உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Tuesday 14 June 2011

நீங்களும் பிளாக் (வலைப்பூ) உருவாக்கலாம்.......

உங்களுக்கு சொந்தமாக ஒரு வலைப்பூவை உருவாக்குவது எப்படி ?


























1) முதலில் http://www.blogger.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்




























2) அடுத்து இங்கு குறிப்பிட்ட இடத்தில் உங்கள் ஜி மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர் டைப் செய்யுங்கள்.





























3) அடுத்து இங்கு குறிப்பிட்ட Blog Tittle என்பதில் உங்கள் பிளாக் தலைப்பை டைப் செய்யுங்கள். Blog Address என்பதில் உங்கள் பிளாக்கை மற்றவர் திறப்பதற்க்கு கொடுக்கும் அட்ரசை டைப் செய்யுங்கள். இந்த பிளாக் அட்ரசில் நீங்கள் கொடுத்துள்ள அட்ரஸ் ஏற்கனவே வேறொருவர் எடுத்துள்ளார்களா என தெரிந்துகொள்ள அதன் கீழே உள்ள Check Availability என்பதை கிளிக் செய்யுங்கள். இதனை நீங்கள் கிளிக் செய்த உடன் This blog address available என வந்தால்தான் நீங்கள் அந்த அட்ரசை பயன்படுத்த முடியும். அடுத்து Word Verification என்ற இடத்தில் வரும் ஆங்கில எழுத்துக்களை சரியாக பார்த்து அதன் கீழே உள்ள இடத்தில் டைப் செய்யுங்கள். அடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.





























4) அடுத்து Continue கிளிக் செய்த உடன் வரும் இந்த தட்டில்  உங்களுக்கு விருப்பமான பிளாக் டிசைனை தேர்ந்தெடுத்து கீழே உள்ள Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.































5) இறுதியாக இந்த தட்டு வந்துவிட்டால் உங்களுக்கென நீங்கள் கொடுத்த பிளாக் அட்ரஸ் பெயரில் உங்கள் பிளாக் தயாராகி விட்டது என அர்த்தம்.
இனி Start Blogging என்பதை கிளிக் செய்யுங்கள்.






























6) உடனே உங்களுக்கு உங்கள் பிளாக் தகவல்களை டைப் செய்வதற்க்கு Posting என்ற பகுதி ஓப்பன் ஆகிவிடும். இதில் Tittle என்பதில் உங்கள் பிளாக் போஸ்ட்க்கு ஒரு தலைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். அடுத்ததாக குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் விரும்பும் தகவலை டைப் செய்யுங்கள். அடுத்து Lable for the Post என்பதில் நீங்கள் உங்கள் போஸ்டுக்கு ஒரு லேபில் பெயரை டைப் செய்துகொள்ளுங்கள். இந்த லேபில் பெயரில் அடுத்து ஒரு போஸ்ட் செய்தால் இவை இரண்டு போஸ்டுகளை ஒருவர் ஒரே நேரத்தில் பார்க்க இது உதவும்.





























7) அடுத்து நீங்கள் உருவாக்கிய பிளாக் போஸ்ட்டின் உள்ளே ஒரு போட்டோவை கொண்டுவர வேண்டும் என்றால் இங்கு குறிப்பிட்ட சிறிய போட்டோ போன்ற ஐக்கானை கிளிக் செய்யுங்கள். பிறகு ஓப்பன் ஆகும் தட்டில் Choose File என்பதை கிளிக் செய்யுங்கள்.





























8) அடுத்து இங்கு காண்பதுபோல ஓப்பன் ஆகும் தட்டில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோவை நீங்கள் செலெக்ட் செய்து Open என்பதை கிளிக் செய்யுங்கள்.





























9) அடுத்து Upload Image என்பதை கிளிக் செய்யுங்கள்.































10) அடுத்து உங்கள் போட்டோ அப்லோடு ஆனதும் இந்த Done பட்டனை கிளிக் செய்து மூடிவிடுங்கள்.





























11) இனி இந்த Preview பட்டனை கிளிக் செய்து உங்கள் பிளாக் போஸ்ட் எப்படி உள்ளது என பார்த்துக்கொள்ளுங்கள்.































12) Preview சரியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டு Publish Post என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவை போஸ்ட் செய்துவிடுங்கள்.






























13) உடனே இதுபோன்ற ஒரு பகுதி உங்கள் பதிவு போஸ்ட் ஆகிவிட்டதென தெரியப்படுத்தும்.  இதில் View Post என்பதை நீங்க்ள் கிளிக் செய்து நீங்கள் தற்போது பதிவு செய்த போஸ்டை பார்வை இடலாம். அல்லது Edit Post என்பதை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய போஸ்ட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்தலாம். அடுத்து Create New Post என்பதை கிளிக் செய்து அடுத்ததாக நீங்கள் உருவாக்க நினைக்கும் புதிய பதிவு ஆப்சனுக்கு செல்லலாம்.





























