உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Sunday 20 June 2010

பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
























இந்த தளத்தை தனது விருப்பமான இணைய தளமாக மாற்றிக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

உங்கள் அனைவருக்காகவும் எனது அடுத்த பதிவு....



பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.
பிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது ?

அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....



கம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.
இன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.

ACER / ASUS / COMPAQ / DELL / GATWAY / HP / LENOVO / LG / PACKARD BELL / SONY / TOSHIBA

இதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.

பிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.

2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Board தான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.

5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.


6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும் என்று நினைப்பவரா நீங்கள்.

உங்களுக்காக மேலும் சில விளக்கங்கள்.

ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.







































































































































































































































































































இந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்
















































இத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.


முயற்ச்சி செய்து பாருங்கள்.
வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்





அசெம்பிள் கம்ப்யூட்டரை உருவாக்குவது எப்படி என்று அடுத்த பதிவில் தொடர்கிறேன் இன்ஸா அல்லாஹ்.

11 comments:

  1. வணக்கம் கான் சார்.இந்தபதிவு எனக்கு பயனுள்ள தகவலாக உள்ளது.நான் சொந்தமான கணினியை, அசெம்பிள் செய்யவதை கற்க, எனது நீண்டநாள் ஆசை. உங்களின் அடுத்த பதிவுக்காக காத்துள்ளேன்.
    நன்றி வாழ்த்துக்கள்சார்.

    ReplyDelete
  2. நன்றி மச்சவல்லவன்.....

    உங்களுக்காக மிக விரைவில் அசெம்பிள் கம்ப்யூட்டர் உருவாக்குவது பற்றிய பதிவு தர முயற்ச்சி செய்கிறேன்.

    என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்...
    மிக்க நன்றி நண்பரே... எனக்கு கம்ப்யூட்டர் hardware பற்றி தெரிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வமுடையவன் உங்களின் பதிவை நான் இப்பொழுதுதான் படித்தேன் ஆகா என்னவொரு விளக்கம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்க இருக்கும் அனைவரும் நிச்சயம் இதை படித்தால் ஏமாற மாட்டார்கள்.. நல்ல விளக்கம் மேலும் உங்களின் அடுத்த பதிவை மிக சீக்கிரம் போடுங்கள் ஏனென்றால் நான் ஒரு கம்ப்யூட்டர் assemble பான்னுவதை எழுதி விடுங்கள் நண்பா...

    நீங்கள் இன்னும் மென்மேலும் நல்ல நல்ல பதிவுகள் தர வாழ்த்துக்கள்...

    அன்புடன் மபாஸ்.

    ReplyDelete
  4. உங்களின் அடுத்த பதிவை மிக சீக்கிரம் போடுங்கள் ஏனென்றால் நான் ஒரு கம்ப்யூட்டர் assemble பான்னுவதை மிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்...

    அன்புடன் மபாஸ்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா.உங்கள் படத்தோடு கூடிய தகவல் ரொம்ப ரொம்ப பிரயோசனமாக உள்ளது.பார்க்கும்போது ரொம்ப சந்தோஸம் நண்பா. எனக்கு மிச்சா நாளா இருந்த சந்தேகம் இப்பதிவின் மூலம் தெளிவாகி விட்டது ரொம்ப விரிவான விளக்கம் மாஸா அல்லாஹ்.இத்தனை நேரங்கள் எங்களுக்காக செலவளித்து இப்பெருமதியான பதிவை தந்த உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து நலமோடு வாழ வைப்பானாக.ஆமீன்

    ReplyDelete
  6. // முஹம்மது மபாஸ் said...
    உங்களின் அடுத்த பதிவை மிக சீக்கிரம் போடுங்கள் ஏனென்றால் நான் ஒரு கம்ப்யூட்டர் assemble பான்னுவதை மிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்... //

    நன்றி மபாஸ் விரைவில் கம்ப்யூட்டெர் அசெம்பிள் செய்வது எப்படி என்ற பாடத்தை ஆரம்பிக்கிறேன். இன்சா அல்லாஹ்...

    ReplyDelete
  7. // safeer said...
    அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா.உங்கள் படத்தோடு கூடிய தகவல் ரொம்ப ரொம்ப பிரயோசனமாக உள்ளது.பார்க்கும்போது ரொம்ப சந்தோஸம் நண்பா. எனக்கு மிச்சா நாளா இருந்த சந்தேகம் இப்பதிவின் மூலம் தெளிவாகி விட்டது ரொம்ப விரிவான விளக்கம் மாஸா அல்லாஹ்.இத்தனை நேரங்கள் எங்களுக்காக செலவளித்து இப்பெருமதியான பதிவை தந்த உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தந்து நலமோடு வாழ வைப்பானாக.ஆமீன் //

    நன்றி சபீர்....... மிக்க மகிழ்ச்சி உங்களுக்காகவும் விரைவில் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது பற்றிய தகவல்கள் தர இருக்கிறேன். இன்சா அலாஹ்...

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவை தந்து கொண்டு இருக்கீறிர்கள் மிக்க நன்றி

    ReplyDelete
  9. thank u sir u r katurai very useful

    ReplyDelete
  10. அருமையான தக்வல் கான் ஜி வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்

    ReplyDelete
  11. Your service is very grateful. Thanking your very much. Please continue your service

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்