள்... நன்றி நன்றி நன்றி....

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் தாமதத்துக்கு மன்னிக்கவும்

  தாங்களின் பதிவுகளை விரும்பி தவராமல் பார்த்துவருவதில் நானும் ஒருத்தன்.சில நாடகளாக வேலைப்பழுக்கள் காரணமாக சரியாக வரமுடியாமல் போய்விட்டது.

  நண்பன் தந்திருக்கும் இந்தப்பதிவு கட்டாயம் தெரிந்திருக்கவேண்டிய ஒன்று இது எனக்குபுது அறிவாகத்தான் தோன்றுகிறது இத்தனைநாள் இருந்த சந்தேகம் இன்று மாஸா அல்லாஹ் உங்கள் மூலம் தெரியவந்துள்ளது ரொம்ப சந்தோசம் நண்பரே.மேலும் எனக்கு இத்தளத்தின் மூலம் எனக்கு 60%சந்தேகம்கள் தீர்ந்துள்ளது உங்களைப்பாராட்டாமல் என்னால் இருக்கமுடியாது நீடுளிகாலம் சந்தோசமாக வாழ துஆசெய்கிறேன் தொடருங்கள் உங்கள் தொடரை.இத்தோடு சேர்த்து உங்கள் போட்டோசாப் பாடத்தையும் தவராது படித்துவருகின்றேன் நிறையதகவல் நிறையஅறிவு எனக்கு அதிலிருந்தும் கிடைத்துள்ளது ரொம்ப சந்தோசம்.

  மேலும் உங்கள் இத்தளம் மிகக்கவர்ச்சிகரமாக காட்சியளிக்கினறது என்னை ரொம்ப ஈர்த்துள்ளது நன்றி நண்பா நன்றி தொடருங்கள்......

  ReplyDelete
 4. வணக்கம்,தங்கள் பதிவுகள் மிக அருமை.”

  ReplyDelete
 5. very nice.. give me more detail about blu-ray disc. B.sriprabu MADURAI.

  ReplyDelete
 6. VERY NICE THANK YOU FOR YOUR HELP

  ReplyDelete
 7. These Informations are very useful to me......
  Thank you......

  ReplyDelete
 8. வழக்கம் போல இதிலும் கிண்டி கிழங்கு எடுத்துடீங்க கான் சார்,தெளிவான் விளக்கத்துடன் நல்லா புரியும் வண்ணம் சொல்லியிருக்கீங்க .நீங்க ஒருத்தர் போதும் குருவாக ,அதை பின் பற்றி பரப்பும் சீடர்களாக நாங்கள் துணை புரிவோம் .உங்கள் பணி மேலும் சிறப்படைய வாழ்த்துகள் கான் சார்.

  இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆவலுடன்
  அ.ஆரிப்.

  ReplyDelete
 9. இங்கு வருகை தந்து இந்த பயனுள்ள தகவலை தெரிந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

  நன்றி ஆரிப்........ விரைவில் இதுபோல் புதிய தொழில்நுட்ப பதிவுகளை தருகிறேன்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 10. நல்ல பதிவு இதுபோல் புதிய தொழில்நுட்ப பதிவுகளை கான ஆர்வமாக இருக்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 11. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் மாணிக்கம்.


  அன்புடன்: கான்

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்