14)  சரி நீங்கள் View Post என்பதை கிளிக் செய்தால் தற்போது உருவாக்கிய போஸ்ட் எப்படி இருக்கிறது என பார்க்கும் இந்த தட்டு ஓப்பன் ஆகும். இதுதான் நீங்கள் உருவாக்கிய தளத்தின் முகப்பு.





























15) இந்த தட்டின் மேல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் New Post என்பதை கிளிக் செய்தும் அடுத்ததாக நீங்கள் உருவாக்க போகும் புதிய பதிவுக்கான ஆப்சனுக்கு செல்லலாம். அடுத்து இங்கு குறிப்பிட்ட Follower என்ற இடத்தில்தான் உங்கள் தளத்தில் இணைய விரும்புபவர்கள் தங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து இணைந்துகொள்வார்கள். அதன் கீழே உள்ள Blog Archive என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கும் போஸ்ட் வரிசையாக இங்கு சேர்ந்துகொள்ளும்.






























16)  அடுத்து இங்கு குறிப்பிட்ட Design View என்பதை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய பிளாக்கில் வேறு ஆப்சன்களை சேர்ப்பது மற்றும் நீக்குவதற்க்கான பகுதிக்கு செல்லலாம்.





























17)  நீங்கள் Design View என்பதை கிளிக் செய்ததும் உங்களுக்கு இந்த ஆப்சன் திறந்துகொள்ளும். இதில் Posting, Comments, Settings, Design, Monetize, Stats, View Blog என்ற ஆப்சன்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் சென்று உங்களுக்கு விருப்பமான ஆப்சன்களை மாற்றிக்கொள்ளலாம்.

அடுத்து Add a Gadget என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கின் முகப்பில் வலதுபக்கம் வரும் Gadget களை போன்று புதிய Gadget களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். கடிகாரம், ஸ்கிரீன் சேவர், கால்குலேட்டர், மீன் தொட்டி போன்ற புதுமையான Gadjet களை உங்கள் பிளாக்கருக்கு கொண்டுவர இது உதவும். 





























18)  இனி இந்த Posting என்ற ஆப்சனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் புதிய போஸ்டுகளை உருவாக்க முடியும்.





























19)  இதுதான் நீங்கள் இங்கு Posting என்ற ஆப்சனை கிளிக் செய்த உடன் திறந்துகொள்ளும் தட்டு.































20) அடுத்து Comments என்ற இந்த ஆப்சனை கிளிக் செய்து உங்கள் பதிவுக்கு நண்பர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களை நீங்கள் பார்வையிடலாம்.





























21) அடுத்து Setting என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கின் தலைப்பை வேறு தலைப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

அதன் கீழே Description ல் உங்கள் தலைப்போடு சேர்ந்து சில பொன்மொழிகளையும் டைப் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்து Add your Blog to our Listing என்பதில் Yes என இருப்பதால் உங்கள் பிளாக் Google Blog List ல் சேர்ந்துகொள்ளும் இதன் மூலம் உங்கள் பிளாக் மற்ற நண்பர்களுக்கு எளிதில் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதில் No என்பதை நீங்கள் செலெக்ட் செய்தால் மற்றவருக்கு தெரியாமல் மறைந்திருக்கும்.































22)  அடுத்து Let Search Engines find your blog என்பதில் Yes என குறிப்பிட்டு இருப்பதால் Google Search ல் உங்கள் பிளாக்கில் நீங்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படியில் Search செய்து எவர் வேண்டுமானாலும் உங்கள் பிளாக்கை கண்டுபிடித்து உங்கள் பதிவுகளை பார்க்க முடியும். இதில் No என நீங்கள் மாற்றிவிட்டால் கூகிள் Search ல் மற்றவர்களுக்கு உங்கள் பதிவுகள் கிடைக்காமல் போய்விடும்.

அடுத்து Show Quick Edit Post என்ற இடத்தில் Yes இருப்பதால் நீங்கள் உங்கள் மெயில் மூலம் Log in ல் இருக்கும்பொழுது Design View வராமலேயே உங்கள் பதிவை விரைவாக Edit செய்ய முடியும். No என்ற மாற்றிவிட்டால் அது முடியாது.

அடுத்து Show Email Post Link என்பதில் Yes இருந்தால் உங்களின் ஒவ்வொரு போஸ்ட்டின் முடிவிலும் ஈமெயில் போஸ்ட் லிங்க் வந்துவிடும். இதன் மூலம் உங்கள் பதிவுகளை உங்கள் நண்பர்களுக்கு எளிதாக தெரியப்படுத்தலாம். No இருந்தால் அது முடியாது.

அடுத்து Adult Content என்ற இடத்தில் No இருப்பதால் உங்கள் தளம் பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் பார்க்கும் தகுதி உடையது என்பதை குறிப்பிடுகிறது.






























23) அடுத்து இந்த Select Post Editor என்பதில் Old Editor என்பதை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது புதிய வகை Update Editor என்பது வேண்டுமானால் மாற்றிக்கொண்டு உங்கள் தகவல்களை போஸ்ட் செய்யலாம்.





























24) இது Old Editor
































25) இது புதிய வகை Update Editor































26) அடுத்து இந்த Design View ஐ நீங்கள் கிளிக் செய்தால் Page Elements, Edit HTML, Template Designer என்ற ஆப்சன்கள் உங்களுக்கு கிடைக்கும். இதில் Page Elements என்ற ஆப்சன் தான் இங்கு நீங்கள் மேலே பார்க்கும் ஆப்சன்.  





























27) அடுத்ததாக உள்ள Edit HTML என்ற இந்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் இந்த HTML எழுத்துக்களை எடிட் செய்து சில ஆப்சன்களை மாற்றலாம். ( இந்த எழுத்துக்களை மாற்றுவதில் கொஞ்சம் கவனம் தேவை. நீங்கள் இதில் தேற்ச்சி பெற்றவராக இருந்தால் மட்டுமே இதனை எடிட் செய்யுங்கள். இல்லை என்றால் இதனை எடிட் செய்ய வேண்டாம். இதில் உள்ள எழுத்துக்களை மாற்றுவதில் தவறு ஏற்பட்டால் உங்களுடைய மொத்த பிளாக்கும் ஓப்பன் ஆவதில் பிரச்சனை ஆகிவிடும்.)





























28)  அடுத்து  Template Designer என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கின் முகப்பு டிசைனை வேறு டிசைனுக்கு மாற்றிக்கொள்ளலாம்.





























29)  அடுத்து இந்த Stats என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இதில் Over View என்பதன் மூலம் உங்கள் தளத்தில் ஒட்டு மொத்த நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து Post என்பதன் மூலம் உங்கள் பிளாக் போஸ்ட் தற்பொழுது, இன்று, ஒரு  வாரம், ஒரு மாதம், எல்லா நேரமும் நமது ஒவ்வொரு போஸ்டையும் நண்பர்கள் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து Traffic Source என்பதன் மூலம் உங்கள் பிளாக் தளத்திற்கு நண்பர்கள் எந்தெந்த தளங்கள் மூலம் வந்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து  Audience என்பதன் மூலம் உங்கள் பிளாக் தளத்தை எந்தெந்த நாட்டில் உள்ளவர்கள் எந்தெந்த தேடு இயந்திரம் மூலம் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.































30) இறுதியாக இந்த View Blog என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக் தளத்தின் முகப்பிற்கு நீங்கள் மறுபடியும் சென்றுவிடலாம்.

இந்த பாடத்தின் தொடர்ச்சியான சில முக்கிய ஆப்சன்களை பற்றிய விளக்கங்கள் அடுத்த பாடத்தில் தொடரும்.

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் ஓட்டு அளித்து இந்த பாடத்தை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்







17 comments:

  1. super useful post for beginners. amazing hard work. thanks for sharing

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  3. Useful post for beginners.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் ராஜ்.......

    ReplyDelete
  5. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே..

      Delete
  6. thanaks. very useful to me to start a blog.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே..

      Delete
  7. வணக்கம் கான் நன்பரே...
    மிகவும் அருமையான பதிவு உங்கலுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    இது போன்ற அருமையான பதிவுகலை தொடர்ந்து தருமாரு கேட்டுக்கொள்கிறேன்.
    இதை பார்த்து எனக்கும் ஒரு பிளாக்கர் உருவாக்க போகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ! அறிவு விக்னேஷ்.......

      Delete
  8. romba thanks, very good defenation
    S.Rajkumar

    ReplyDelete
  9. உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

    இதுபோல் நாங்களும் மேல ஓட விடுவது எப்படி கான் அண்ணா.

    பணம் கொடுத்தால் கூட இப்படி யாரும் சொல்லி கொடுக்கமாட்டர்கள்
    அப்படி இருக்கும் பொது உங்களுடய நேரத்தை மற்றவர்களுக்காக ஒதுக்கி
    தெரியாததை தெரிந்துகொள்ள வைக்கிறீர்கள்
    எனக்கு ஒரு வலையத்தளம் உருவாக்க நீண்டநாள் ஆசை அதை கான் அண்ணா நீங்கள் இப்பொது நிறைவேற்றி விட்டிர்கள் நன்றி. அண்ணா

    ReplyDelete
  10. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் Gunarj

    என்னுடைய இந்த பதிவில் நீங்கள் கேட்ட் கேள்விக்கு பதில் இருக்கிறது.

    http://tamilcomputertips.blogspot.com/2011/01/html.html

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  11. கான் அவர்களுக்கு நன்றி...
    தாங்கள் பாடம் நன்றாக இருந்த்து நனும் புதியதாக பிளாக்கர் உருவாக்கபோகிறேன்
    அனபுடன்
    பாலகணேசன்

    ReplyDelete
  12. கான் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. தங்கள் தகவலுக்கு நன்றி.... புதிய பிளாக்கரை உருவாக்கிவிட்டேன் .

    ReplyDelete
  14. நன்றி கான்

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்